Sunday, April 20, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? - பாடல் வீடியோ

எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு ? – பாடல் வீடியோ

-

“இந்திய விவசாயிகள் போராடுகிறார்கள். அரசு தலையிட வேண்டுமென்ற கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த இடத்தில் எல்லோருக்கும் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. இந்திய விவசாயிகள் போண்டியாகி அழியத்தான் வேண்டும். அதை தடுக்க முடியாது. ஏனென்றால், பொருளாதார வளர்ச்சி என்பதே இப்படித்தான் நடக்கும்.

அதிகமான உழைப்பாளிகள் தேவைப்படுகின்ற, மழையை நம்பி நடைபெறுகின்ற, உற்பத்தித் திறன் குறைந்த இந்த விவசாயத்தை தலைமுழுகிவிட்டு, விவசாயிகள் வெளியேறட்டும். தொழிற்சாலை வேலை அல்லது சேவைத்துறை வேலை என்பன போன்ற உருப்படியான வேலை ஏதாவது இருந்தால் அதைச் செய்யட்டும்.”

என்கிறது அமெரிக்காவிலிருந்து வெளிவரும் உலக முதலாளி வர்க்கத்தின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

இதையே வழிமொழிந்து ”நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யலாம்” என்கிறார் தமிழக பாஜக -வின் முன்னாள் தலைவர் இல.கணேசன். ஒரு படி மேலே சென்று கதிராமங்கலம், நெடுவாசல் பிரச்சினைகளைப் பேசினாலே வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறது எடப்பாடியின் அடிமை அரசு.

இந்த நிலையில் ”விவசாயத்தை அழிக்கும் காவி பரிவாரமே வெளியேறு !” எனப் போர்க்குரலாக ஒலிக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ”எங்க மண்ணு.. எங்க ஊரு.. மீத்தேன் எடுக்க நீ யாரு?” பாடல்.  பாருங்கள், பகிருங்கள்!

 

வீடியோவைப் பதிவிறக்கம் செய்ய

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்தப் பாடல் வீடியோ உங்களுக்குப் பிடித்திருக்கிறதா!
விவசாயிகளுக்கு ஆதரவான ம.க.இ.க பாடல்களை இசைக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க