உத்திரப் பிரதேசத்தின் தாத்ரி கிராமத்தில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக முகமது அக்லக் கொல்லப்பட்டு சற்றேறக்குறைய இரு வருடங்கள் ஆகிவிட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர்களில் தற்போது 15 பேருக்கு பிணை கிடைத்து வெற்றி வீரர்களாக சுற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையே இன்னும் விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இதற்கிடையில் இக்கொலை வழக்கின் முதன்மைக் குற்றவாளியான விஷால் ரானா என்பவரை அலகாபாத் உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. இவர் உள்ளூர் பா.ஜ.க தலைவரான சஞ்செய் ரானாவின் புதல்வராவார்.
ரானாவை விடுவித்த நீதிபதி பிரத்யூஷ் குமார், அவரை விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் அந்தந்த தேதிகளில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். கடந்த நான்கு மாதங்களில் மொத்தம் 12 பேர்களை உயர்நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது. இதில் சஞ்செய் ராணாவின் உறவினர்களான முதன்மைக் குற்றவாளிகளான ஷிவம், விஷால் இருவரும் அடக்கம். இது போக கடந்த வருடம் மூன்று இளம் குற்றவாளிகளும் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வழக்காடும் ராம் சரண் நகர் கூறும் போது, “நேற்றைய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு இன்னும் ஸ்ரீரி ஓம், விவேக், ருபேந்திரா ஆகிய மூவர் மட்டுமே சிறையில் இருக்கின்றனர். மற்றவர் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அடுத்த விசாரணை தேதியாக ஆகஸ்டு 9 குறிக்கப்பட்டிருக்கிறது” என்றார். அதன்படி அத்தேதியில் மிச்சமிருக்கும் மூவரும் விடுவிக்கப்படலாம்.
வீட்டிலிருந்த அக்லக்கை செப்டம்பர் 28, 2015 அன்று சுற்றி வளைத்த இந்துமதவெறிக் கும்பல் அங்கேயே அடித்தே கொன்றது. அருகாமை பகுதியான பிசாராவில் உள்ள கோவிலில் பசு ஒன்று கொல்லப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்ட உடனே இந்தக் கும்பல் கூடி நின்று அக்லக்கை கொன்றது.
நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தின் இன்றைய கதி இதுதான். பா.ஜ.க எனும் பேய் ஆளும் போது பிணம் தின்னும் சாத்திரங்கள்தான் நாட்டை ஆளும்!
செய்தி ஆதாரம் :
_____________
இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?
பசுவின் பெயரால் நாடு முழுவதும் நடைபெரும் தலித்துக்கள் முசுலீம்கள் மீதான பார்ப்பனக் கும்பலின் தாக்குதல்களை எதிர்க்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி