பணமதிப்பழிப்பின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளும் முன்பே மாடு விற்கத் தடை! நாடெங்கும் கால்நடைச் சந்தைகள் முடங்கின. விளைபொருளுக்கு விலை, கடன் தள்ளுபடி கோரிப் போராடிய மத்தியப் பிரதேச விவசாயிகளை சுட்டுக் கொன்றது பா.ஜ.க அரசு.
இதற்கிடையில் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மூலம் தாக்குதலைத் துவங்கியது மோடி அரசு. குஜராத் மண்ணிலேயே இலட்சக்கணக்கான வணிகர்கள், சிறு முதலாளிகள் ஜ.எஸ்.டி வரிவிதிப்பை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். தமிழகத்திலோ தீப்பெட்டி,, ஜவுளி, திருப்பூர் வட்டாரம், வணிகர் சங்கங்கள் என மாநிலமெங்கும் வரியை எதிர்த்து போராட்டங்கள்!
ரயில்வே தனியார்மயத்தின் தொடக்கமாக ரயில் நிலையங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. லாபத்தில் இயங்கும் ஏர் இந்தியா தனியார்மயமாக்கப்படுகிறது. திறன் நகரங்களுக்கான திட்டப்படி நகராட்சிகளின் நடவடிக்கைகள் தனியார்மயமாக்கப்பட்டு பங்குச் சந்தையில் சேர்க்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட 1925-ம் வருடத்தின் நூற்றாண்டுக்குள் இந்தியாவை ‘இந்து ராஷ்ட்டிரம்’ ஆக்க விரும்புகிறதாம் பார்ப்பன பாசிசக் கும்பல். ராஜஸ்தானில் மாடு வாங்கச் சென்ற தமிழக கால்நடைத்துறை அதிகாரிகள் இந்துமதவெறியர்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். பசுவின் பெயரால் கொலை செய்வதைக் கண்டிப்பதைப் போல மோடி நடித்து முடிப்பதற்குள் ஜார்க்கண்டில் மாட்டின் பெயரால் ஒரு கொலை நடக்கிறது.
இந்தித் திணிப்பு, பாடத்திட்டங்கள் இந்துமயமாக்கம், நீட் தேர்வு என கல்வித் துறையிலும் பா.ஜ.கவின் நிகழ்ச்சி நிரல்கள் அதிவேகமாக அமலாகின்றன. உ.பியில் யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கத்தில் தலித்துக்களும், முசுலீம்களும் அன்றாடம் தாக்கப்படுகின்றனர். மோடியின் குஜராத் டீக்கடை வரலாகிறது. தமிழகத்தின் கீழடி ஆய்வு குப்பைக் கூடைக்குள் எறியப்படுகிறது.
அனைத்தும் பார்ப்பனமயம், பன்னாட்டு நிறுவனமயம் என்று மாறி வரும் இந்த ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது இந்த சிறு வெளியீடு.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
மோடி அரசின் தாக்குதல்கள் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- சுற்றுலா வளர்ச்சி ; காதில் பூ சுற்றும் மோடி அரசு
- யோகி ஆதித்யநாத் சொகுசுப் பேர்வழியின் எளிமை நாடகம்
- ரஜினியின் காலா, பி.ஜே.பி.யின் வால்தான் – ஆதாரம்
- ஸ்மார்ட் சிட்டி : பாஜக-வின் புது அக்கிரகாரங்கள்
- மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
- ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி!
- பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர்
- ஆதித்யநாத்திற்கு கருப்புக்கொடி காட்டியதுபயங்கரவாதமாம் – என்னடா நாடு இது?
- துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் -SBI அறிக்கை
- தமிழக அதிகாரிகளை உதைத்த ராஜஸ்தான் RSS ரவுடிகள்
- பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தைத் திருமணங்கள் அதிகம்!
- மலம் கழிப்போரை “ஃபோட்டோ எடுக்கும் வக்கிரம் பிடித்த பாஜக அரசு
- மகிழ்ச்சித் துறைக்கு ஒரு மந்திரியாம் ம.பி. – பா.ஜ.க. அரசின் கேலிக்கூத்து
- ஜனாதிபதி வேட்பாளர் கோவிந்துவின் தலித் விரோதம் – ஆதாரங்கள்
- எண்ணுர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும்மோடி அரசு
- ஏழைகள் என்று வீட்டுச் சுவற்றில் எழுதுவது இராஜஸ்தானில் கட்டாயம்
- பங்குச் சந்தையில் திறன் நகரங்கள் : நகராட்சிகளும் இனி தனியார்மயம்
- பாஜக ஆட்சியில் கொலைகள் – குற்றங்கள் அதிகரிப்பது ஏன்?
- சபர்மதியில் தெறித்த மோடியின் எச்சில் காயும் முன் ஜார்கண்டில் கொலை
- மத்தியப் பிரதேசம் : பாகிஸ்தான் ஜிந்தாபாத்தின் உண்மைக் கதை
- தில்லி முதல் குமரி வரை ஜி.எஸ்.டி வரியை எதிர்த்து தீவிரமாகும் போராட்டங்கள்
- மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா?
- ஆதித்யநாத்தின் விவசாயக் கடன் தள்ளுபடி – ஒரு ஏமாற்றுத் தந்திரம்!
- குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின்
- EPW ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி-அதானி கூட்டணி
- கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ் வங்கி
- கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக
- அமர்த்தியா சென் ஆவணப்படத்திற்கு தடைபோடும் மத்திய அரசு
- கறி போடுவதால்தான் ஏர் இந்தியா நட்டத்தில் ஓடுகிறதா?
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்
![]() ₹20.00Read more |
![]() ₹20.00Read more |
![]() ₹20.00Read more |