Thursday, April 17, 2025
முகப்புஉலகம்ஆசியாசென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை...

சென்ற வார உலகம் : ஸ்பெயின் தீவிரவாத தாக்குதல் முதல் இந்திய மழை வெள்ளம் வரை !

-

காதிபத்தியங்களைத் தலைமையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புதாதன் இந்த உலகை ஆள்கிறது அல்லது மக்களின் வாழ்வை தீர்மானிக்கிறது! இந்த அமைப்பு தோற்றுவிக்கும் ஆக்கிரமிப்புப் போர்கள், அதன் எதிரொலியான தீவிரவாதத் தாக்குதல்கள், அழிக்கப்படும் உலக இயற்கை வளம், காட்டு வளம்,கனிம வளம், மக்களை இயற்கை பேரிடர்களிலிருந்து காக்க இயலாத மூன்றாம் உலக நாடுகள், ஏகாதிபத்திய குகைக்குள்ளேயே டிரம்பை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள்……….. சென்ற வாரத்தின் காட்சிகள் சில………

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த ஒரு தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக வைக்கப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் மலர்களுக்கு அருகில் மக்கள் நிற்கின்றனர். அந்தத் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள கிளெர்க்ஸ்டார்ப் நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு பண்ணையில் மயக்கமருந்து கொடுக்கப்பட்ட காண்டா மிருகமொன்றினை பணியாட்கள் பிடித்து வைத்துள்ளனர். உலகில் அழிந்துவரும் இனத்தைச் சேர்ந்த ஒன்றான அதை வேட்டையாடுவதில் இருந்து தடுப்பதற்காக அதன் கொம்பு நீக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் உள்ள கௌடாவின் கிழக்கு டமாஸ்கஸ் புறநகர் பகுதியான டின் – டர்மாவின் இடிந்த கட்டிடங்களின் மத்தியில் மிதிவண்டி ஒன்றை ஓட்டிக்கொண்டு கடந்து செல்லும் சிறுவன்.

வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் கதலிக்கு அருகே ஏற்பட்ட விபத்தொன்றில் தலைகீழாக கவிழ்ந்த கலிங்கா – உத்கல் விரைவு வண்டியின் இரயில்பெட்டிகளுக்கு அருகே இருப்புப் பாதையை பழுது பார்க்கின்றனர் தொழிலாளர்கள்.

பீனிக்ஸ் மாநாட்டு மையத்தில் ஒரு பிரச்சார பேரணியை தொடங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து அந்த மையத்திற்கு வெளியே மக்கள் நடத்தும் போராட்டம்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அன்கோல் ட்ரீம்லேண்ட் பூங்காவில் நடைபெற்ற விடுதலை நாள் கொண்டாட்டத்தின் போது சறுக்குமர, மிதிவண்டி போட்டியில் தங்களுடைய கூட்டாளி வெற்றி பெற்றதை எதிரொலிக்கும் ஒரு பிரிவு மக்கள்.

கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் வெள்ளத்தில் மூழ்கிய ஓர் ஊரிலிருந்து மீட்கப்பட்ட பின்னர் குடிக்க நீர் இல்லாமல் குழந்தை ஒன்று அழுகிறது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் லிபர்ட்டி சிலைக்கு மேலே தோன்றிய சூரிய கிரகணம்.

ஏமனில் உள்ள ஸனா நகரத்தில் சவூதி – கூட்டணி நடத்திய வான்வெளித் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களை சிதிலமடைந்த வீடு ஒன்றில் மக்கள் தேடுகின்றனர்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெறும் தீஜ் திருவிழாக் கொண்டாட்டங்களின் போது பசுபதிநாத் கோயில் வழிபாட்டிற்காக நேபாள இந்து பெண் பக்தர்கள் வரிசையில் நிற்கிறார்கள்.

நன்றி : அல்ஜசீரா

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க