சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், இன்று (04-09-2017) காலை மாணவர்கள் போராட்டத்தைத் துவங்கினர். அது குறித்த செய்திப்பதிவு ஒன்றை சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிட்டிருந்தோம். நேரம் செல்லச் செல்ல மாணவர்கள் கூட்டம் அதிகரித்தது.
இதைக் கண்டு மிரண்ட போலீசு – மாணவர்களைக் கலைந்து போகுமாறு கூறியது. பின்னர் புல்டோசரைக் கொண்டு வந்து அங்கு மாணவர்களுக்கு அருகில் ஓட்டிக்கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் கலைந்து செல்லாமல், அதனை எதிர்த்து எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புல்டோசரை பின் வாங்கிக் கொண்டு சென்றது. புல்டோசரைக் கொண்டு மிரட்டினால் மாணவர்கள் பயந்து கலைந்து சென்று விடுவார்கள் என்று கனவு கண்ட போலீசுக்கு மாணவர்கள் கொடுத்த செருப்படி இது!



மாணவர்கள் உற்சாகத்தோடு தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்!
————————————————————–
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி