Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅண்ணாமலைப் பல்கலை - தர்மபுரியில் கைது - போலீஸ் அராஜகம் !

அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !

-

னிதாவின் ‘படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (04.09.2017) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாணவர்களை கலைக்க ஜேசிபி வாகனத்தைக் கொண்டு வந்து மிரட்டிப் பார்த்தது காவல்துறை. மாணவரகள் கலைந்து செல்லாமல், எதிர்த்து நின்றனர். பின்வாங்கியது போலீசு. இன்றும் (05.09.2017) காலையில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்களைக் கலைக்க, முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் மற்ற மாணவர்களையும் மிரட்டிக் கலைக்க முயற்சித்து வருகிறது.


***

தர்மபுரியில் புமாஇமு தோழர்கள் கைது !

மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மோடி – எடப்பாடி அரசை கண்டிக்கும் விதமாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை போராட ஒருங்கிணைக்கும் வேலையை பு.மா.இ.மு. தோழர்கள் செய்து வந்தனர். அதற்காக கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தோழர்களைத் தடுத்தது கல்லூரி நிர்வாகம், அணிதிரளும் மாணவர்களை மிரட்டிக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், போலீசையும் அங்கு வரவழைத்தது.

அதன் பின்னர் தோழர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசு, தோழர்களைத் திரும்பச் செல்லும்படி மிரட்டியது. ஆனால் அதனை மறுத்து தங்களது கருத்தைத் தோழர்கள் வலியுறுத்திப் பேசவே தோழர்கள் மலர்கொடி மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தது போலீசு.

பகத்சிங் நினைவு நாளில் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ( கோப்புப் படம் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க