Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகும்பகோணம் - திருச்சியில் - தொடரும் மாணவர் போராட்டம் !

கும்பகோணம் – திருச்சியில் – தொடரும் மாணவர் போராட்டம் !

-

மாணவி அனிதாவின் படுகொலையைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று (05.09.2017) இரண்டாவது நாளாக தங்களது போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாணவிகளும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.

கும்பகோணம் வருமானவரித்துறை அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட  மாணவியரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஆனால் போலீசு மாணவர்களைப் பாதியில் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவ – மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணியில் மாணவியர்
பேரணியில் மாணவர்கள்
பேரணியில் மாணவர்கள்
சாலை மறியல்

***

திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் இன்று (05.09.2017) காலை மீண்டும் தங்களது போராட்டத்தை துவங்கினர். ஆனால் பாஜக -வின் மானவர் அமைப்பான ஏ.பி.வி.பி. -யினர் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வை ஆதரித்து மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளனர். எப்படியாவது கூட்டத்தை கலைக்க வேண்டும் என முயற்சி செய்தது ஏ.பி.வி.பி. கும்பல்.

இந்நிலையில் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி.-யினரை விரட்டியுள்ளனர். தற்போது புமாஇமு தோழர்கள் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் அரசியல் பற்றியும், ஏ.பி.வி.பி. காலிகளின் இந்துத்துவ அரசியலையும் அம்பலப்படுத்திவருகின்றனர்.

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் போராடும் மாண்வர்களுக்கு உணர்வூட்டும் விதமாக புரட்சிகர பாடல்களைப் பாடிவருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
_____________

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க