Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! - தொடரும் மாணவர் போராட்டங்கள்...

அனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

-

னிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் கடந்த  2017 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள்  புமாஇமு ஒருங்கினைப்பாளர் தோழர் நடேசன் தலைமையில் போராட்டத்தைத் தொடங்கினர். தோழர் வெங்கடேசன் தலைமையில் வகுப்பைப் புறக்கணித்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு அனிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தி, நீட்டுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

புதிய கல்விக் கொள்கையும், நீட்டும் வேறுவேறு அல்ல என்றும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்த்ப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து குலத்தொழிலைக் கொண்டு வரும் திட்டம் என்றும், ஆசிரியர் மாணவர் பெற்றோர்கள் ஒன்றிணைந்த கமிட்டியின் அதிகாரத்தை நிறுவுவதே இவற்றை ஒழிப்பதற்கான தீர்வாகும் என்றும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தன்னுரிமையைப் பாதுகாக்க தமிழினமே திரண்டெழு ! என்ற புமாஇமு -வின் துண்டுப் பிரசுரங்கள் போராட்டத்தின் போது வினியோகிக்கப்பட்டன. அதை மாணவர்கள் ஆர்வமாக வாங்கிப் படித்தனர். கல்லூரி ஆசிரியர்கள் சிலர் தோழர்களின் முழக்கங்கள் அருமையாக இருக்கின்றன என்று கூறினார்கள்.

போலீசு போராட்டத்தை முடிக்கச் சொல்லி மாணவர்களைக் கலைக்க முயன்றது. அதையும் தாண்டி மாணவர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் இப்போராட்டம் நடந்தது.

மேலும் கிருஷ்ணசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாவது நாளாக இன்றும் (06.09.2017)  புமாஇமு ஒருங்கிணைப்பில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மானவர்களைத் திரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு கொஞ்சம் கூட அடிபனியாமல் மாணவர்கள் தீரத்துடன் நின்று போராடினார்கள்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர்.

***

ருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்காக ஒருங்கிணைக்க முயன்ற புமாஇமு தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ஆகியோரை (05.09.2017) நேற்று காவல்துறை கைது செய்து மாலை வரை தடுத்து வைத்ததன் மூலம் நேற்றைய போராட்டத்திற்கு தடையை ஏற்படுத்தியது போலீசு.

இன்று 06.09.2017 காலை மீண்டும் புமாஇமு தோழர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு போராட்டம் தொடங்கப்பட்டது. மீண்டும் போலீசு மாணவர்களை அணி திரள விடாமல் தடுக்க முயன்றது. அதற்காக பீதியூட்டும் வேலைகளில் இறங்கியது.

புமாஇமு என்பது தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், போராட்டங்களால் உங்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறிக் கலைக்க முயற்சித்தது. கல்லூரி நிர்வாகமும் போலீசுடன் சேர்ந்து கொண்டு பிராக்டிக்கல் மார்கில் கைவைப்பேன் என மிரட்டியது. ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தர்மபுரி.

***

ண்ருட்டி அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் நீட்டுக்கு எதிராகவும்! மாணவி அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டும் 06.09.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.

***

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் நீட்டுக்கு எதிராக வகுப்பை புறக்கணித்து, அனைத்து பள்ளி – கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தொடர்ந்து போராடிவரும் மாணவர்களுடன் நேட்டிவ் பள்ளி மாணவர்களும், நீட்டுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து சுமார் 1000 -க்கும் மேற்ப்பட்வர்கள் சாலையில், பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் கண்டு கும்பகோணம் நகரமே போராட்ட உணர்வை பெற்றது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது  வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி