கோபம், அன்பு, கண்ணீர், இரக்கம் – இவையெல்லாம் மனித உணர்ச்சிகள். உணர்ச்சி என்பது எந்திரங்களுக்கோ விலங்குகளுக்கோ சாத்தியமற்றது. சமூக விலங்காக மாறியதன் காரணமாக மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது.
மேட்ரிக்ஸ் படத்தில் மனிதர்களின் உணர்ச்சிவயப்படுதலை முட்டாள்தனம் என்று எந்திர மனிதர்களான ரோபோக்கள் கேலி செய்யும். இன்றைக்கு நம்முடைய உணர்ச்சிகளை ஆளும் முதலாளித்துவ ஊடகங்கள், அந்த ரோபோக்களின் கூற்றை உண்மையாக்கி வருகின்றன.
ரேசன் அரிசிக்காக நடையாய் நடப்பவனை, ’கோடீஸ்வரன்’ ஆகலாம் என்று விஜய் டிவி கண் சிமிட்டி அழைக்கின்றது. பாத்ரூம் பாடகர்கள் பார் போற்றும் பாடகராகலாம் என ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி நம்மை நம்பவைக்கிறது. பக்கத்து வீட்டு படுக்கையறை விவகாரங்களை எட்டிப்பார்க்க அழைக்கிறது, ’சொல்வதெல்லாம் உண்மை’.
அமீர்கானின் ’சத்யமேவ ஜெயதே’ இந்தியாவின் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அரங்க நிகழ்வு என்று வாசகர் கடிதங்கள் குவிகின்றன. டி.வி சீரியல்களின் குடும்பச் சண்டைகளை ஆர்வத்துடன் பின்தொடரும் அனிச்சை விலங்குகளாக மக்களை மாற்றிவிட்டன தொலைக்காட்சிகள்.
அரசியலிலும் சமூகத்திலும் பல வில்லன்கள், வில்லிகள் நம்மை அழுத்திக் கொண் டிருக்கிறார்கள். பிக் பாஸ் ஜெயலலிதா செத்துப்போனதன் விளைவாக, அவரது வாரிசுகள் போடும் சண்டையில் நாடே நாறிக் கொண்டிருக்கிறது. இது நம்மைக் கொள்ளையிடும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தம். அரசியல் ஈடுபாடற்ற பாமரர்கள் விஜய் டிவியின் பிக் பாஸை பார்த்துக் கொண்டிருக்க, அரசியல் ஆர்வலர்கள் எல்லா சேனல்களிலும் அன்றாடம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’யார் எந்த அணிக்கு தாவுவார்கள்’ என்ற கேவலத்தில் தம்மையும் அறியாமல் மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.
எதார்த்தம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி ஷோ-க்கள், நம்மை மெய்யுலகில் இருந்து துண்டிக்கின்றன. மெய்யுலகில் நடைபெறும் அ.தி.மு.க கொள்ளைக்கூட்ட மோதலோ, மெல்ல மெல்ல ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறிவருகிறது.
நிழலை நிஜமாகக் கருதி கண்ணீர் விடுவதற்கும், நிஜத்தை நிழலெனக் கருதி சிரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம். மெல்ல மனிதத் தன்மையை மறந்து வருகிறோம்.
ரியாலிட்டி ஷோக்களின் உளவியலை ஆய்வு செய்து மக்களை எழுப்ப முயல்கிறது இந்த வெளியீடு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.
நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- கோடீஸ்வரன் மூளை தயார் முண்டங்கள் தயாரா?
- ரோல்ப் ஹாரிஸ் : குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
- என்.டி.டிவி – ஏ.சி நீல்சன் : கல்லாப் பெட்டிச் சண்டை
- சத்யமேவ ஜெயதே ! அமீர்கானின் SMS புரட்சி
- டிவி சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?
- சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்
- சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!
- பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா?
- ஒவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச்.ராஜா !
பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்
![]() ₹20.00Read more |
![]() ₹20.00Read more |