Monday, April 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! - தொடரும் மாணவர் போராட்டங்கள்...

அனிதாவுக்கு நீதி கிடைக்க நீட் தேர்வை ரத்து செய் ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

-

நீட் தேர்வை ரத்து செய்! சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

நீட் தேர்வை ரத்து செய்” என்று  மாணவர்களின் போர்க்குரல் தமிழகமெங்கும் பற்றிப் பரவுகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் பாஜக -வின் அடிமை எடப்பாடி அரசு திணறி வரும் சூழலில் தமிழகக் கல்லூரி வாயில்களில் போலிசைக் குவித்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

சென்னை கோவூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் நேற்று ( 11.09.2017) காலை 9.00 மணிக்கு கோவூர் துணை மின் நிலையம் அருகே போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நயவஞ்சகமான முறையில் “இங்கே போராட்டம் நடத்த கூடாது. கல்லூரிக்குள் சென்று போராட்டம் நடத்துங்கள்” என்று மாணவர்களிடம் கூறியது போலிசு.

“எங்கள் கல்லூரி பிரச்சனை என்றால் நாங்கள் கல்லூரிக்குள் போராடுவோம். இது பொதுப்பிரச்சனை. நாங்கள் இங்கே தான் போராடுவோம்” என்று மாணவர்கள் கூறியதால், உங்களை கைது செய்து FIR போட்டுவிடுவேன் என்று போலீசு மிரட்டியது.

கடந்த 4 -ம் தேதி திங்கட்கிழமையன்று இக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் முன்னணியாக இருந்த மாணவி பவித்ராவை நிர்வாகம் சஸ்பென்ட் செய்துள்ளது. இன்று நடந்த போராட்டத்தில் முன்னணியாக இருந்த மகாலிங்கம் என்ற மாணவரைக் கைது செய்து ஜீப்பில் ஏற்றியது போலிசு.

இந்த நடவடிக்கையின் மூலம் மாணவர்களை அச்சுறுத்தி கல்லூரி வளாகத்திற்குள்  அழைத்து சென்ற போலிசு, “நீங்கள் போராடுவது தவறு. உங்களுக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இல்லை. நீங்கள் போராடியதற்காக உங்களை கைது செய்ய முடியும். ஆனால் உங்கள் வாழ்க்கை பாழாகி விடக் கூடாது என்று விடுகிறேன்” என அறிவுரை கூறி ”இனிமேல் போராடினால் கைது செய்து விடுவேன்” என்று மிரட்டியுள்ளது.

கல்லூரி நிர்வாகமோ, “நீங்கள் போராட வேண்டும் என்றால் அனிதாவிற்காக மெழுகுவர்த்தி ஏந்தி பிரேயர் பண்ணுங்கள்” என்று கூறி, கல்லூரிக்கு விடுமுறை அளித்து மாணவர்கள் செல்லும் வழியெங்கும் போலிசை அனுப்பியது.

மாணவர்களோ, “நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள்  போராடுவோம்” மீண்டும் போராட்டம் நடத்துவது சம்பந்தமாக நாளை கல்லூரி வந்தவுடன் பேசி முடிவு எடுப்போம் என்கிறார்கள்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்

***

விருதை திரு.கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும்! நீட் தமிழகத்தை விட்டே விரட்டியடிக்கப்பட வேண்டும்! என்று தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்றும் (11.09.2017) வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும், உள்ளிருப்பு போராட்டமும் நடைப்பெற்றது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருதை.

***

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் !  மாணவி அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் !!  என்றும் தொடர்ந்து 6 – வது நாளாக (11.09.2017) விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் (RSYF) ஒருங்கிணைப்பில்  வகுப்பைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி