Monday, April 21, 2025
முகப்புபார்வைஇணையக் கணிப்புகருத்துக் கணிப்பு : பாஜக விரும்பும் தொலைக்காட்சிகள் எவை ?

கருத்துக் கணிப்பு : பாஜக விரும்பும் தொலைக்காட்சிகள் எவை ?

-

தொலைக்காட்சி நெறியாளர்கள் இரண்டு விசயத்தை விரும்புவார்கள். ஒன்று பிரபலமாக வேண்டும், இரண்டு நடுநிலையாளராக அங்கீகரிக்கப்பட வேண்டும். பிரபலமாவதற்கு பரபரப்பான தலைப்புக்களில், பிரச்சினைக்குரிய விருந்தினர்களை வைத்து ஏட்டிக்கு போட்டியாக கேட்டால் போதும். நடுநிலைமை என்று வந்தால் அது பொதுப்புத்தியை மீறக்கூடாது என்பது போக வேறு கவலை இல்லை. இன்றைக்கு பாஜக -வும், முன்பு ஜெயாவும் இவர்கள் நினைக்கின்ற பொதுப்புத்தியை தீர்மானிப்பதாக இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட தலைப்புக்கு உட்பட்டு விருந்தினர்களிடம் அதுவா இதுவா, அதுவென்றால் இது, இதுவென்றால் அது என்று கேட்பார்கள். பாஜக நிர்மலா சீதாராமன் என்றால் அடக்கிவாசிப்பதும், அய்யோ பாவம் நபர்கள் என்றால் சீறுவதும் இவர்களது சுபாவம்.

டெங்கு கொசு கேரளாவிலிருந்து வந்தது என்று அதிமுக அமைச்சர் சொன்னால்அது எப்படி வந்தது?… என்று கூட கேட்பார்கள். இவையெல்லாம் கேட்பதற்கே அருகதை அற்ற முட்டாள்தனம் என்பது அவர்களுக்குத் தெரியாது. குறிப்பிட்ட செய்தி, நிகழ்வுகளில் மக்கள் நலன் என்பதே ஒரு பத்திரிகையாளர் கொண்டிருக்க வேண்டிய சார்பு நிலை என்பதை இவர்கள் நடுநிலை தவறல் என்று நினைக்கிறார்கள். போகட்டும்!

ஒரு மனிதன் தன்னைப் பற்றி என்ன நினைக்கிறான் என்பதிலிருந்து அவனை – அவளை மதிப்பிட முடியாது. அவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களை மதிப்பிட முடியும். இங்கே அந்த மற்றவர்கள் பாஜக – ஆர்.எஸ்.எஸ் – இவர்கள் சார்பு ‘சமூக ஆர்வலர்களாக’ இருக்கும் பட்சத்தில் விடை என்னவாக இருக்கும்? அதற்கு தனிப்பட்ட நெறியாளர்களாக இருந்தால் பட்டியல் பெரிதாக இருக்கும் என்பதால் ஆர்.எஸ்.எஸ் அபிமானம் பெற்ற தொலைக்காட்சி என்பதாக மாற்றிக் கொள்வோம்.

கேள்வி இதுதான்.

விவாதங்களில் பாஜக-வினர் பங்கேற்க விரும்பும் தமிழக செய்தி தொலைக்காட்சிகள் எவை?

  • தந்தி டிவி
  • புதிய தலைமுறை
  • நியூஸ் 7 தமிழ்
  • நியூஸ் 18 தமிழ்
  • சன் செய்தி
  • கலைஞர் செய்தி
  • பாலிமர் செய்தி
  • மக்கள் தொலைக்காட்சி

குறிப்பு: பாஜக-வினர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிகளை விரும்பக்கூடும் என்பதால் ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகளை நீங்கள் தெரிவு செய்யலாம்.

இறுதியில் புகழ்பெற்ற நெறியாளர்கள் அடங்கிய தொலைக்காட்சிகளின் ‘நடுநிலைமை’ என்ன என்பதை கண்டுபிடித்து விடலாம்! வாக்களியுங்கள்!

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு  நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க