Wednesday, April 16, 2025
முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !

அந்தக் காரின் விலை 22 கோடி ரூபாய் !

-

இதுதான் இன்றைய உலகம்

தீபாவளி மழையில் வெளியே செல்வதற்கு மக்கள் யோசிக்கிறார்கள். நனைவதோடு, சாலைப் பள்ளங்களின் விபத்துக்கள், மழையால் ஏற்படும் நெரிசல் போக்குவரத்து காரணமாக வீட்டில் முடங்க வேண்டிய கட்டாயம். நகரப் பேருந்தோ இல்லை இரு சக்கர வாகனமோ இருந்தாலும் மழையில் எதிர் நீச்சல் போடுவது சிரமம்.

கார்களின் நெரிசலில் தத்தளிப்பது சென்னையின் அன்றாடக் காட்சிகளில் ஒன்று. அனேக கார்களில் ஒரிருவரே பயணிக்கிறார்கள். அன்றைக்குரிய கோட்டாவை முடித்தால்தான் ஊக்கத்தொகை கிடைக்குமென்பதால் ஓலாக்களும், உபர்களும் பறக்கின்றன அல்லது காத்துக் கிடக்கின்றன. இதன்றி வீட்டில் இடமின்றி தெருவில் நிறுத்தி வைத்திருக்கும் கார்-காரர்கள் சென்னையில் அதிகம்.

ஆனால் தங்க விமானப் படிக்கட்டில் மன்னர் இறங்கும் சவுதி மற்றும் வளைகுடாவின் நிலைமை வேறு! அங்கே கார்கள் என்பது பயணத்திற்கானதல்ல. அந்தஸ்தை பறைசாற்றுவது!

அரபுலகின் முதல் சூப்பர்கார் என அழைக்கப்படுகிறது லைக்கன் ஹைப்பர் பி போர்ட் கார் – Lykan HyperPport. லெபனானில் இருக்கும் டபிள்யு மோட்டார்ஸ் நிறுவனம் இதை உருவாக்கியிருக்கிறது – இல்லை செதுக்கியிருக்கிறது.

இதன் முகப்பு விளக்குகளில் வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. டைட்டானியம் எல்டி தகடுகளில் மொத்தம் 420 (15 காரட்) வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. வாங்குவோரின் விருப்பத்திற்கேற்ப விதவிதமான வைரக்கற்கள் விதவிதமான வண்ணங்களில் கிடைக்கும்.

இரட்டை டர்போ 3.8 லிட்டர் ஆறு குழாய் என்ஜின் மூலம் 780 குதிரைச் சக்தி வெளியாகும். மூன்றே வினாடிகளில் அறுபது மைல் வேகத்தை (96) கி.மீ) அடையலாம். அதிக பட்சம் 240 மைல்கள் (386 கி.மீ) வேகமெடுக்கிறது இந்த கார்.

உலகின் அதி உயர் விலைக் கார்களில் இதுவும் ஒன்று என மார் தட்டுகிறார்கள், அரபு ஷேக்குகள். விலை என்ன தெரியுமா? 22 கோடியே ஆறு லட்சத்தி 43 ஆயிரம் ரூபாய்.

அந்த மார்தட்டலைப் பார்க்கும் போது இங்கே மூச்சு விடக்கூட முடியாமல் ஒரு பேருந்தில் மக்கள் பயணிக்கிறார்கள். இந்த பேருந்து இந்தியாவிலோ அல்லது பாகிஸ்தானிலோ இல்லை வங்கதேசத்திலோ பல இடங்களில் பார்க்க முடியும். விடுமுறை நாட்களில் தோளில் தொங்கும் பைகளுடன் இந்த மனிதக் கூட்டம் பெரும் அபாயத்துடன் பயணிக்கின்றது. தீபாவளி நாட்களில் திருப்பூரில் இருந்து மதுரை செல்லும் பேருந்துகளில் மக்கள் பயணிப்பதற்கு பெரும் போரே நடத்த வேண்டியிருக்கும்.

மேற்கண்ட அரபு காரின் விலையில் எத்தனை பேருந்துகள் வாங்க முடியும் தெரியுமா?

150 பேருந்துகள் வாங்க முடியும். இதுதான் இன்றைய உலகின் அந்தஸ்து ஆற்றும் அறம்!

செய்தி ஆதாரம் :

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி