தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் மக்கள் கொத்து கொத்தாக செத்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் செய்து தராது, தனியார் மருத்துவனையினர் கொள்ளையடிக்க அரசே வழிவகை செய்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டில் டெங்குவால் 200-க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இந்நிலையில் கந்து வட்டிக் கொடுமை தமிழ்நாட்டில் நீண்ட கால பிரச்சனையாகவே உள்ளது.

சமீபத்தில் திருநெல்வேலியில் இசக்கிமுத்து குடும்பமே கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்துகொண்டது நாடே அறியும். இதற்கு காரணமான மாவட்ட ஆட்சியர், நெல்லை மாவட்ட SP மற்றும் SI ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு கந்தவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
மேற்கண்ட செயலை கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் சார்பாக சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாக கரூரிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இந்நிலையில் 27.10.2017 அன்று விடியற்காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி மாவட்ட செயலாளர் தோழர் பாக்கிராஜ் அவர்களை கரூர் நகர காவல் நிலைய போலீசார் மணிவண்ணன் மற்றும் உடன் வந்த போலீசார் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து வரச்சொன்னதாக கூறி வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்று, வேனில் ஏற்றினர். ஏன் எதற்கு என கூறாமல் கரூர் நகர காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
பின்னர் கரூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜை தொடர்புகொண்டு எதற்காக கைது செய்துள்ளீர்கள், கரூர் நகரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் விளம்பர பலகை, சுவரொட்டி என விளம்பரம் செய்யும் பொழுது விதிமீறல்கள் ஏதும் நடக்கவில்லையா? மக்கள் அதிகாரம் சுவரொட்டி ஒட்டியது மட்டும் விதிமீறலா? என்றும், உங்களது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் மக்கள் அதிகாரத்தினர் மீது தொடர்ந்து பொய் வழக்கு போடுகிறீர்கள் இது சரியா? என வழக்கறிஞர் விளக்கம் கேட்டபொழுது, உரிய பதில் கூறாமல் இணைப்பை துண்டித்துள்ளார் ஆய்வாளர் பிருத்திவிராஜ்.
பின்னர் காவல் நிலையம் சென்று பாக்கியராஜை பார்க்க வேண்டும், மேலும் அவருக்கான சட்ட ஆலோசனை வழங்க வேண்டும் என்று கூறியபொழுது, மேற்படி ஆய்வாளர் பிருத்திவிராஜ் விசாரணை செய்து வருவதாகவும், காத்திருக்கும்படி கூறியதுடன் இறுதிவரை தோழரை பார்க்க அனுமதிக்கவில்லை. பிறகு தோழரை கரூர் குற்றவியல் நீதிமன்றம் எண்.1 -ல் ஆஜர்செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில் கரூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பிருத்திவிராஜ் மற்றும் மாவட்ட காவல் துறையினர் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதும், தொடர்ந்து பொய் வழக்கு போடுவதும் வாடிக்கையாக உள்ளது. கரூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தியபோது மக்களே காறித்துப்பிவிட்டனர். இது தான் அரசின் நிலைமையாக உள்ளது.
இவர்களின் அடக்கு முறைக்கு மக்கள் அதிகாரம் ஒருபோதும் அஞ்சாது. அடுத்த கட்டமாக இவர்களின் அரசியல் அராஜகத்திற்கு முடிவு கட்டும் விதமாக அடுத்த கட்ட போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆயத்தமாகி வருகிறது.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கரூர். தொடர்புக்கு – 97913 01097.
_____________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
- உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி