நடிகர் சசிக்குமாரின் உறவினரும், தயாரிப்பாளருமான அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். தனது மரணக் குறிப்பில் மதுரை அன்புச் செழியன் எனும் கந்து வட்டி மாஃபியாவின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த கந்து வட்டி ரவுடி தொடர்பாகவே இயக்குநர் மணிரத்தினத்தின் சகோதரர் ஜி.வெங்கடேஸ்வரன் 2003 -ம் ஆண்டு தற்கொலை செய்தார்.

அதன் பிறகு ரம்பா, தேவயானியை மிரட்டினார், அஜித்தை ஒரு அறையில் பூட்டி வைத்தார் என்று நிறைய தகவல்கள் வந்தாலும் அன்புச் செழியனை அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அ.தி.மு.க அமைச்சர்கள், சாதி பலம், போலீசு, நீதித்துறை, ஊடக முதலாளிகளுக்கு இறைக்கப்படும் பணம் ஆகியவற்றால் அன்புச்செழியன் செல்வாக்கோடு இருக்கிறார்.
சினிமாத்துறையில் இருக்கும் நெறிமுறையற்ற முறையில் பணம் சம்பாதிக்கும் நிலையும் இதற்கு காரணம். சந்தையில் வெற்றிகரமாக இருக்கும் நட்சத்திரங்களுக்கு அதிக பணம் கொடுத்து அடுத்த படத்திற்கு ஒப்பந்தம் செய்யும் தயாரிப்பாளர்கள் அந்த அதிகப் பணத்தை இத்தகைய கந்து வட்டிக்காரர்களிடமே வாங்குகிறார்கள். சினிமா திரையரங்குகளில் அதிக விலையில் டிக்கெட் விற்கப்படுவதற்கும் இதுவே காரணம்.
இந்நிலையில் கந்து வட்டி தடைச் சட்டமே இந்த அன்புவின் அடாவடியை அடுத்து கொண்டு வரப்பட்டாலும் அடாவடிகள் தொடர்கின்றன.
மதுரை அன்புச்செழியனை சிறையில் அடைக்க தடுப்பது யார்?
- அ.தி.மு.க அமைச்சர்கள்
- பெரும் ஊதியத்தை வாங்கும் நட்சத்திர நடிகர்கள்
- ஊழல் போலீசு, நீதிமன்றம்
- நட்சத்திர நடிகருக்கு கொட்டிக் கொடுக்கும் தயாரிப்பாளர்கள்
- அன்புச் செழியனை வெளிப்படையாக கண்டிக்க முன்வராத சினிமா பிரபலங்கள்
(பதில்களில் மூன்றைத் தேர்ந்தெடுக்கலாம்)
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!
சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி