Monday, April 21, 2025
முகப்புசெய்திநேரலைLive : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !

Live : குமரி மீனவர்கள் துயர் துடைக்க – களத்தில் இறங்குவோம் !

-

கி புயல் குறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதிலும் சரி, புயலில் சிக்கித் தவித்த மீனவர்களைக் காப்பதிலும் சரி, தமிழக அரசும், மத்திய அரசும் மெத்தனப் போக்கையே கடைபிடித்து வருகின்றன.

அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, மீட்பு நடவடிக்கையை துரிதப் படுத்தவும், தேடுதல் பணிக்கு அதிக கப்பற்படைக் – கப்பல்களையும், விமானங்களையும் அனுப்பக் கோரி மீனவர்கள் குழித்துறை, குளச்சல், தூத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (08-12-2017) சென்னையில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மீனவர்கள் தவிர பல்வேறு அமைப்புகளும் மீனவர்களை துரிதமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன.

தமிழகமெங்கும் மீனவர்கள் போராட்டம் குறித்த களச் செய்திகளை இங்கு உங்கள் பார்வைக்கு உடனுக்குடன் தருகிறோம்.

முந்தைய பதிவுகளைப் பார்க்க, பதிவின் முடிவில் “Load More entries…” என்ற Button-ஐ அழுத்தவும்


 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க