Monday, April 21, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !

ஆதார் பாதுகாப்பு ஓட்டைகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கை மீது வழக்கு !

-

தார் பற்றிய விவகாரத்தில் நாட்டு மக்களின் அனைத்து தகவல்களும் எப்படி ஒரு பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது என்பது குறித்து தொடர் விவாதங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.

சமீபத்தில் 500 ரூபாய் கொடுத்தால் இலட்சக்கணக்கான ஆதார் தகவல்கள் கிடைக்கும் ! என்பதை ட்ரிபியூன் பத்திரிக்கை அம்பலப்படுத்தியிருந்தது. அது குறித்து வினவு தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் இந்திய தனிச்சிறப்பான அடையாள அட்டை ஆணையம் – UIDAI (உதய்) ஆதார் தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது என தொடர்ந்து கூறி வந்தது. அதற்கும் மேலாக பொய் செய்திகளின் பிறப்பிடமான பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்ரிப்யூன் இந்தியா வெளியிட்ட செய்தி பொய்யானது எனக் கூறியது.

தற்போது UIDAI (உதய்) ஆனது ஆதார் தகவல்கள் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பதை அம்பலப்படுத்திய ட்ரிப்யூன் பத்திரிக்கை மற்றும் அதன் செய்தியாளர்கள் ரச்சனா கைரா (Rachna Khaira) மீது டெல்லி சைபர் பிரிவு போலீசார் மூலம் வழக்கு போட்டுள்ளது. அவர்கள் மீது சைபர் குற்றம் மற்றும், ஆள்மாறாட்டம் ( பிரிவு – 419), ஏமாற்றுதல் – மோசடி செய்தல் ( பிரிவு – 420, 468 ) மற்றும் போலி ஆவணங்களைக் கொண்டு மோசடி செய்தல் ( பிரிவு – 471) என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர்.

மேலும் அந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ரச்னா தொடர்பு கொண்ட ஏஜண்டுகள் என அணில் குமார், சுனில் குமார் மற்றும் ராஜ் ஆகியோரின் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து UIDAI (உதய்) அதிகாரி பி.எம். பட்நாயக் கூறுகையில் ட்ரிப்யூன் பத்திரிக்கை வெளியிட்ட செய்தியை முகாந்திரமாகக் கொண்டு தான் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளோம் என்கிறார். அப்பத்திரிக்கையின் நிருபர் அனாமதோய நபர்களிடமிருந்து வாட்ஸ்-ஆப் மூலம் ஆதார் தகவல்களை உள்நுழைந்து பார்த்துள்ளார், எனவும் கூறியுள்ளார்.

அதன் பின்னர் UIDAI (உதய்) சமீபத்தில் வெளியிட்ட செய்தியில் “ஒரு குற்றத்தைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் வழக்கு போட்டுள்ளோம். முழு விசாரணைக்குப் பின்னர் தான் குற்றவாளிகள் யார் என அடையாளம் காணப்படும் அதுவரை வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாலே அவர்கள் குற்றவாளிகள் ஆக மாட்டார்கள்” என சட்ட விளக்கம் கொடுத்துள்ளது.

மேலும் “நாங்கள் பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிக்கை சுதந்திரத்தை மதிக்கிறோம். ஊடகங்களையும், அம்பலப்படுத்துவோரையும் (விசில் ப்லோயர்) ஒடுக்குவது எங்கள் விருப்பம் கிடையாது” என ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கதையாக கூறியுள்ளது UIDAI (உதய்).

பாஜக -வினர் அரசின் குறைகளை விமர்சித்தால் உடனே பாகிஸ்தானுக்கு ஓடு, தேசவிரோதி என முத்திரை குத்துவதற்கும், UIDAI (உதய்) –யின் இந்த வழக்கிற்கும் வேறுபாடு ஏதும் காண முடிகிறதா…?

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க