பேருந்தின் கடைசி சீட் என்பதால் 6 பேர் அமர்ந்திருந்தோம். பீகாரியுடன் எனக்கு பக்கத்திலிருந்த 30 வயது மதிக்கத்தக்க தமிழர் ஹிந்தியில் உரையாடிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் அதன் அர்த்தங்களை கேட்டேன் அவரும் மொழிபெயர்த்தார்.

நீங்க எந்த மாநிலம்?
பீகார்…..
என்ன ஊர்?
சேக்பூர்…..
அங்க என்ன தொழில்?
விவசாயம் போதிய வேலையில்லை….
என்ன படிச்சிருக்க?
10 வது……
நான் குறுக்கிட்டு சில கேள்விகள் கேட்கிறன் பதில் கேட்டு சொல்லுங்கன்னு கேட்டேன்… நம்ம தமிழர் ஒப்புக்கொள்ள…..
நம்மாளு ஏற்கனவே கேட்ட கேள்விகளால் பீகாரி சலிப்படைந்திருந்தான்!
நான் : இங்குள்ள சில அரசியல்வாதிகள் எங்க மாநிலம் முன்னேறவில்லைன்னு சொல்லிட்டு இருக்காங்க அதனால் ஒங்க ஊர் பொருளாதா நிலவரம் பற்றி சில கேள்வி கேட்கிறேன்னு , அதுக்கு மட்டும் பதில் சொல்லுன்னு கேட்கச் சொல்ல….
நம்ம மொழிபெயர்ப்பாளர் ஜெர்க் ஆகி “அண்ணே எனக்கு அந்த அளவுக்கெல்லாம் இந்தி தெரியாது இவன் ரொம்ப கொச்சை இந்தி பேசறான் புரியலன்னு” ஜெகா வாங்க…..மொழிபெயர்த்தவரின் நண்பர் (அசல் திராவிட வித்து) எனக்கு மொழிபெயர்த்து உதவ வந்தார்!
பிறகு பீகாரியிடம் என் முந்தைய கேள்வியை மொழிபெயர்க்க…..
அவனும் உற்சாகமாக பதில் சொல்ல ஆரம்பித்தான்…….
இந்திக்காரன் : நீங்க எந்த கேள்வியும் கேட்க வேணாம் வித்தியாசங்கள்தானே நானே சொல்றேன்……னு ஆரம்பித்தான்….!!!
எங்க மாநிலத்துல நகர்ப்புறங்கள்லயே வேலைவாய்பில்லாத நிலை அதிகம். ஆனா இங்க நகரங்கள்ள இருந்து 30கி.மீ தொலைவிலுள்ள குக்கிராமத்தில் நாங்க 80 பேர் வேலை செய்கிறோம். நகரப்பகுதிகளில் 1000க்கணக்கானோர் வேலை செய்கிறோம்…..எங்க ஊர்ல 8 வதுல படித்த பாடத்தை இங்க 1 -வது படிக்கும் அவன் முதலாளி பையன் தனியார் பள்ளியில் பாடமாக படிக்கிறானாம்.
தனியார் பள்ளியிலும் அரசுப்பள்ளியிலும் ஒரே பாடம்தான் அதாவது சமச்சீர் கல்வி என நான் இடைமறித்து சொல்ல அவன் கண்களில் ஆச்சர்யம் தெரிந்தது!!!
இங்க கிராமத்தில் இருக்கும் ரோட்டின் தரம்தான் அங்க நகரத்திலேயே இருக்குமாம்…இங்கு எங்க பார்த்தாலும் நான்கு வழி சாலைகளாக உள்ளது, எங்க மாநிலத்தில் ரொம்ப ரொம்ப குறைவு….
அங்க காசிருந்தால்தான் மருத்துவம். அரசுமருத்துவமனைக்கு செல்வதற்கு பதில் நேரடியாக சுடுகாட்டிற்கே சென்று விடலாம்னு விரக்தியா சொல்லி சிரிக்கான்…..
அவன் பேர் திரிலோக்தாசனாம்!! இவன் பிறந்த போது இவன் குடும்பத்தார் திரிலோக்ராஜ்னு பெயர் வைத்ததற்காக இவன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தாராம் ஊர்தலைவர். அதனால் திரிலோக்தாசன்னு பெயரை மாற்றி வைத்தாங்களாம்!
பரவாயில்லைங்க இங்க ஊர்தலைவர்னுலாம் யாரும் இல்லை இங்கு பாதுகாப்பான வாழ்க்கை. உழைக்கனும்ங்கற எண்ணமிருந்தால் போதும்ங்க எப்படியும் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாம்…… இங்கு வாழ குடுத்து வெச்சிருக்கனும்ங்க. எங்க பார்த்தாலும் காலேஜா கட்டி வெச்சிருக்கீங்க!!! இங்க கல்வி,பொருளாதாரம் வளர்ச்சியில்லைன்னு சொல்றவன்களைலாம் வாய்ல குத்தி பல்லை பேத்து கையில குடுங்கன்னு அவன் சொல்ல!!!
இங்க என்ன ஒரே பிரச்சனையின்னா ரயில்ல ஏறவங்க ரயில் நின்னாதான் இறங்கறாங்க. ஊர்வழியா ரயில் போனா செயின் இழுத்து ரயில நிறுத்தி இறங்கமாட்டேங்கறாங்க !
(சிரிக்கிறான்)
முதல்ல மொழிபெயர்த்த “நாம் தமிழர்” எங்கடான்னு பார்த்தா பயபுள்ள 4 -சீட் தள்ளி போய் உட்காந்திடுச்சி….
அவனும் எவ்வளவோ சொல்ல தயாராக இருக்க……
கேட்க நமக்கும் ஆசையாக இருக்க இறங்க வேண்டிய என் ஊர் வந்ததால் பஸ்சிலிருந்து இறங்கினேன்!!!
-Kathiravan Soundhararajan ஃபேஸ்புக் பதிவுலிருந்து.