Monday, April 21, 2025
முகப்புசெய்திஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

-

பத்திரிக்கையாளர் சந்திப்பு

19.01.2018
சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்

ஜேப்பியார் பொறியியல் கல்லூரித் தொழிலாளர் நிரந்தரப் பணியிடத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக காண்டிராக்ட் முறைக்குத் தள்ளிய உயர்நீதிமன்றம்! விசாரணை இழுத்தடிப்பது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு !

வணக்கம்.

செம்மஞ்சேரியில் இயங்கிவரும் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் சுமார் 16 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்துள்ள 96 தொழிலாளர்கள் தொழிற்சங்கம் தொடங்கி தொழிற்தாவா ஏற்படுத்தியமைக்காக நிர்வாகத்தால் அனைத்துத் தொழிலாளர்களும் ஒரு வாய்வழி உத்தரவில் தடாலடியாக வேலைநீக்கம் செய்யப்பட்டு அந்தப் பணிகள் அனைத்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் செய்யப்படுகிறது.

இதன் மீது தொழிலாளர் ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் ஆணையங்கள் முன்பு நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்துறை ஆய்வாளரகமும், தொழிலாளர் துறை ஆணையரகங்களும் நிர்வாகத்தின் செயல் சட்டவிரோதம் என அறிவித்துள்ள நிலையில், உயர்நீதிமன்றம் நிரந்தரத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தடைவிதித்து ஒப்பந்தத் தொழிலாளர் வேலைசெய்ய அனுமதித்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட 96 தொழிலாளர்கள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தும் இந்த வழக்கு நயவஞ்சகமாக விசாரணைக்கே வராதபடி தொடர்ந்து நீதிமன்றத்தால் அலைக்கழிக்கப்பட்டுவருகிறது. இது சம்பந்தமாக தொழிலாளர் குடும்பத்துடன், வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கத்தின் ஆலோசகர் தோழர் இல.பழனியும், சிறப்புத் தலைவர் தோழர் சி.வெற்றிவேல் செழியனும் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்க உள்ளனர். தங்களது செய்தி நிறுவனம் மூலம் தாங்கள் கலந்துகொண்டு இந்த செய்தியை வெளியிடதங்களை அன்புடன்கோருகிறோம்.

தங்கள் உண்மையுள்ள,
கோ.பச்சையப்பன்,
பொதுச் செயலாளர்.

நாள்    : பின்னர் அறிவிக்கப்படும் 
இடம் : சென்னை பத்திரிக்கையாளர் சங்கம்

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
சென்னை.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க