Wednesday, April 16, 2025
முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைஆண்டாள் பிரச்சினை : விழித்தெழும் தமிழகம் ! ஃபேஸ்புக் பதிவுகள் !!

ஆண்டாள் பிரச்சினை : விழித்தெழும் தமிழகம் ! ஃபேஸ்புக் பதிவுகள் !!

-

வைரமுத்து பேசிய ஆண்டாள் உரையை வைத்து ”வைரமுத்து ஒரு இந்து மத விரோதி”, “வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும்” என எச்.ராஜா தனது குலையைஆரம்பித்து வக்கிரத்துடன் வைரமுத்துவை ‘தாசி மகன்’ என்றும் ஏசினார்.

தமிழகத்தில் இந்துமதவெறியை எப்படியாவது வளர்த்துவிட வேண்டும், அதை வைத்து கட்சி செல்வாக்கை வளர்க்க வேண்டுமென இப்பிரச்சினையை முன்வைத்து கடும் வெறிப் பிரச்சாரத்தை செய்கிறது பார்ப்பனிய இந்துமதவெறிக் கும்பல்.

நெல்லையில் ஜீயர்களை உட்காரவைத்து, முன்னாள் அதிமுக அடிமை மற்றும் இந்நாள் பாஜக அடிமையுமான நயினார் நாகேந்திரன், வைரமுத்து நாக்கை அறுக்க வேண்டும், ஹிந்துமதத்தை எதிர்ப்பவனைக் கொல்லவேண்டும் என கூவினார். இந்நேரம் பல இலட்சம் பேர் திரண்டிருக்க வேண்டாமா எனக் குமுறினார்.

ஆனால் இதுவரை இந்து எழுச்சி என்பது பார்ப்பனர்களின் அக்ரகாரத்தைத் தாண்டி வேறு எங்கும் செல்ஃப் எடுக்கவில்லை. மாறாக, ஆண்டாளின் பாடல் விளக்கமும், தேவதாசி முறையின் வரலாற்றுப் பின்னணியும் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கிறது.

பொங்கி எழும் சங்கிகளை முகநூலில் ’வைத்துச்’ செய்திருக்கிறார்கள், தமிழர்கள் ! அதனை தொகுத்து தருகிறோம். இது முதல் பாகம்.

Villavan Ramadoss

வைரமுத்து நாக்கை அறுத்தா 10 கோடி கொடுப்பானாம்…
ஏன் நாயே உனக்கு அறுக்க தெரியாதா? அதென்ன பேசுற எல்லா சங்கி நாயும் காசுகொடுக்குறேன்னு மட்டும் சொல்லுது!!
வீரத்தை வாடகைக்கு வாங்குற சொம்பைப் பயலுங்களா.

******

இந்திரா பார்த்தசாரதி

ஆண்டாளும், அசிங்க அரசியலும்

ஆங்கிலத்தில் ‘missing the wood for the trees’ என்ற சொல்வழக்கு உண்டு. அதாவது, ஒரு செய்தியில், எது முக்கியமோ அதை விட்டு விட்டு, தேவையில்லாததை மிகைப் படுத்துதல் என்று பொருள். அது போல்தான், இப்பொழுது ஆண்டாளைப் பற்றி நடந்து வரும் விவாதங்கள்.

ஆண்டாளைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து கூறிய தகவல் தவறானது என்று அவர் கூறியதை எதிர்த்து வாதாடலாமே தவிர, அவர் ஆண்டாளை எப்படி அவமானப்படுத்தினார் என்பது எனக்குப் புரியவில்லை. ஓர் அமெரிக்க ஆராய்ச்சியாளர், ஆண்டாள் திருவரங்கத்தைச் சேர்ந்த ஒரு தேவதாசி என்று சொன்ன கருத்தை எடுத்துக் கூறியது எப்படி ஆண்டாளை இழிவுப் படுத்திப் பேசியதாகும் என்பது எனக்கு விளங்கவே யில்லை. அக்கருத்து தவறு என்று சொல்வதற்கு இடமிருக்கிறதே தவிர,அவர் அவமானப் படுத்தினார் என்று சொல்வதற்கு இடமேயில்லை.

பல்லவர், சோழர் காலத்தில் தேவதாசிகளுக்குக் கோயிலில், அர்ச்சகர்களுக்கு ஈடான அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது என்பதற்குக் கல்வெட்டுக்கள் மூலம் அறியப்படுகின்றது.

சங்க காலத்தில், பாணர், விறலியர்,கூத்தர் ஆகியோருக்கு சமூகத்தில் உயர்ந்த இடம் தரப்பட்டிருந்தது என்பதைச் சங்கப் பாடல்கள் மூலம் அறியலாம். ஆனால் பிற்காலத்தில், அவர்கள் தகுதி குறைந்தது என்பது, சமூகச் சீரழிவை சுட்டுகின்றதே தவிர,இது எந்த விதத்திலும் அவர்களைப் பற்றிய விமர்சனம் அன்று.. இவ்வாறு கூறுவது சீரழிந்த நம் முகத்தை நமக்கே எடுத்துக் காட்டும் கண்ணாடி.அது போல்தான், ஆண்டாளை ஒருவர் தேவதாசி என்று கூறி அவமானப் படுத்தினார் என்று கூறும் விமர்சனம்.

ஆண்டாள் ஓர் அற்புதமான கவிஞர், சொல்லேர் உழத்தி. பன்னிரு ஆழ்வார்களிலே நம்மாழ்வருக்கு ஈடான தகுதியில் வைத்து, வைணவ சம்பிரதாயத்திலே போற்றப்பட்டு வரும் கவிஞர். அவரைத் தற்கால அசிங்கமான அரசியல் ஆதாயங்களுக்காகக் கொச்சைப் படுத்த வேண்டாம்.

******

Divya Bharathi

ஆண்டாள் சர்ச்சைக்கு பின் வைரமுத்துவிற்கு H.ராஜா, நைனா நாகேந்திரன் போன்றோர்களின் வெளிப்படையான மிரட்டல், பிராமணர்களின் தொடர் போராட்டம், நித்தி சிஸ்யைகளின் வீடியோ, கருப்பு கருணா மற்றும் Venpura Saravanan தோழர்களை குறிவைத்த நித்தி சீடர்களின் வீடியோ, எல்லார் பேச்சிலும் தந்தை பெரியாரை இழிவுபடுத்தும் கீழ்மை, திக தலைவர் வீரமணி அவர்களை மிரட்டும் தொடர் போக்கு, இவைகளினூடாக “மாதா” மதராசாக்களை இழுக்கும் சூழ்ச்சி இவைகள் அனைத்தும் தனித்தனியாக நடப்பது போல் தோன்றினாலும், இவையனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றன் பின் ஒன்றாக இயக்குவது Rss தான் என்பது தெளிவாகிறது.

Bjpன் அரசியலே Polarization உத்தி மட்டும் தான். அதை இம்முறை மிக சிறப்பாக Bjp தமிழகத்தில் செய்து வருகிறது. மற்ற சில நண்பர்களை போல் இவைகளை எல்லாம் குறைத்து மதிப்பிட்டு கலாய்த்து விட்டு மட்டும் செல்ல என்னால் முடியவில்லை. இந்த காவி பயங்கரவாதத்திற்கு எதிராக முற்போக்கு ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினரையும் இணைத்து கொண்டு ஒரு பரந்த மேடையை உருவாக்க வேண்டியது நம்முன்னுள்ள உடனடி அரசியல் கடமையென கருதுகிறேன்.

நாம் குறைத்து மதிப்பிடும் இந்த கும்பல் தான் கல்புர்கி, தபோல்கர், பன்சாரே மற்றும் கௌரி லங்கேஷ் போன்ற நம் தோழர்களை சுட்டு கொன்றார்கள் என்பது நம் நினைவில் எப்போதும் இருக்கட்டும் தோழர்களே.

******

Rajarajan RJ

அந்த பெண்ணுக்கு 16 வயசு தான் என்று சொல்கிறார்கள். எனக்கு தெரியவில்லை. நித்யானந்தா மடத்தில் இருந்து இந்த மாதிரி பெண்கள் பேசும் வீடியோக்கள் சமீபமாக வந்த வண்ணம் இருக்கிறது. இந்துத்துவம் நித்யானந்தா போன்ற சூத்திர சாமியார்களை இதற்காக பயன்படுத்திக்கொள்கிறது போல. உண்மையை சொல்லப்போனால் நான் அந்த பெண் பேசியதை கேட்கவே இல்லை. அந்த பெண் வைரமுத்துவை கன்னாபின்னாவென்று திட்டுகிறார் என்றார்கள். அந்தப்பெண் பார்க்க நன்றாக இருந்தார். நான் ஷேர் செய்தேன்.

தோழர் டான் அசோக், நேற்று இந்த பெண்களை எல்லாம் ஆசிரமத்தில் இருந்து காப்பாற்றப்பட்டு மனநிலை சிகிச்சை கொடுக்கப்பட வேண்டும் என்றார். எனக்கு அவர் சொன்னது 100% சரி என்று தோன்றியது. நான் பெண்கள் தான் சாதியையும்/ மதத்தையும் கடத்திக்கொண்டு போக உதவுகிறார்கள் என்று எழுதினேன். தோழர்கள் வந்து.. சமூகம் தான் அதற்கு காரணம் என்றார்கள். மாற்றுக்கருத்தில்லை.

அடுத்ததாக இவ்வகை சாமியார்களிடம் சிக்கி இருக்கும் ஆண்கள், பெண்கள், குடும்பங்களின் எண்ணிக்கை மிக அதிகம். நித்யானந்தா மட்டும் அல்ல.. ஜக்கியில் இருந்து பாபாக்கள் வரை நிறைய சாமியார்கள் இப்படி இருக்கிறார்கள். எனக்கு நெருக்கமான ஒருவரின் குழந்தைகள் ஈஷா யோகாவில் சிறு வயதில் இருந்தே சேர்க்கப்பட்டார்கள். பின்பு போராடி அந்த குழந்தைகளை மீட்டார்கள்.

கடந்த வருடம் கூட இரண்டு மொட்டை போட்ட சாமியாரிணிகள் ஜக்கி மடத்தில் இருந்து பேட்டிக்கொடுத்ததை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்!

ஆன்மீக போதைக்கும், இந்துத்துவ போதைக்கும் நூலளவு தான் வித்தியாசம்! அந்த போதை எப்போதுவேண்டுமானால் வெறியாக மாறும்! அப்படியான வெறியை தான் நாம் தமிழ்நாட்டில் பார்க்க துவங்கியுள்ளோம்!

******

வைரமுத்து வாசலில் வந்து மன்னிப்பு கேளுடா – பாரதிராஜா சரவெடி

 

******

Shivani Sivakumar

வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் ரெடி..!
♦ உண்ணாவிரதத்தை முடித்து கொள்கிறேன் – ஜீயர்

******

கி. நடராசன்

ஈறை பேனாக்கி..பேனை பெருமாளுக்கு சதி கும்பல் கூச்சல் எரிச்சல் தாங்க முடியாமல்.. அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அனுப்பிய கரிச்சான் குருவிகள் பனியில் நனைந்து வந்து சன்னலை தட்டியது. அது இசைத்து அருளிய.. சொல்லிய  நல் முத்துகளில் இன்று காலை உங்கள் மேலான பார்வைக்கு! தூக்க கலக்கத்தில் சிலது விட்டு விட்டது.. அவை நாளைக்கு சொல்வதாக சொல்லிவிட்டு பறந்து விட்டது

ஆண்டாள் ஆய்வு கூடாது

இந்து மன்னர்களை –
இந்திய வரலாற்றை ஆய்வு செய்யாதே!
கல்வி கூடங்களை பஜனை மடங்களாக்கு!

பக்தியை, தெய்வ நம்பிக்கையும் மதிப்போம்!
தெய்வத்தை அரசியலாக்கும் 0.1% நாதாரி கும்பலை நாசம் செய்வோம்!
……………………………………..

சீதையை பூமா தேவி விழுங்கி சொர்க்கத்திற்கு தங்க ரதத்தில் அழைத்துக் கொண்டார்.
ஆண்டாளை பெரியாழ்வார் பெருமாளுடன் அய்க்கியமானார்’
நந்தன் நெருப்பில் இறங்கி கடவுளுடன் கலந்து விட்டார்
இராமலிங்க அடிகளார் ஜோதி மயமாகி விட்டார்..

இதெல்லாவற்றும் ஒரு லிங்க் இருக்கும் போல..

ஒன்றும் மில்லாத, குப்பை பெறாத விஷயத்தில் வெறுப்பு அரசியலை தூண்ட பொக்கிரிகளை பேச விட்டு சும்மா இருந்தது நமது முட்டாள்தனம்

இந்து மத குப்பைகளை, இந்து கடவுளின் யோக்கியதைகளை விரிவாக பல நல்ல பார்ப்பன அறிவாளிகள் அம்பலபடுத்தி உள்ளனர். அவர்கள் லிஸ்ட் வேணும்
……………………………………………

நாம் 99.9 % ( 97 % சூத்திரர்கள் + 2.99 பார்ப்பனர்) நல்லவர்கள் சேர்ந்து 0.1% சாமியார்களை, மோடி கும்பலை தனிமை படுத்த முடியாதா?
…………………………………..

ஆண்டாள் சர்ச்சை இந்த அளவுக்கு பரவ- மீடியாகாரர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்களின் கையாளாகத சூடு சுரணயற்ற சரணாகதி மழுப்பல்தான்
……………………………..

தீண்டாமை சட்டப்படி குற்றம்! தீண்டாமையை போதிக்கும் கடவுள் நாக்கை அறு! சனாதனதர்ம குப்பைகளை கொளுத்து!
…………………………………..

மீடியாகாரர்கள், படைப்பாளிகள், ஆய்வாளர்கள் ஏன் 0.1% இந்துத்துவா வெறிநாய்கள் குரைப்பத்தை சதாரணமாக கடக்கிறார்கள்?
………………………………….

99.9 % மக்கள்(பார்ப்பனர்கள் உட்பட்) நல்லவர்கள் நம்பக்கம்! 0.1% நாதரி சாமியார்கள், வெள்ளத்தோல் சீஷ்யைகள் கீழமை குண சாக்கடைகள்
…………………………

கணவன் இல்லாத நேரத்தில் மனைவி மகிழ்ச்சியாக பொழுது போக்க கூடாது. அலங்கரித்து கொள்ள கூடாது -விஷ்ணு ஸ்மிருதி .இதை விமர்சிக்க கூடாதா
……………………………

நால்வர்ண வேதங்கள் இந்து சனாதான தர்மமா( மாற்ற முடியாதாம்) புனிதமானதா? இவை
இந்திய சட்டப்படி குற்ற பதிவுகள்
…………………………..

சாதிகளை புகழும், 98 % மக்களை இழிவு செய்யும் சனதான நாதரி நாய்களை பேசவிட்டு வாயடைத்து கிடக்கும் நம்ம அறிவாளிகளைதான் உதைக்கனும்
……………………..

பெண்கள் பேச்சை நம்ப முடியாது. அதனால் நீதிமன்றங்களில் பெண்களின் சாட்சியம் செல்லாது எனும் நாரத ஸ்மிருதி பக்தியா -அயோக்கித்தனமா?
………………………

பெண்ணுக்கு சுதந்திரமாக வாழும் தகுதி இல்லை எனும் மனுஸ்மிருதி. பெளதாயன், யாக்ஜ்வல்கியன், வசிஷ்டன், விஷ்ணு, நாரதன்
இவனுங்கள் கடவுளா?
**********

Prakash JP

பார்ப்பனீயர்களின் நரித்தனம்..

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.

அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி… வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி..

“நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ….” என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா

எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை… எந்த பூணூலும் போராராடவிலையே… ஏன்??

ஆனால், பார்பனர் அல்லாத கவிஞர் வைரமுத்து இவர்கள் எழுதியதை மேற்கோள் காட்டியதைத்தான் தாங்க முடியவில்லையாம்.. ஏனென்றால், அவர்கள் பிராமணர்கள், வைரமுத்து சூத்திர வகுப்பை சேர்ந்த தமிழர்… இது தான் ஆரிய – திராவிட மோதல் என்பது…

மேலும், “எல்லா ஹிந்து கடவுள்களும் கிரிமினல்கள்” என்று ஹிந்து மத தலைவர் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சொன்னபோது ஒரு பயல் வாயை திறக்கவில்லை… பூணூல் பார்டிகள் வீதிக்கு வந்து போராடவில்லை… எச்.ராஜா போன்ற எச்சைகள் வாய் திறக்கவில்லை… இங்கே இப்போது குதிக்கும் பார்ப்பனீய அடிமைகள் வாய்மூடி இருந்தார்கள்..

**********

Sundaram Chinnusamy

நாங்க அருவா தூக்கிய ஜாதி… மறுபடியும் தூக்க வச்சுடாதீங்க என்ற ரீதியில் மிரட்டுகிறார் பாரதிராஜா….
எச்.ராஜா வைரமுத்துவுக்கு பொங்கின மாதிரி பொங்கக் காணோம்.
The use of caste system is amazing!!!

**********

Chandran Veerasamy

இன்றைய சன் நியூஸ் விவாதத்தில் ஒரு காவி ‘ வைரமுத்துவின் தலையை நான் வெட்டுவேன் ‘ என்று திரும்பத்திரும்ப கூறுகிறான் . அந்த நிகழ்ச்சியை நடத்துபவன் இது சரியா என்று கேட்கிறான் . மீண்டும் அந்தக் காவி நாய் , சொன்னததையே சொல்லுகிறான். இறுதிவரை .
அந்தக் காவி நாயைக் குறைந்த பட்சம் அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி இருக்க வேண்டும் .

#வைரமுத்து மேல் அப்படி என்ன ‘ காண்டு ‘ கேடிப்பய தொலைக்காட்சிக்கு ?

**********

Thiru Yo

“ஆன்மீக அரசியல்” என்றால் என்னவென்று இப்போது புரிந்திருக்கும்.

**********

Samsu Deen Heera

ஷாகும் வரை உண்ணாவிரதம்னு ஷொன்ன ஜீயர் லஞ்ச்சுக்கே ஓடிண்டார்..

நான் பாப்பாத்திடா.. இட ஒதுக்கீடு நாங்க கொடுத்த பிச்சைடான்னு காலைல வீரமா ஷொன்ன மாமியும் மதியமே டீ ஆக்டிவேட் பன்னிண்டு போயிண்டார்..
இந்த பாரதிராஜா வேற ஆயிதத்த எடுக்க வெச்சிறாதேள்னு சவுண்டு கொடுக்கறா..
இந்த வைரமுத்து.. ஆண்டாள் வந்து ஷொல்லட்டும் மன்னிப்பு கேக்குறேங்கிறா..
இந்த அம்பி பிரசன்னா.. என்னமோ டீ குடிக்க வான்னு ஷொல்றமாதிரி தீக்குளிக்க வான்னு கூப்பிடறான்..

நம்ம நித்தியோட புள்ளைங்க ஏதோ நமக்கு சப்போர்ட்டா பேசிண்டு இருக்கா.. இவனுக என்னடான்னா அவாளையே சைட் அடிக்கிறா..
சூத்திரவா சப்போர்ட் இல்லைன்னா நம்ம பெர்பார்மன்ஸ் படு கேவலமா போயிடும்னு நேக்கு நல்லா புரிஞ்சிடுத்துடா அம்பி…
நோகாம நெய்யும் பருப்பும் தின்னு வளந்த ஒடம்பு வெய்யில்ல காஞ்சதுதான் மிச்சம்..
பஹவானே…!!

**********

Chelliah Muthusamy

சொன்னபடி தீக்குளிக்க எச்.ராஜாவுக்கு துப்பில்ல.
ஜீயருக்கு ஒருநாள் பட்டினி கிடக்க வக்கில்ல.
புரோகிதம் பண்ணி, கடவுள் பெயரால் ஏச்சுப்பிழைச்சு வயிறு வளர்க்கும் பார்ப்பன கூட்டமே இத்தோடு நிறுத்திக்கொள்வது உங்களுக்கு நல்லது.
இத்தனை நாளாக நீங்க பறிச்ச குழி உங்க காலடியில்தான் என்பதையாவது உணர்ந்து பிழைக்கிற வழியைப் பாருங்கள்.

பெரியாரைப் பற்றி இந்தப் பசங்க புரிந்து வைத்திருப்பதில் தெரிகிறது இவர்களது அறிவுநாணயமற்ற தன்மையும் அறிவும்.
சீதை சிரித்திருந்தால் ராமாயணம் இல்லை; திரவுபதி சிரிக்காதிருந்திருந்தால் மகாபாரதம் இல்லை என்று சொல்லி வைரமுத்து கொச்சைப்படுத்திவிட்டாராம். எச்.ராஜா வகையறா பக்தி இலக்கியம் படிக்கிற லட்சணம் இதுதான். ஏண்டா, சீதை சிரித்திருந்தால் பிரச்சனை இல்லை; ஆனால், சிரிக்கவில்லையே என்று கவிஞர் பெருமைப்படுத்துவதாக தோன்றவில்லையா.

இப்படிப்பட்ட மங்குனிகளால் இந்துத்துவம் வளர்க்கப்படும்போது மதவாதம் வெறியூட்டப்படும்போது கமுக்கமாக இருந்துவிட்டு வைரமுத்துவின் பார்வையில் குறைகாண வந்துவிட்டார்கள் ஜெயமோகன், செயபிரகாசம், லக்‌ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட யோக்கியர்கள்.

உங்கள் எழுத்துக்களை புதைத்தால் நிலம் பழுதாகும். உங்கள் எழுத்துக்களை எரித்தால் காற்று நஞ்சாகும்.

**********

அமீர் அப்பாஸ்

இது வைரமுத்து மீது எறியப்படும் கல் அல்ல. பார்ப்பனர்கள் தங்களின் வரலாற்றின் மீது தாங்களே கல்லெறிந்து கொள்கிறார்கள். தேவதாசி முறையை உருவாக்கியவர்கள் யார்? அதன் வழியாக பெண்களைப் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கியது யார்? பக்தியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த ஆபாசங்களுக்கும் வக்கிரங்களுக்கும் காரணமான பார்ப்பனர்களே
அந்த சொல்லுக்கு எதிராக போராட்டம் நடத்துவது வரலாற்று முரண் அல்லவா?

திருடனே போலீஸ் வேடத்தில் இருப்பது போல் உள்ளது உங்களின் போராட்ட வடிவம்.

**********

Viruthagiri A

சற்று முன் சுப வீ அய்யா ஒன்றே சொல் நன்றே சொல் உரையில் நியாயமான ஒரு கேள்வி கேட்டுள்ளார் –

“ஒரு கருத்து சொன்னால் அதற்கு தலையை வெட்டுவோம்… நாக்கை வெட்டி வந்தால் இத்தனை லட்சம் பரிசு என்று சொல்பவர்கள் மீது அரசும் காவல் துறையும் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ன தேசீய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது”

– நியாயமான கேள்வி…

தமிழர்கள்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறோம்… தமிழர்கள் பேடிகளாக ஆண்டால் என்ன செய்வது?