Wednesday, April 16, 2025
முகப்புசெய்திதமிழ்நாடுஅரசியலில் ரஜினி – நாளை மாபெரும் சர்வே முடிவுகள் !

அரசியலில் ரஜினி – நாளை மாபெரும் சர்வே முடிவுகள் !

-

ஜினி அரசியல் கட்சி துவக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஊடகங்களில் அவை பெரிதும் விவாதிக்கப்பட்டன. சில ஊடகங்கள் சர்வேயும் நடத்தியிருக்கின்றன.

வினவு சார்பில் கடந்த பொங்கல் (2018 – சனவரி, 14 முதல் 18 வரையிலான) நாட்களில் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமான சர்வே நடத்தப்பட்டது. மொத்தம் 5,150 மக்களிடம் கேள்விகள் அடங்கிய படிவம் அளிக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன.

சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், கோவை, தருமபுரி, திருச்சி, தஞ்சை, மதுரை ஆகிய எட்டு இடங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட  தோழர்கள் மேற்கொண்ட சர்வேயின் முடிவுகள் நாளை வெளியாகும்.

கருத்துக் கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள்:

  1. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை விரும்புகிறீர்களா?
  2. அவரது படங்களுக்கு ரூ 500, 1000 என்று பிளாக்கில் டிக்கெட் விற்கப் படும்போது அவரது கட்சி ஊழலற்ற அரசியல் நடத்தும் என்று நம்புகிறீர்களா?
  3. திரு ரஜினிகாந்தின் ஆன்மீக அரசியல் என்பதன் பொருள் என்ன?
  4. திரு ரஜினிகாந்த கட்சிக்கு பெண்களிடம் ஆதரவு இருக்கிறதா?
  5. சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி, கொள்கை, போராட்டம் எதுவும் இல்லை என திரு ரஜினி கூறியிருப்பது குறித்து…
  6. திரு ரஜினி அவர்களின் அரசியல் பிரவேசத்தின் விளைவால் யாருக்கு ஆதாயம்?
  7. திரு ரஜினி, கன்னடர் என்பதால் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என்ற கருத்து…
  8. சென்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டீர்கள்?

ரஜினியின் செல்வாக்கு என்ன? யார் ஆதரிக்கிறார்கள், யார் எதிர்க்கிறார்கள், ஆண்கள், பெண்கள், சாதாரண மக்கள், இளைஞர்கள் என பல பிரிவுகளில் சமூக ஆய்வுடன் வெளியாகிறது இந்த கருத்துக் கணிப்பு.

ஒரு அறிவிப்பு: தவிர்க்க முடியாத காரணங்களால் ரஜினி சர்வே முடிவுகள் நாளை அல்லது திங்கள் 28.1.18 அன்று வெளியாகும். நன்றி (செய்தி பதிந்த நேரம் மதியம் 3.50,  25.1.18)