Thursday, April 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !

பேருந்து கட்டணம் : மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் அரசு !

-

பேருந்து கட்டணம் மட்டுமல்ல – அனைத்திலும் மக்களின் இரத்தத்தை அட்டையாக உறிஞ்சும் இந்த அரசு இனியும் நீடிக்கலாமா ?

பொதுமக்களே, மாணவ சமூகமே !

விடாதே. போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்து “நீ அடிச்சகொள்ளைக்கு நாங்க ஏன் தாலி அறுக்கணும்?” என்று கேள்வி எழுப்பு !

லாப நட்டம் பார்ப்பதற்கு அரசு என்ன அம்பானியின் கிளை நிறுவனமா? போக்குவரத்துத் துறை நட்டத்திற்கு காரணமானவர்களை ஜெயிலில் ஏன் போடவில்லை? கொள்ளையடிச்ச அமைச்சர்கள் – அதிகரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து நட்டத்தை ஈடுகட்டு.

கல்வி, மருத்துவம், மின்சாரம், குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய வற்றை அனைவருக்கும் வழங்க முடியவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் உன்னை யார் ஆளச்சொன்னது?

150 ரூபா விவசாயக்கூலியில், தினமும் காலேஜுக்கு செல்லும் மாணவருக்கு எப்படி 50 ரூபாய் கொடுக்க முடியும்? ஒரு நாளைக்கு 100 ரூபா செலவு செஞ்சு 2 பிள்ளைகளை படிக்கவைக்க முடியுமா? 250 ரூபாய் சம்பளத்தில் 80 ரூபாய் பஸ் கட்டணம் என்றால் நாங்க வாழ்வதா இல்லை சாவதா?

விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு வேலை கொடுக்க துப்பில்லை. உத்திரவாதமான சம்பளம் இல்லை. விக்கிற விலை வாசியில் வாழ முடியல, கட்டண உயர்வை அறிவிக்க அரசுக்கு என்ன அரு கதை இருக்கு?

தனியார் பேருந்து லாபத்தில் ஓடும்போது, அரசுப் பேருந்து எப்படி நட்ட மாகும்? டீசல் வரி, டோல்கேட் வரியை தள்ளுபடி செய்! அதிமுக அமைச்சர்கள் சிலரது ஊழல் பணத்தை பறிமுதல் செய்தாலே பல ஆண்டுகால நட்டத்தை ஒரேநாளில் சரிசெய்ய முடியும்,

நட்டத்தை மக்கள்தான் ஏற்க வேண்டுமாம்? பேருந்துக் கட்டணத்தை குறைக்கமுடியாதாம்? மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்களாம்,தெர்மக்கோல் முட்டாள் சொல்கிறார். தமிழகத்தில் மாணவர்கள் என்ற போராட்ட வெள்ளம் இந்த கிருமிகளை நிரந்தரமாக அழிக்க வேண்டும்.

கல்லூரி மாணவர்கள் தமிழகமெங்கும் போராடி வருகிறார்கள், பள்ளி மாணவர்கள்கூட போராடுகிறார்கள். “பழைய கட்டணம்தான் தருவோம், புதிய கட்டணம் கொடுக்க முடியாது: யாரை கேட்டு இவ்வளவு கட்டணத்தை உயர்த்தினாய், திரும்பப்பெறு” என தமிழகம் முழுவதும் அனைத்து பஸ்களி லும் மக்கள் புதிய கட்டணம் செலுத்த முடியாது என மறுத்தால், அரசு என்ன செய்ய முடியும்?

எதிரி அடித்தால் தடுக்க வேண்டும் அல்லது திருப்பி அடிக்க வேண்டும் ஓடிக்கொண்டே இருந்தால் விரட்டி விரட்டி அடிப்பான். அதுபோல் மக்களுக்கு எதிரான இந்த அரசின் தாக்குதல்களை நாம் எதிர்த்து போராடா மல் சகித்து கொண்டு போவதால்தான் நள்ளிரவில் இரு மடங்கு அரசுப் பேருந்து கட்டண உயர்வை அமுல்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து மத்திய – மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரங்களை – வாழ்வுரிமைகளைப் பறித்து அகதிகளாக, அடிமைகளாக மாற்றி வருகிறன்றன. நமக்கு பயன்படாத அரசை நாம் ஏன் மதிக்க வேண்டும். நம் வரிப்பணத்தை வாரிக்கொடுத்து ஏன் தூக்கி சுமக்க வேண்டும்?

மக்களுக்கு எதிரான இந்த அரசின் அதிகாரத்தை அமுல்படுத்த விடாமல் கீழிருந்து மக்களை பயிற்றுவிக்கும் போராட்டமாக மாற்ற வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம் – 91768 01656

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க