Thursday, April 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுதிய கட்டணத்தை மறுப்போம் ! திருச்சி - திருப்பூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

புதிய கட்டணத்தை மறுப்போம் ! திருச்சி – திருப்பூரில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

-

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் “புதிய பேருந்து கட்டணத்தை செலுத்த மறுப்போம்” என்ற முழக்கத்தின் கீழ் பிரச்சாரம் நடத்தப்பட்டது ! அதில் சில போராட்டங்கள்…

***

திருச்சியில்…

குடியரசு தினமான 26.01.2018 அன்று ” மக்கள் வழிப்பறி திருடர்களிடம் ” சிக்கிய பயணிகளாக தவித்து வரும் நேரத்தில் “பழைய கட்டணத்தையே கொடுப்போம் புதிய கட்டணத்தை ஏற்க மறுப்போம்.”- என்ற முழக்கத்துடன் திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்தில் 30 -க்கு மேற்பட்ட மக்கள் அதிகாரம் தோழர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் பிச்சாரம் செய்தனர்.

முழக்க அங்கி அணிந்து பிரசுரங்களை தோழர்கள் மக்களிடம் வினியோகித்த போது அனைவரும் ஆர்வமுடன் வாங்கி படித்தனர். பெண்கள், பயணிகள் படித்து விட்டு ஆர்வத்துடன் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த அரசு சாமானிய மக்களை ஒழித்து கட்டும் சதியில் தான் கட்டண உயர்வும் நடவடிக்கைகளும் உள்ளதாக கூறி ஆதரித்தனர். பலர் நிதியுதவி செய்தனர்.

டிரைவர் – கண்டக்டர்களும் ஆர்வத்துடன் பிரசுரத்தை வாங்கி படித்தனர். காவலர்கள் பிரச்சாரத்தை தடுக்க முனைந்த போது   “ஜனநாயக பூர்வமான எமது பிரச்சாரத்தை நிறுத்த முடியாது” என்று கூறி தொடர்ந்து செய்யப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

*****

திருப்பூரில்…

மோடியின்  அடிமை எடப்பாடி கும்பலால் பஸ் கட்டணம் 50 % முதல் 100 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முழுமையாக ரத்து செய்யவேண்டும் என வரும் 31.01.2018 அன்று புதன்கிழமை காலை 11  மணிக்கு    திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதால் அனைத்து  பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என மக்களிடம் விரிவாக பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஏற்கனவே திருப்பூரில் GST வரிவிதிப்பால் ஏற்றுமதி தொழிலும், உள்நாட்டு வேலைவாய்ப்பும் குறைந்து விட்டநிலையில் பிக்பாக்கெட் திருடன் போல நள்ளிரவில் பஸ் கட்டணத்தை ஏற்றி, கொஞ்சநஞ்ச பணத்தையும் புடுங்கி உழைக்கும் மக்களை நடுவீதியில் விட்டுள்ளார்கள்.
திருப்பூரில் பிடித்த கன்டைய்னர் பணம் எங்க? ரயிலில் காணாமல் போன பணம் எங்க? சேகர் ரெட்டி, அன்புநாதன்களின் கொள்ளைக்கும், அரசியல்வாதிகளின் – அதிகாரிகளின் மடத்தனத்தால் ஏற்படும் நஷ்டத்திற்கும் நாம் ஏன் வரி செலுத்தவேண்டும்? நஷ்டத்திற்கு காரணமான அமைச்சர் – அதிகாரிகளின் சொத்தை பறிமுதல் செய்து ஈடுசெய்யவேண்டும் . அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து   போராட வாருங்கள் – என மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

திருப்பூர் பகுதி மக்கள் அதிகாரம் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து நடத்தப்படும் தொடர் பிரச்சாரம் !

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருப்பூர் – 99658 86810.

*****

சிதம்பரத்தில்…

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகம் மாணவர்கள் போராடினார். இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த முனைவர் பட்டம் படிக்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் மணிவாசகம் உள்பட 10 பேர் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றது பின்னர் அவர்களை விடுவித்தது போலீசு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க