Wednesday, April 16, 2025
முகப்புசெய்திஇந்தியாகடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு - விற்கு வாழ்நாள் சிறை !

கடவுளின் அவதாரம் பொறுக்கி ஆஸ்ரம் பாபு – விற்கு வாழ்நாள் சிறை !

16 வயது மாணவி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

-

ராஜஸ்தான், ஜோத்பூர் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த 16 வயது சிறுமியை 2012-ம் ஆண்டில் வன்புணர்வு செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு-வுக்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. ஜோத்பூர் சிறப்பு எஸ்.சி. / எஸ்.டி. நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் ஆசிரமம் நடத்தி ஒரு கார்ப்பரேட் சாமியாராக எல்லா வசதிகளோடும் வாழ்ந்தவர் 75 வயது ஆஸ்ராம் பாபு. 2013-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி ஜோத்பூர் ஆஸிரமத்துக்கு வந்த இளம் மாணவி, ஆசாராம் பாபு தன்னை பாலியல் வன்முறை செய்தார் என்று புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கைப் பதிவு செய்த போலீஸார், ஆசாராம் பாவுவை கைது செய்து போக்சோ, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் போட்டனர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் ஆசாராம் பாபு சிறையில் இருந்து வருகிறார்.

இந்த வழக்கு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தாழ்த்தப்பட்டோர் பழங்குடி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 2017, மே 19-ம் தேதி முதல் வாதம் தொடங்கியது. ராஜஸ்தான் உயர் நீதிமன்ற மேற்பார்வையில் நடந்த வழக்கின் விசாரணை அரசு தரப்பில் 44 சாட்சிகளிடமும், ஆஸ்ரம் பாபு தரப்பில் 31 சாட்சிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்த நிலையில் நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நீதிபதி மதுசூதன் சர்மா ஜோத்பூர் சிறைக்கு சென்று, 16-வயது சிறுமியை பாலத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு குற்றவாளி என்று அறிவித்தார். செய்த குற்றத்துக்காக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின்படி சாமியார் ஆஸாராம் பாபுவுக்கு வாழ்நாள் சிறை விதிக்கப்படுகிறது. அவரின் உதவியாளர்கள் சரத், சில்பி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார்.

ஆஸ்ராம் பாபுவை காப்பாற்றுவதற்காக மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி ‘அந்தப் பெண்ணுக்கு ஆண்களால் கவரப்படும் வியாதி இருக்கிறது’ என்று அப்போது கூறியிருக்கிறார். அதை இந்த இணைப்பில் படிக்கலாம்.

பொறுக்கி ஆஸ்ரம் பாபுவிற்காக புத்தி கெட்ட ஜேத்மலானி!

ஆஸ்ரம் பாபு சிறையில் இருந்த போது இதுவரை ஒன்பது சாட்சிகள் தாக்கப்பட்டு இருவர் இறந்தும் போயிருக்கின்றனர். பா.ஜ.க-வோடும், மோடியோடும் நெருக்கமாக இருந்தவர்தான் ஆஸ்ரம் பாபு. இவரது மகன் மீதும் பாலியல் குற்றச்சாட்டு இருக்கிறது. தற்போது வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் சிறைக்குள் இவருக்கு ஒரு சொர்க்கபுரி அமைக்கப்பட்டு எந்த சிரமமுமின்றி வாழ்வார். அல்லது மேல் முறையீட்டில் தீபக் மிஸ்ரா அமர்வில் விரைவில் வெளியே வந்தாலும் வருவார்!

தற்போது பாலியல் வன்முறைக்கு எதிராக மக்களிடையே உருவாகி வரும் கருத்தை ஒட்டி வழங்கப் பட்டுள்ள தீர்ப்பில் ஆஸ்ரம் பாபு தப்பிப்பாரா, தண்டிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க