ஆர்.எஸ்.எஸ் சங்கி மங்கிகள் இன்னும் பரிணாம வளர்ச்சியில் முழுமை பெற்று மனிதர்களாகி விடவில்லை என்பது அனைவரும் அறிந்த இரகசியம் தான். இதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான வெறுப்பில் இருந்து சொல்லவில்லை.
நீங்கள் கதுவாவின் ஆசிபாவை இன்னும் மறந்திருக்க மாட்டீர்கள். அந்த எட்டு வயதுச் சிறுமியைக் கோவிலில் அடைத்து வைத்து போதை மருந்து கொடுத்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்து கடைசியில் அவளைக் குப்புறக் கிடத்தி முதுகெலும்பை மிதித்தே உடைத்துக் கொன்ற மனித மிருகங்களுக்கு ஆதரவாக ஊர்வலம் சென்ற தனது சட்டமன்ற உறுப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்கி அழகுபார்த்த கட்சி பா.ஜ.க. இதில் இருந்தே அவர்கள் பரிணாம வளர்ச்சியின் எந்தக் கட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
உன்னாவில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் செங்கார் 17 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி சிதைத்துள்ளார். புகாரளிக்கச் சென்ற பெண்ணின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து அடித்தே கொன்றுள்ளது அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசு. ஒன்பது வயதுச் சிறுமியின் மேல் ஓடும் இரயிலில் வைத்து பாலியல் தாக்குதல் தொடுத்த தமிழ்நாடு பா.ஜ.கவின் பிரமுகர் பிரேம் ஆனந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடெங்கும் சங்கி மங்கி மிருகங்களைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். கேரளாவின் பல பகுதிகளில் “இந்த வீட்டில் பெண் குழந்தைகள் இருப்பதால் ஓட்டுக் கேட்டு வரும் பா.ஜ.க தொண்டர்கள் தயவு செய்து உள்ளே நுழைய வேண்டாம்” என தங்கள் வீடுகளில் எழுதி ஒட்டியுள்ளனர். மும்பை புறநகர் தொடர் வண்டியில் பயணிக்க நுழைந்த உள்ளூர் பா.ஜ.க பிரமுகரைக் கண்டு அஞ்சிய பயணிகள், பெண்கள் பயணிப்பதால் “வெளியே போ” என அவரைப் பிடித்து தள்ளியுள்ளனர்
https://www.youtube.com/watch?v=ZFApiXbcHHs
மக்களின் பீதியை அதிகரிக்கச் செய்யும் விதத்தில் சமீப காலமாக பாரதிய ஜனதா தலைவர்கள் விசித்திரமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் சமீபத்தில் பேசிய திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் பிப்லப் தேவ், சிவில் இஞ்சினியர்கள் தான் சிவில் சர்வீசுக்கு (பொது நிர்வாக பணிகள்) வர வேண்டும் என்றும், மெக்கானிக்கல் இஞ்சினியர்கள் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கம் கேட்ட போது சிவில் இஞ்சினியர்கள் தான் சமூகத்தைக் கட்டியெழுப்பும் திறன் பெற்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதே ’டிப்டாப்’ ஆசாமி கடந்த சில தினங்களுக்கு முன் வேலை கிடைக்காத இளைஞர்கள் அரசாங்கத்தை தொல்லை செய்யக் கூடாதென்றும், மாடு வளர்த்து பால் கறந்து விற்றோ பீடா கடை போட்டோ பிழைக்கும் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு நாம் தமிழர் தம்பிமார்கள் மேற்படி நபருக்கும் தமிழ் முப்பாட்டன்மார்களுக்கும் தொடர்பு ஏதேனும் உள்ளதா என்று அறிய காப்புரிமை பெற்ற மூத்திரச் சோதனைக்கு தயாராகி வருவதாக கேள்வி.
மகாபாரத காலத்திலேயே இண்டர்நெட் இருந்ததாக திரிபுராவின் பா.ஜ.க முதல்வர் அறிவித்திருப்பது தம்பிமார்களின் சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்திருக்கிறதாம். ஆமையோட்டுப் படகுகளில் வங்கக் கடலைக் கடந்து திரிபுராவை நோக்கி புலிப்படையொன்று கிளம்பியிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தன்னை வந்து சந்திக்கும்படி மேற்படி நபருக்கு பிரதமர் ஓலை அனுப்பியுள்ளதாக பத்திரிகைச் செய்திகள் அறிவிக்கின்றன. இந்த சந்திப்புக்கு பொருள் விளக்கம் எழுதிக் கொண்டிருக்கும் பத்தி எழுத்தாளர்கள், பிப்லப் தேவ்-வை பிரதமர் மோடி கடுமையாக கண்டிக்கப் போகிறார் என்று ஆருடம் சொல்கின்றனர். ஆனால், பிரதமரின் பழைய ரிக்கார்டுகளைப் புரட்டிப் பார்த்தால் கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இல்லை. பண்டைய இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததற்கான ஆதாரமாக சிவகாசி ஓவியர்கள் வரைந்த விநாயகரின் வண்ணப்படத்தைக் காட்டியவர் தான் நமது பிரதமர் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
மேலும், வேலையற்ற இளைஞர்கள் பக்கோடா கடை போட்டுப் பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னவர் தான் பிரதமர். பக்கோடா கடைக்கும் பீடா கடைக்கும் அதிக தொலைவு இல்லையே. இதில் இன்னொரு ஆச்சர்யமான ஒற்றுமையும் உள்ளது. பிரதமரின் பக்கோடா கடை ஆலோசனையை விதந்தோதிய பொருளாதார மேதை துக்ளக் குருமூர்த்தி, திரிபுரா முதல்வரின் பீடாக்கடை ஆலோசனையையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
Those who make fun of Tripura CM pan shop remark see this link https://t.co/OvPT27pj6o
Pan trade is no more the traditional one. There is chocolate pan,
Chocolate With Caramel Sweet, almond, strawberry ..what not. Pan is one of the biggest trade in Benaras— S Gurumurthy (@sgurumurthy) April 30, 2018
ஆக பிரதமர் – திரிபுரா முதல்வர் சந்திப்பில் என்ன நடக்க வாய்ப்புள்ளது?
- ”என் இனமடா நீ” என்று பிப்லப் தேவ்-வை அணைத்துக் கொள்வார் பிரதமர்.
- ”என்னப்பா தம்பி, நான் ஷாகா போன காலத்துல இந்த பாடம்லாம் எடுக்கலையே” என ஆச்சர்யப்படுவார்
- ”என்ன அம்மாச… எனக்கே போட்டியா?” என்று பொறாமைப்படுவார்.
- “பிரதமருக்கான நாக்பூரின் அடுத்த பட்டியல்ல நீ தான்யா முதல்லே இருக்கே” என பாராட்டுவார்
- “மச்சி நீயெல்லாம் திரிபுராவில் இருக்க வேண்டிய ஆளே இல்லை. சீக்கிரம் என்னோட அமைச்சரவைலே இடம் தாரேன்” என்று புளகாங்கிதம் அடைவார்.
- ”இதே மாதிரி பேச ஹெச்.ராஜாவுக்கும் தமிழிசைக்கும் ட்ரைனிங் குடுத்து தமிழ்நாட்டுல தாமரையை மலர வைக்க வேண்டியது உன்னோட பொறுப்பு” என்று நம்பிக்கை அளிப்பார்
- “பாருப்பா தம்பி நாம பேசறதைக் கேட்டு உலகே உருண்டு புரண்டு சந்தோசத்துல சிரிக்குது” என்று மகிழ்ச்சியடைவார்.
- ”மார்க்சிஸ்டுகள் ஆட்சியில் கண்டு கொள்ளப்படாமல் இருந்த திரிபுராவை நோக்கி மொத்த உலகத்தின் கவனத்தையும் திருப்பிய இளவலே வாழ்க” என்று குருமூர்த்தி பாணியில் வாழ்த்துவார்
One good thing that is happening is that thanks to BJP in Tripura, what happens in Tripura becomes national news. Otherwise no one used to bother about Tripura till CPM was in power https://t.co/wTtt2dqXvB
— S Gurumurthy (@sgurumurthy) April 30, 2018
- “இந்தக் கட்சியில் கொள்கை முழக்கம் செய்யும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது” எனக் கோபப்படுவார்.
- ”நல்ல வேளை… இந்த கும்பல்லேயே புத்திசாலி நான் தான்னு நிரூப்பிச்சிட்டே தம்பி” எனக் கூறி ஆரத் தழுவிக் கொளாவார்.
இதற்கு மேல் பறக்க முடியாதென எமது கற்பனைக் குதிரை சண்டித்தனம் செய்வதால் வேறு எந்த மாதிரியெல்லாம் அந்த சந்திப்பில் பேசப்படும் என்பதை நீங்களே யோசித்து பின்னூட்டத்தில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
– சாக்கியன்.