Saturday, April 19, 2025
முகப்புகளச்செய்திகள்போராட்டத்தில் நாங்கள்கரூர் : மத்திய அரசு - உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம்...

கரூர் : மத்திய அரசு – உச்சநீதிமன்றத்தின் நீட் தேர்வு சதி ! புமாஇமு ஆர்ப்பாட்டம் !

“நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி ! 10.05.2018 அன்று கரூர் பு.மா.இ.மு. நடத்திய ஆர்ப்பாட்டம். செய்தி - படங்கள்!

-

நீட் தேர்வு : மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் கூட்டுச்சதி !
நீட் தேர்வை ரத்து செய்ய டெல்லிக்கு எதிராக கிளர்தெழுவோம் !

என்ற தலைப்பின் கீழ் 10.05.2018 அன்று காலை 10.30 மணியளவில் கரூர் பகுதி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் பகுதி பு.மா.இ.மு தோழர் பாக்கியராஜ் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு.-வைச் சேர்ந்த தோழர் சுரேந்தர், தோழர் பிரித்திவ், தோழர் மாஞ்சோலை, தோழர் சிவா, தருமபுரி பு.மா.இ.மு தோழர் அன்பு மற்றும் கரூர் பகுதி மக்கள் அதிகாரம், தோழர் விக்னேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக தோழர் வினோத் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பேசிய உரையின் சுருக்கம்: சென்ற ஆண்டு நீட் தேர்வுக்கு மாணவி அனிதா பலி வாங்கப்பட்டார். இந்த ஆண்டு மாணவர்கள் – பெற்றோர்கள் அலைகழிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். நீட் தேர்வு பல பெற்றோர்களின் உயிரை பலிவாங்கியுள்ளது. நீட் தேர்வில் மட்டுமல்ல காவிரி, மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா திட்டம் என தமிழகம் பல வகைகளிலும் வஞ்சிக்கப்படுகின்றது. இனியும் இந்த அவலங்கள் தொடராமல் இருக்க நாம் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும் என்று பேசினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இதுவரை கரூர் பகுதியில் பு.மா.இ.மு. – சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பலமுறை அனுமதி மறுத்துள்ளது போலீசு. தோழர்களின் தொடர் போராட்டத்தால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடைத்தது. அதிலும் பல கெடுபிடி நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் தாண்டி இந்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்து முடிந்தது.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
கரூர், தொடர்புக்கு : 98941 66350.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க