Abdul Hameed Sheik Mohamed
நடுநிலை சங்கி பானுகோம்ஸ் இன்று காலை ஒரு முக்கியமான கேள்வியை புதிய தலைமுறையில் கேட்டார்: ” போராட்டக்காரர்களுக்கு கல் எங்கிருந்து கிடைத்தது..?இதை முதலில் விசாரிக்க வேண்டும்”
கல் ஒருவகை கிடைப்பதற்கரிய ஆயுதம் என்பதை காலையிலேயே தெரிந்துகொண்டேன்
*******
Deepa Lakshmi
வடகிழக்குப் பகுதியிலிருந்து பிழைப்புத் தேடி வந்திருக்கும் மக்களுக்குக் கொதிக்கும் உணர்வு கூட இங்கேயே இருந்து … வளர்த்துக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களுக்கும், அவர்களை நக்கிப் பிழைக்கும் சாதி அடிமைகளுக்கும் இருக்காது என்பதை இனியாவது புரிந்து கொள்வோம்.
எந்த இன உணர்வுக்கும் மூலதனம் மனிதம். அநீதி எங்கு நடந்தாலும் வலிக்கும் தான். நம் வாழ்வுக்கு நெருக்கமான சூழலில் நடக்கும் போது உயிரே வலிக்க வேண்டும். அதற்கு எந்த மயிரானும் டெஸ்ட் வைக்க வேண்டியதில்லை.
வலியே தெரியாமல் திரிபவர்களைக் கண்டு கொள்ளுங்கள்,போதும்.
*******
Thiru Yo
மூன்று மாவட்டங்களிலும் இன்று என்ன நடைபெறுகிறதென்கிற ஒற்றைச் செய்திகூட இல்லை. இணையம் முடக்கம் அறிவிப்பு நேற்றே வந்த போதும் இத்தனை அமைப்புகள், கட்சிகள், வழக்கறிஞர்கள் இருந்தும் இன்று தடைக்குப் பிறகுதான் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு. செய்தி ஊடகங்கள் கண்களும், வாய்களும் கட்டப்பட்டுள்ளன. போக்குவரத்து முடக்கம். களச்செயற்பாட்டாளர்கள் பாதுகாப்பு மற்றும் தற்போதைய நிலைமை பற்றி தகவல் இல்லை. எல்லா கண்களையும் மூடி கொலைகார அரசு சொல்வது மட்டுமே தகவலாகிறது.
இதை எதிர்கொள்ள கட்டமைப்பு, நுட்பம் எதுவும் இல்லை. தூத்துக்குடிக்கு தானே பிரச்சனை. மெதுவாக இரண்டுநாட்கள் கடந்து பார்த்துக்கலாமென தமிழ்நாடு உறங்குகிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்த அடக்குமுறை பரவும்போது மயானத்தின் அமைதி வந்திருக்கும்.
எடப்பாடியை திட்ட நமக்கு எந்த தகுதியும் இல்லை.
*******
Karthik Meka
தூத்துக்குடியில் அடிவாங்கும் மக்கள் உழைக்கும் மக்கள் அதில் பெர்ணாண்டஸ், நாடார், பள்ளர், பறையர் , மீனவர்கள் , இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் என்று அனைவரும் இருக்கிறார்கள். சாதிய மத கொம்பன்கள் தலைவர்கள் தங்கள் ஆண்ட பரம்பரை சாதிய வீரத்தை காட்டவும். அனைவரும் சூத்தை மூடிக்கொண்டு இருக்கிறார்கள் சாதியை விட வர்க்க நலனே முக்கியம் என்று
*******
Swara
கேவலம் போலீஸே இவ்வளவு அராஜகம் செய்கிறதென்றால் காஷ்மீரில் ராணுவம் எவ்வளவு அராஜகம் செய்திருக்கும் 😟
*******
Aazhi Senthil Nathan
தொலைக்காட்சி ஊடக ஆசிரியர்கள்/பொறுப்பாளர்களுக்கு ஒரு செய்தி…
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் என்கிற செய்தி சன் நியூஸ், சத்தியம் என ஓரிரு சேனல்களில்தான் வந்திருக்கிறது. மற்றவற்றில் இல்லை என்று தெரியவருகிறது. ( நானும் அவசர அவசரமாக தேடிக்கொண்டிருக்கிறேன்…)
தொலைக்காட்சி எடிட்டர்கள், செய்தியாளர்களுக்கு ஒரு ஆலோசனை.
தமிழ்நாட்டில் நீங்கள் நேர்மையான, உண்மையைச் சொல்லத்தயங்காத செய்தி சேனல்களாக தொடரவிரும்பினால், உண்மையைச் சொல்லுங்கள்.
உண்மையைச் சொல்லத் தவறினால், எங்களுக்கு எந்த இழப்புமில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் நொடிப் பொழுதுக்குள் உண்மை பரவிவிடும். நீங்கள் நம்பகத்தன்மை இழந்துவிடுவீர்கள். சில செய்தித்தாள்களைப் போல irrelevant ஆகிவிடுவீர்கள்.
உங்கள் சகாவாக இந்தப் பதிவைப் போடுகிறேன். நிர்வாகம் தயங்கினால் அதனுடனும் போராடத்தயங்காதீர்கள்.
*******
Mahendran Nagarajan
தோழர் நேற்று விவாதத்தில் ,இந்த கருத்தை பதிந்தபோது, நெறியாளர் ஜென்ராம்,”இந்த சம்பவம் தொடர்பாக உங்கள் கருத்துகளையும்,விவாதங்களையும் மட்டுமே நாங்கள் ஒளிபரப்பும் கட்டாயத்தில் இருக்கிறோம்”என்று சற்று உறுத்தலுடன் கூறினார். அந்த வார்த்தைகள் செய்தி நிறுவனங்களுக்கு உள்ள சார்பு நிலை,அரசுகளின் நிர்பந்தம் என அனைத்தையும் சுட்டியது.
*******
Mathavaraj
ஒரு நூற்றாண்டுக்கு முன், வ.உ.சி கைதையொட்டிய தூத்துக்குடி எழுச்சியை அடக்குவதற்கு கலெக்டர் ஆஷ் துப்பாக்கிச் சூடு நடத்தினான். அவனுக்கு நேர்ந்தது உலகமே அறியும். ஆஷ்துரைகளே! வரலாறு மீண்டும் எழும். தக்க பாடத்தையும், பதிலையும் எழுதும்.
*******
Karthik Meka
நியூஸ் 7 , புதியதலைமுறை, பாலிமர், தந்தி எல்லாம் நடுநிலை ஊடகம் என்று விளம்பரம் செய்ததோ அதற்கு முற்போக்குகள் ஆதரவு கரம் நீட்டினார்களோ. அந்த ஊடகத்தை எல்லாம் முற்போக்கு என்று தூக்கி பிடித்தார்களோ அவர்களே முதல் அரசியல் திருடர்கள். இந்த அரசியல் தான் பேசுவோம் என்று இருக்கும் சன் குழுமத்தையோ, ஜெயா டிவி, கேப்டன் டிவி, வசந்து டிவி, வெளிச்சம் டிவி, மக்கள் டிவிகளை பார்த்து விட்டு போகலாம். நடுநிலை என்பது தமிழ் சமூகத்தின் சாபக்கேடு என்பதை எப்போது புரியபோகிறம் நாம் ?
*******
Mahendra Kumar
காலை வணக்கம்! இனி என்ன நடக்கும்?
ஆலையை மூடச்சொல்லி வழக்கு நடக்கும். நீதிமன்றம், விளக்கம் கேட்டு அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்! அரசாங்கம், ஸ்டெர்லைட் ஆலை எந்த அளவு பாதுகாப்பானது… அதன் மூலம் உண்டாக்கப்படும் நேரடி, மறைமுக வேலை வாய்ப்புகள் என்ன என்பது உள்ளிட்ட தரவுகளை எடுத்துப்போடும்!
ஒரு சாரார் எதிர்க்கிறார்கள் என்பதற்காக அரசு அடிபணிந்தால், இப்படியே எல்லா தொழிற்சாலைகளையும் மூடச்சொல்லி போராடுவார்கள்… அப்படி மூடினால் நாட்டின் தொழில் வளம் என்னாவது… யார் தைரியமாக முதலீடு செய்து தொழில் தொடங்க முன் வருவார்கள்… எப்படி பொருளாதாரம் உயரும் என்றெல்லாம் வாதிடுவார்கள்!
நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொள்ளும்! சில பாதுகாப்பு பரிந்துரைகளோடு, தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கி உத்தரவிடுவார்கள்!
இந்தப்போராட்டத்தின் வீரியம் தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டு விடும்! இடிந்தகரை போராட்டத்தை விட சிறந்த உதாரணம் இருக்கமுடியாது. என்ன ஆனது? கடைசிவரை அணு உலையை நிறுத்தமுடியவில்லையே?
எல்லாவற்றையும் போராடித்தான் பெறவேண்டுமென்றால், எவ்வளவு நாள் தான் மக்கள் போராடுவார்கள்? அவர்களும் ஒருநாள் களைத்துப்போவார்கள்… போராட்டங்களை கைவிட்டு, பிழைப்பை பார்க்க போய்விடுவார்கள்! இந்தியாவில் உரிமைகளுக்கான – வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களின் நிலை இது தான்! மாநில நலன்களை விட்டுக்கொடுக்காத – தன்மானம் மிக்க தலைமை வரும்வரை, மத்திய அரசாங்கத்தின் அடக்குமுறை அரசியல் தொடரும்!
*******
தோழர் Bala Bharathi
தொடர்கிறது துப்பாக்கிச்சூடு.
உயர்கிறது வீரத்தின் அளவு.
பிரதமரே, முதலமைச்சரே
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரே, எஸ்பியே
இன்னும்பிற அதிகாரவர்க்கமே
எங்களை கொல்லத்தானே போகிறீர்கள்.
அதற்குமுன்னால்
வெனிஸ்டாவைக்கொன்ற
காவலனை அனுப்புங்கள்.
அந்தச்சிறுமியின்
தொண்டைக்குள் இருந்த
வார்த்தைகளுக்கே பயந்துவிட்டீர்களே
வீரம் என்பது ஆயுதத்திலா இருக்கிறது?
அற்பனே!
பத்தாம்வகுப்பு சிறுமியின் புத்தியில் இருக்கிறது .
இந்தக்கோழைகளிடம்
குண்டடிபட்டு சாக எந்தவீரர்களுக்கும்
விருப்பமில்லை.
எங்களைக்கொல்ல வேண்டுமா
எங்களைப்போலவே ஆயுதமேந்தாத இலட்சியமேந்திய
ஒருவீரனை மட்டும் அனுப்புங்கள்
இல்லையென்றால் எங்கள் மரணத்திற்கு
தரும் பத்துலட்சத்தை
துப்பாக்கியேந்திய
அந்தப்பிணங்களுக்கே
தந்துவிடுங்கள்
மாண்புமிகுக்களே..
*******
Anbalagan Veerappan
தூத்துக்குடியில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தி, பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக 78பேர் கைது. சற்று நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்.
*******
Arunachalam Elagnairu
சுடப்பட்டது தீவிரவாதிகள் தான் – ஆவடி குமார்
மக்கள் விரோதக்கும்பல் ஆட்சிசெய்தால் மக்கள் தீவிரவாதிகளாகக் கூட மாறுவார்கள் கழிசடைகளே
*******
M.m. Abdulla
கூடன்குளம் அணு உலைக்கு எதிராகக் கூடிய போதோ, நியூட்ரினாவுக்கு எதிராகக் கூடிய போதோ சுட்டிருந்தால் கூட அரசின் திட்டத்தை எதிர்ப்பதால் அரசு சுட்டது (!) என்று நினைக்கலாம்! ஆனால் மோடியின் நண்பரான (அனில் அகர்வால்) ஒரு தனிநபரின் நிறுவனத்திற்கு ஆதரவாக ஸ்னைப்பர் துப்பாக்கிகளைக் கொண்டு சொந்த மக்களை அரசு சுட்டுக் கொல்கிறது என்றால் இது யாருக்காக நடக்கும் அரசு?
மக்களின் நலத்திற்காக யார் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைத்தனரோ அவர்களை குறி வைத்துப் படுகொலை செய்திருக்கிறது அரசு.
இதன் மூலம் மோடி அரசு தனது எடுபிடி எடப்பாடியின் மூலம் தமிழகத்திற்குத் தெளிவாக ஒரு செய்தியைச் சொல்லி உள்ளது… “நாங்கள் ஹைட்ரோகார்பன் கொண்டு வருவோம், நியூட்ரினோ கொண்டு வருவோம், நீட் கொண்டு வருவோம்..உங்களுக்குப் பிடிக்காத எதை வேண்டுமானாலும் கொண்டு வருவோம். எதிர்த்தால் சுடுவோம்..கொல்லுவோம்”.
*******
Mahendra Kumar
காவல்துறை அரசின் ஏவல் துறை என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது. வன்முறையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக சுட்டார்களாம்.
வன்முறையாகவே இருக்கட்டும். தண்ணீரை பீய்ச்சி அடித்தல், கண்ணீர் புகை குண்டுகள் இதையெல்லாம் ஏன் உபயோகிக்கவில்லை? அப்படி என்ன தீவிரவாதிகளா அங்கு கலவரம் செய்தார்கள்?
காவல்துறையினருக்கும் ஒரு உணர்வே இருக்காதா? அவர்களுக்கும் சேர்த்து தானே இந்தப்போராட்டம்? துப்பாக்கியால் சுடச்சொல்லி உத்தரவு வந்தால், ‘அப்பாவி மக்கள் அநியாயமாக பலியாவார்கள்’ என்று சொல்லி சுட மறுத்திருக்கலாம் தானே? உயர் அதிகாரிகள் மாற்றுவழிகளை ஏன் பரிந்துரைக்கவில்லை? அப்பட்டமான படுகொலை இது! போராட்டத்தை வழி நடத்தியவர்களாக பார்த்து போட்டுத்தள்ளி விட்டார்களோ என்று தோன்றுகிறது!
இவர்களே சுட்டுக்கொல்வார்கள்… பிறகு இவர்களே அதற்கு ஆணையம் அமைத்து விசாரிப்பார்கள்! அந்த விசாரணை நியாயமாக நடக்கும் என்று நாம் நம்பவேண்டும்! இதுவரை அடிமை அரசாக மட்டுமே இருந்த எடப்பாடி குரூப், இப்போது கொலைகார அரசாக உருவெடுத்திருக்கிறது! அவர்கள் செய்தது வன்முறை என்றால் நீங்கள் செய்ததற்கு என்ன பெயர்?
தூத்துக்குடி படுகொலை, திட்டமிடப்பட்ட அரச பயங்கரவாதம்!
*******
இரவிக்குமார்
Sources : All shops shut in Thoothukudi for the third day. No water or food available for the journalists who went there for reporting. Hundreds of foreign tourists in Kanyakumari, unable to use Credit cards or withdraw cash due to blocking of internet. Utter chaos prevailing.
கிடைத்துள்ள தகவல்களின் படி: தூத்துக்குடியில் மூன்றாவது நாளாக அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களுக்கு தண்ணீரோ, உணவோ கிடைக்கவில்லை. இணையம் தடைசெய்யப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் இருக்கும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்களது கிரெடிட் கார்டுகளை உபயோகித்து பொருட்கள் வாங்கவோ பணம் எடுக்கவோ முடியவில்லை. மிகப்பெரும் குழப்பநிலை நீடிக்கிறது
*******
Magudeswaran Govindarajan
காவல்துறையின் காவல் அமைப்புகள், சிந்தனை முறைகள், முரணை எதிர்கொள்ளும் வகுபாடுகள் ஆகிய எல்லாமே பழங்கற்காலத்தில் இருக்கின்றன. இருபத்தொன்றாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரையிலான குடிமக்களின் அறிவு வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளாமல் வெள்ளையன் கற்றுக்கொடுத்த பாடங்களுக்குள்ளாகவே காவல்துறை உழல்கிறது. இன்றைய பள்ளி மாணாக்கர்கள் வரைக்கும் ஆயிரம் செய்திகள் எளிதில் எட்டிவிடுகின்றன. எவ்வொரு தனியாளும் தொண்ணூறுகள் வரைக்கும் இருந்ததைப்போன்ற அறியாமையில் இல்லை.
அவர்கள் ஒன்றுபோல் சிந்திப்பதை இனி யாரும் தடுக்க முடியாது. ஒன்று திரள்வதைத் தடுக்க எதுவுமே செய்ய இயலாது. அவ்வாறு திரள்வது குறுங்குழுத் தன்மையுடையதாக இராது. காய்ந்த புற்கூட்டத்தில் தீப்பற்றுவதுபோல் கடுகிப் பரவும்.
அவர்களைக் காவலர்களின் உதவியோடு எதிர்கொள்வது அரசின் மடைமை. தொடரும் பேச்சு வார்த்தைகளின் வழியாக உரிய தீர்வுகளை விரைந்து அடைந்து மட்டுப்படுத்த வேண்டும். ஆட்சியாளர்களும் அரசுத்துறையினரும் அவர்களிடையே தொடர்ந்து தென்பட வேண்டும். காணாத்தலையர்களாகவும் கண்டுகொள்ளாதவர்களாகவும் ஒளிவதைப்போன்ற மடைமை வேறில்லை. அத்தகைய போக்கு சூட்டைப் பெருக்கிவிடும்.
முப்பது நாற்பதாண்டுகளுக்கு முந்திய அறியாக் குடிகளா இவர்கள் ? அத்தகைய கண்மூடித்தனமான அறியாமையில் அரசுதான் இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. மக்களை நோக்கிக் கொலைக்கருவியை நீட்டியது கொடுந்தவறு. கூடுவது, குழுமுவது, ஊர்வலம் செல்வது, முழக்கமிடுவது என்பவை அறவழியில் எதிர்ப்பவர்களுக்கான இறுதி வழிகள். எதிர்க்கக் கூடும் மக்கள் கொலைக்கருவிகளை எப்போதும் தொடமாட்டார்கள். பிள்ளைகள் முதியவர்கள் அடங்கிய கூட்டத்தைக் கலைக்க கொலைக்கருவி பயன்படுத்தப்பட்டது கண்டிக்கத்தக்கது. நம் காவலமைப்புகள் எண்பதுகளில் தேங்கிக்கிடக்கின்றன என்றே தெரிகிறது.
அரசுக்கும் மக்களுக்கும் முரண் என்றால் காவல்துறை இருதரப்புக்கும் காவலாக இருக்க வேண்டும். கொல்லும்படி உத்தரவு வந்தாலும் அதை ஏன் ஏற்க வேண்டும் ? கண்ணீர்ப்புகை, வான்சுடல் என்னும் வரம்புகளோடு நிற்க வேண்டும்.
கொல்கருவிகளையும் அதிகாரத்தையும் நல்லரசு நடத்த விரும்புவோர் நம்பமாட்டார்கள். அவற்றையே நீட்டுவீர் எனில் மக்கள் அச்சப்படவும் மாட்டார்கள். ஆலையை நிறுவியபோது அது தொழில்வாய்ப்பாகக் கருதப்பட்டது, இன்றதன் தீமை தெரிந்துவிட்டது… நிகழ்காலத்திற்கு ஏற்ற முடிவினைத்தான் அரசு எடுக்க வேண்டும்.
காலத்தின் மாற்றத்தை உணர்ந்து அரசும் காவல்துறையும் தங்களை மாற்றிக்கொள்ளட்டும். கொல்வது, மிரட்டுவது, துரத்துவது, அடிப்பது, ஒடுக்குவது போன்ற பாடாவதி அணுகுமுறைகளைத் தூக்கி வீசட்டும். மக்களை நாடட்டும்.
*******
Kavin Malar
இதுவரை இச்சம்பவத்தை நான் பொதுவெளியில் எழுதவோ பேசவோ இல்லை. இன்றைக்குப் பேசியாகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
மேட்டூரில் ஒரு தொழிற்சாலை உள்ளது. மால்கோ என்று பெயர். வேதாந்தாவுக்கு சொந்தமான நிறுவனம் அது. அந்த நிறுவனம் வெளியேற்றும் கழிவுகளாலும் புகையினாலும் சுற்றுவட்டாரப் பகுதி கிராமங்களில் புற்றுநோய் உட்பட பல தோல் நோய்கள் உண்டாக்கி மக்கள் அவதியுறுகின்றனர். இக்கிராமங்களுக்குச் சென்று மக்களிடம் பேச உண்மை அறியும் குழுவின் ஒரு நபராக நானும் சென்றிருந்தேன். அது 2013. அக்கிராமங்களில் மக்கள் படும் அவதியை நேரில் பார்த்தோம். பொதுவாக உண்மை அறியும் குழு பாதிக்கப்பட்டவர்களை மட்டும் பார்க்காது. அது தொடர்புடைய அதிகாரிகளையோ அல்லது மக்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களையும் சந்தித்துப் பேச முயல்வது வழக்கம். அந்த வகையில் நாங்கள் மால்கோ நிறுவனத்துக்குச் சென்றோம். அங்கு பொறுப்பில் இருந்த ஒருவரிடம் பேசினோம். அவர் இன்முகத்தோடு எங்களை வரவேற்றுப் பேசினார்.
“நாங்கள் அக்கிராமங்களுக்குச் சென்று மாதமொரு முறை மருத்துவ முகாம்கள் நடத்துகிறோம்” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். அதாவது இவர்களுடைய தொழிற்சாலையால்தான் மக்களுக்கு நோய்களும் வருகின்றன. இவர்களே மருத்துவமும் பார்ப்பார்களாம். பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்களாம். அவருடைய பதிலை பதிவு செய்துகொண்டு திரும்பினோம். திரும்பும் வழியில் பொங்குமாங்காவிரிக்கு அருகே சிறிது நேரம் நின்று அதை ரசித்துவிட்டு காரில் ஏறி ஒரு சாலையில் பயணித்தோம்.
ஆளரவமற்ற சாலை அது. எங்கள் வாகனம் செல்லும் வழியில் இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனம் ஒன்றின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அருகே செல்லச் செல்ல ஏதோ விபரீதமாய்ப் பட்டது. ஆனால் எனன்வென்று விளங்கவில்லை. ஒரு நபர் கையில் பெரிய கல் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அது எங்கள் வாகனத்தை நோக்கி வந்தது. குறி தப்பி வாகனத்தின் மேற்கூரையில் விழுந்தது. அந்தச் சத்தத்தில் அனைவரும் அதிர்ந்துபோனோம். அது ,மட்டும் கண்ணாடியைத் தாக்கி இருந்தால்…நினைத்தே பார்க்கமுடியவில்லை. எல்லோரும் பதட்டமாகி ஒருவரையொருவர் காப்பாற்றுவதற்காக ‘குனிங்க…ஒளிஞ்சுக்கோங்க…குனிங்க’ என்று அலறினோம். நான் முன்சீட்டில் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். டிரைவரிடம் ‘வேகம் வேகம். நிற்காம ஓட்டுங்க.. ” என்று நான் கத்தினேன். ஆனால் மீண்டும் மீண்டும் கற்கள் வந்து தாக்கின. கண்ணாடிகள் உடைந்தன. பின்னால் அமர்ந்திருந்த தோழர் ஒருவரின் தலையை உரசிக்கொண்டு ஒரு கல் வந்து விழுந்தது. அன்றைக்கு ஓட்டுநர் கொஞ்சம் சாமர்த்தியமாகவும் வேகமாகவும் இல்லையெனில் எல்லோர் மண்டையும் உடைந்திருக்கும்.
மின்னல் வேகத்தில் அவர் வாகனத்தை ஓட்ட, இரு சககர வாகனத்தில் கற்களை எரிந்துகொண்டே அவர்கள் துரத்தினர். ஆனால் காரின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை அவர்களால். மிக வேகமாக பிரதான சாலையை எங்கள் கார் தொட்டுவிட அங்கே மக்கள் நடமாட்டமும் போக்குவரத்தும் அதிகமிருக்கவே அந்த நபர்கள் எங்களை அதன் பின் தொடரவில்லை.
நாங்கள் காவல் நிலையத்துக்குச் சென்று வண்டியை நிறுத்தி புகாரளித்தோம். தோழர் கொளத்தூர் மணியிடம் தகவல் சொல்லவும் அவர் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை உடனே அனுப்பி வைத்தார். உடனடியாக செய்திச் சேனல்களில் அது செய்தியானது. குறிப்பாக புதிய தலைமுறையில் அதுகுறித்து விரிவாக செய்தி வெளியிட்டதாக நினைவு. அதன் பின் அந்த நபர்கள் யாரென விசாரித்ததில் அது வேதாந்தாவைக் காக்க மால்கோவால் ஏற்பாடு செய்யப்பட்ட நபர்கள் என்று தெரிந்தது. இன்னமும் வழக்கு இருக்கிறது.
ஆக ஓர் உண்மையறியும் குழு என நான்கைந்து நபர்கள் வந்து விசாரித்து அறிக்கை அளிப்பதைக்கூட விரும்பாத வேதாந்தா, ஸ்டெர்லைட்டுக்காக இத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் போராடுவதை எப்படி விரும்பும்? நான்கைந்து பேருக்கு தாக்குதல் என்றால்? ஆயிரக்கணக்கானோர் போராடினால் என்ன செய்யும்? இரும்புத் தடிகளால் அடிகளையும் துப்பாக்கிச் சூட்டையும் அளித்திருக்கிறது வேதாந்தா நிறுவனம். காவல்துறை,அரசு, அதிகாரிகள் என எல்லோரும் துணை நின்று இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தி உயிர்குடித்திருக்கிறார்கள்.
எங்களைத் தாக்க திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அடியாட்களுக்கும், இந்த அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. வயிறு எரிகிறது வேதாந்தாவுக்கு அடியாள் வேலை செய்யும் இந்த அரசுகளின் கீழ் இருப்பதே ஒவ்வொரு நொடியும் நெருப்பில் நிற்பது போல் இருக்கிறது. அவமானமாகவும் இருக்கிறது. சொந்த மக்களை கொன்று குவிக்கும் இந்த அரசுகள் அழியட்டும்.
*******
Mugil Siva
போலீஸ் அராஜகம் செய்யும் வீடியோக்கள் நேற்றும் இன்றும் அதிகமாகப் பரவியதல்லவா.தூத்துக்குடியில் இணையத்தைத் துண்டித்துவிட்டார்கள். அடுத்து மொபைல் நெட்வொர்க்குகளும் முடக்கப்படலாம்.
ஊரில் பல்வேறு நண்பர்களிடம் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். அவர்கள் சொல்லும் தகவல்கள் கண்ணீரைத் தருகின்றன. நம் ஊரிலா இப்படி என்ற அச்சத்தையும் அதிர்ச்சியையும் சேர்த்தே வரவழைக்கின்றன.
144 தடை உத்தரவு என்றால் என்ன, அதன் கட்டுப்பாடுகள் என்னவென்றே தெரியாத பாமர மக்கள் நிறைந்த ஊர்தான் தூத்துக்குடி. கடந்த இருபது வருடங்களில் பெரும் கலவரத்தையோ, அடக்குமுறையையோ இந்த இளைய தலைமுறையினர் கண்டதில்லை. பாஞ்சாலங்குறிச்சி, வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு கடந்த மே 10 முதல் மே 12 வரை 3 நாட்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போதெல்லாம் தூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. எந்தக் கெடுபிடியும் விதிக்கப்படவில்லை.
ஆக, அறியாமையால், அரசின் சதி புரியாமல் அங்குமிங்கும் ஏதோ ஆர்வக்கோளாறில் திரிபவர்கள் போலீஸின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இன்றைக்கு எனக்குத் தெரிந்த பதின்ம வயதுச் சிறுவன், விளையாட்டுப் போக்கில் வேடிக்கை பார்க்கச் சென்று காலில் குண்டடிபட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான். (காலில் ரத்தம் வழிய, தலைதொங்க, ஒரு சிறுவனை இருவர் பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சியை நீங்கள் கண்டிருக்கலாம்.)
நான் விசாரித்தவரையில் ஊரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, யாரும் வெளியில் கூடக்கூடாது, கூட்டமாக நிற்கக்கூடாது என்று காவல் துறை எங்கும் மைக்கில் அறிவித்தபடியும் எச்சரித்தபடியும் செல்லவில்லை. நேரடியாக தெருக்களுக்குள் கும்பலாகப் புகுந்து, யாராவது தென்பட்டால் கண்மூடித்தனமாகத் தாக்குகிறார்கள். அண்ணாநகரில் இன்று கொல்லப்பட்ட இளைஞன் அப்படி பலியானவனே. தவிர, படகுகளை எரித்துள்ளார்கள். இன்னும் பல அராஜக வீடியோக்களைக் கண்டிருப்பீர்கள்.
ரயில்கள் வழக்கம்போல இயங்குகின்றன. ஆனால், ஊர் எல்லைவரை மிக மெதுவாக. காரணம், தீவிரவாதிகள் தண்டவாளத்தை சேதப்படுத்தியிருக்கலாமாம். எம் மக்கள் செல்லும் ரயிலை அதிகார மையம் ஏதாவது செய்துவிடுமோ என்று நாங்கள்தான் அஞ்ச வேண்டும். இன்று ரயில் ஏறச்சென்ற உறவுக்கார இளைஞன் ஒருவன், ரயில் கிளம்பத் தாமதமாகும் என்பதால் பிளாட்பாரத்தில் காத்துக் கொண்டிருந்தபோது, போலீஸ்காரர் ஒருவர் லத்தியால் அடிக்க வந்திருக்கிறார். ‘உள்ள ஏறுல மரியாதையா…’ என்று மிரட்டியிருக்கிறார்.
இன்று மதிய நேர தொழுகைக்குச் சென்ற என் நண்பன் ஒருவன், பள்ளிவாசல் அருகில் கண்ணீர்ப்புகை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறான். பள்ளிவாசலுக்குள் புகுந்ததால் ரப்பர் தோட்டாக்களிடமிருந்து தப்பியிருக்கிறான். நேற்றிரவில் இன்னொரு பள்ளி வாசலின் வெளியே நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்கள் போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இப்படி பல சம்பவங்கள். இவையெல்லாம் மக்களுக்கு காவல்துறை மீதான கோபத்தை பல மடங்கு அதிகப்படுத்தியிருக்கிறது. தெருவுக்குள் போலீஸைக் கண்டாலே பதறி, பயத்தில் கல்லைக் கையில் எடுக்கிறார்கள். வீசுகிறார்கள். பலிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
அடுத்த ஐந்து நாள்களுக்கு இணையத்தை முடக்குவதாக மொபைல்களில் செய்திகள் வந்துள்ளன. எனில், அடுத்தடுத்த நாள்களில் இன்னும் என்ன வெறியாட்டம் ஆடப்போகிறார்களோ என்று மனம் பதறுகிறது. ஒன்று மட்டும் புரிகிறது. தென்னிந்தியாவின் காஷ்மீராக தூத்துக்குடி முடக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஊரே மயான அமைதியுடன் இருக்கிறது. ஆம், ஊரே மயானமாகியும் இருக்கிறது.
#TuticorinMassacres #SterliteProtest #தூத்துக்குடிபடுகொலைகள்
*******
Arul Ezhilan
தூத்துக்குடி கொலைகள் குஜராத் மாடல் கொலைகள் என்கிறார் காவல்துறை அதிகாரி!
சஞ்சீவ் பட்(ஐ.பி.எஸ்)
தூத்துக்குடி சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். அமைதியான போராட்டக்காரர்கள் வேதாந்தாவின் நிறுவனமான ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் கொல்லப்பட்டுள்ளனர். இது குஜராத் மாடலின் எடுப்பான நடைமுறை வெளிப்பாடு. அஇஅதிமுக தங்களது பின்புறத்தை சங்கிகளுக்கு விற்றுவிட்டார்கள் போலத் தெரிகிறது
*******
தமிழ் சசி
அடிமை அமைச்சர் மாபா.பாண்டியராசன்
தூத்துக்குடியில் சுகாதாரமாகத் தாங்களும், தங்கள் குழந்தைகளும் வாழ வேண்டும் என்ற காரணத்திற்காகப் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்ற தமிழக அடிமை எடப்பாடி அரசின் அமைச்சர் பாண்டியராசன் அமெரிக்காவிற்குத் தமிழ்ச்சங்கங்களின் அழைப்பில் வரக்கூடாது. தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான பேரவை, உடனடியாகப் பாண்டியரசானுக்குக் கொடுத்த அழைப்பினை திரும்பப் பெற்று வலுவாகத் தங்கள் கண்டனத்தைத் தமிழக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இங்குள்ள அனைத்து தமிழ்ச்சங்கங்களும் இதனைச் செய்ய வேண்டும்.
கட்சி பேதமின்றி எந்தத் தமிழக அரசாக இருந்தாலும், அந்தத் தமிழக அரசாங்கங்களுடன் நல்லுறவை, அமெரிக்காவில் உள்ள அமைப்புகள் கடைபிடிப்பது நல்லது தான். காரணம், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நாம் மதிக்க வேண்டும். ஆனால் இந்த அரசு அப்படியானது அல்ல. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் தில்லியின் எசமானர்கள் சொல்படி செயல்படும் அடிமை அரசாங்கம்.
தற்போதையச் சூழல் அசாதாரணமானச் சூழல். தமிழர்களை அடக்கி, ஒடுக்கி அடிமையாக நடத்த முயலும் தில்லியின் அடிமைகளாக உள்ள எடப்பாடி அரசாங்கம், தமிழர்களின் அரசாங்கம் அல்ல.
எனவே பேரவை, அடிமை அரசாங்கத்தின் அமைச்சராக உள்ள மாபா.பாண்டியராசனுக்கு கொடுத்த அழைப்பினை திரும்பப் பெற வேண்டும்.
*******
Selva Prabhu
எனது தம்பியின் இரண்டு நண்பர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீஸ் பொறுக்கிகள் அடித்து இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அந்தச் சிறுவர்கள் இருவருக்கும் வயது 15. இதுவரை அந்த இரண்டு பேரையும் போலீஸ் பொறுக்கிகள் எங்கே வைத்திருக்கிறார்கள் என்ற விவரம்கூட யாருக்கும் தெரியவில்லை. தெரியப்படுத்தவுமில்லை.
#Tuticorin_Massacre #Resign_EPS #No_invest_to_Vedanta #Ban_Sterlite
*******
Poornachandran Ganesan
தற்போது தூத்துக்குடியில் காவல்துறை வீடு வீடாக சென்று பெண்கள், சிறுவர்கள் என அனைவரையும் அடித்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றை இருட்டடிப்பு செய்யவே இணையம், தகவல் பரிமாற்றம் தடை செய்யப்பட்டுள்ளது.
நண்பர் காசிவிசுவநாதன் அங்கு தெருத்தெருவாக போலீஸ் ஈடுபடும் அராஜகக் காட்சி ஒன்றை மெசஞ்சரில் அனுப்பினார். அதை இங்கு வெளியிட எனக்குத் தெரியவில்லை.
*******
Elangovan Muthiah
சட்டப்படி மெஜாரிட்டி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தும் ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருக்கிறது ஒரு கட்சி. அதற்குப் பெயர் “மாநில அரசு”
இந்த அநீதியைத் தெரிந்தே அனுமதித்துக்கொண்டு, வழக்கைத் தள்ளிப்போட்டபடியே, இந்த அரசைக் காக்கும் இடத்திற்குப் பெயர் “நீதிமன்றம்”
பெரிய மனிதர்களுக்குப் பாலியல் விருந்தளிக்க, அதற்கு மாணவிகளைப் பயன்படுத்த ‘ஆள் பிடிக்கிறார்’ ஒரு பெண். அவருக்குப் பெயர் “பேராசிரியர்”
அப்படி ‘ஆள் பிடித்த வழக்கில்’ தனது பெயர் சம்பந்தப்பட்டது தெரிந்தவுடனே தானே ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து, அதன் அறிக்கையைத் தானே வாங்கி வைத்துக் கொள்கிறார் ஒருவர். பேட்டியெடுக்க வந்த பெண் நிருபரின் கன்னத்தைத் தடவுகிறார் அந்தப் பெரிய மனிதர். அவருக்குப் பெயர் “மாநில ஆளுனர்”
மருத்துவக் கல்வி படிக்க விரும்பும் இந்த மாநிலத்தின் குழந்தைகளுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் கொடுக்கப்படுகிறது. அலைச்சலில் சாகிறார் தந்தை ஒருவர். குக்கிராமத்தில் படிக்கும் குழந்தைக்கும், தலைநகரில் படிக்கும் குழந்தைக்கும் ஒரேவிதமான தேர்வு நடத்தப்பட்டு அவர்களது கனவுகள் சிதறடிக்கப்படுகின்றன. அதற்குப் பெயர் “தகுதித் தேர்வு”
பெண் பத்திரிக்கையாளர்கள் படுக்கையில் சமரசம் செய்துதான் வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “கட்சிப் பிரமுகர்”
அவரைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்திலிருக்கும் முக்கியமான ஒருவரோடு ஒரு நிகழ்வில் கலந்துகொள்கிறார் அந்த நபர். “அவரைப் பிடித்துத் தருவது என் வேலை அல்ல” என்கிறார் அந்த முக்கியமானவர். அவருக்குப் பெயர் “மத்திய அமைச்சர்”
கைது செய்யப்பட வேண்டியவரின் வீட்டுக்கே காவல்துறை பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கிறது. காரணம் செல்வாக்கு மிக்க அவரது உறவினர். அவருக்குப் பெயர் “தலைமைச் செயலாளர்”
மக்களின் உடல்நலத்தைப் பாதிக்கும் போதைப்பொருளான குட்கா ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களாகக் குற்றம் சாட்டப்படுகிறார்கள் இருவர். ஒருவருக்குப் பெயர் “சுகாதாரத்துறை அமைச்சர்“. இன்னொருவருக்குப் பெயர் “காவல்துறை உயரதிகாரி”
தீவிரவாதிகளுக்கு எதிரான ‘துல்லியத் தாக்குதல்’ போல குறிவைத்துச் சுட்டபிறகு, காயம்பட்டவர்களை மருத்துவமனைகளிலும் சென்று அடித்து நொறுக்குகிறது சீருடை அணியாத ஒரு கூட்டம். அதற்குப் பெயர் “காவல்துறை”
விளம்பர இடைவேளைகளுக்கு நடுவே, மக்களுக்குப் போக்குக் காட்டியபடியே, பின் வேறு வழியில்லாமல் செய்தியின் தீவிரத்தைக் குறைத்து வெளியே பரப்புகின்றன சில நிறுவனங்கள். விவாதங்களின் மூலம் அரசுத் தரப்பை நியாயப் படுத்தும் வேலையைத் தெளிவாகச் செய்யவும் தெரியும் அவர்களுக்குப் பெயர் “ஊடகங்கள்”
தனது மாநிலத்தின் மக்கள் சுடப்பட்டுச் சாகும்போது “துப்பாக்கிச் சூடு தவிர்க்க முடியாதது” என்கிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “மாநில அமைச்சர்”
“இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தனக்குத் தெரியாது” என்று சொல்லிவிட்டுச் செத்தவர்களுக்குப் பத்து லட்சம் ரூபாய் பிச்சையிடுகிறார் ஒருவர். அவருக்குப் பெயர் “முதலமைச்சர்” இவையெல்லாவற்றுக்கும், விட்டுக்கொடுக்காமல் முட்டுக் கொடுக்கும் அற்பப் பதர்களுக்குப் பெயர் “தேச பக்தர்கள்” இதையெல்லாம் மனசாட்சியில்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பிற்குப் பெயர் “தேசம்”
ஆனால், தங்களது வாழ்வாதாரத்திற்கும், தங்களது ஊரின் சுற்றுப்புறச் சூழலுக்கும், தங்கள் குடும்பத்தினரின் உடல்நிலைக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கும், போராட்டங்களை ஒருங்கிணைத்தவர்களுக்கும், இவ்வளவு ஏன், வாய்வழியே சுடப்பட்டுச் செத்த ஒரு பத்தாம் வகுப்பு மாணவிக்குமான பெயர் மட்டும் “Fringe Elements”
*******
Samaran Nagan
மண்ணை காக்கும் இந்த மாபெரும் போராட்டத்தில் நாம் வெல்லப்படுவோம் அல்லது கொல்லப்படுவோம், ஏனென்றால் தப்பித்து ஓடுவதற்கு நமக்கு இடமில்லை.
– கென் சரோ விவா
*******