Wednesday, April 16, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பொய்வழக்குப் போட்டு முடக்குவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்தது போலீசு

-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு அடியாள் வேலை பார்த்து மக்களை சுட்டுக் கொன்ற போலீசு, நேற்று நள்ளிரவு வரை மக்கள் அதிகாரத்தின் பல தோழர்களை காட்டுமிராண்டித்தனமாக கடத்தி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை தூத்துக்குடி கொண்டு சென்று பொய் வழக்கு போடவும் உள்ளது.
போலீசு ஆட்சிக்கு எதிராகப் போராடும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளை ஒடுக்குவதன் மூலம் கார்ப்பரேட் ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறது போலீசு. கார்ப்பரேட் ஆட்சிக்கு முடிவு கட்டாமல் மக்களுக்கு தீர்வில்லை.

எமது அமைப்பின் மீதான இத்தாக்குதலுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் குரல் கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். போலீசால் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட எமது அமைப்பின்  நிர்வாகிகள் விவரம் பின்வருமாறு

1.கோட்டையன் – உசிலை ஆரியப்பட்டி
2.சிவகங்கை – கண்ணன்
3.சிவகங்கை – சுரேஸ் கண்ணன்
4.சிவகங்கை – அழகர்சாமி
5.காரைக்குடி – கல்யாணகுமார்
6.காரைக்குடி – மாணிக்கம்
7.திருப்புவனம் – மோகன்
8.கோவில்பட்டி – சரவணன்
9. ஆலங்குளம் – முருகன்
10. நெல்லை – கலீல் ரகுமான்
11. நெல்லை – முகமது அனஸ்
12. நெல்லை – முகமது இர்ஷத் (புமாஇமு)
13. காளையார்கோவில் – முருகன்
14. காளையார்கோவில் – உடையார்
15. காளையார்கோவில் – குருசாமி மயில்வாகனன் (தனி)

இவண்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
9962366321

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க