“தூத்துக்குடி அரிராகவன், மதுரை வாஞ்சிநாதன், பண்டாரம்பட்டி ராஜேஷ், மடத்தூர் காமராஜ், பொன்பாண்டி, மீளவிட்டான் இளவரசன், அருள்ராஜ் மற்றும் பண்டாரம்பட்டி, சில்வர்புரம், மடத்தூர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள், தூத்துக்குடி நகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த மக்கள்… ஒன்று சேர்ந்து பேரிகேடுகளை சேதப்படுத்தியும், எங்களை பணி செய்யவிடாமல் தடுத்தும், கொலை மிரட்டல் விடுத்தும், மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று FCI பாலம் அருகில் இருந்த வாகனங்களை எரித்து சேதப்படுத்தியவாறே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற….”

இவர்கள் மீது 147, 148, 188, 353, 506(ii), &3 OF TNPDL act இன் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறது தூத்துக்குடி போலீஸ்.

மடத்தூர் மக்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டதை தோழர் வாஞ்சிநாதனும் அரி ராகவனும் வினவு தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருக்கிறார்கள். அதில் எந்தவித சதியும் இல்லை சூழ்ச்சியும் இல்லை.

சதியும் சூழ்ச்சியும் இந்த FIR இல் இருக்கிறது.

வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன், ராஜேஷ் ஆகிய மூவரும் இந்தப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர்கள். கூடுதலாக வாஞ்சிநாதன் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர். அரிராகவன் தூத்துக்குடி மாவட்ட செயலர். இவையனைத்தும் யாவரும் அறிந்த உண்மைகள்.

ஆனால் தூத்துக்குடி மக்கள் நடத்திய இந்த மாபெரும் போராட்டத்தை, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சிலர் நடத்திய வன்முறையாக சித்தரித்து, கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களில் பொய்ச்செய்தி பரப்பிவருகிறது உளவுத்துறை போலீஸ்.

அந்தப் பொய்யை உண்மை என்று காட்டுவதற்காக, தோழர் வாஞ்சிநாதனை மக்கள் அதிகாரத்தின் மதுரை மாவட்ட செயலர் என்றும், அரிராகவனை தூத்துக்குடி மாவட்ட செயலர் என்றும் இந்த முதல் தகவல் அறிக்கை குறிப்பிடுகிறது.

இது முதலாவது பொய் வழக்கு. இனி, துப்பாக்கிச் சூடு வரை அடுத்தடுத்த பொய்வழக்குகள் தொடர்ந்து வரும். அனில் அகர்வாலின் ஊடகத்துறை கைக்கூலிகள் புனைகதைகளை எழுதத் தொடங்குவார்கள்.

இவை அனைத்தையும் எதிர்கொண்டு போராட நாம் தயாராவோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க