க்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆறு பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைபடுத்தியிருக்கும் எடப்பாடி அரசு, அடுத்த இரைக்காக அலையும் வேட்டை நாயைப் போல, தென் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் அதிகாரத்தின் தோழர்களைத் தெருத்தெருவாகத் தேடி அலைகிறது.

வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானப் போராட்டங்களே இனி தமிழகத்தில் தலையெடுக்கக்கூடாது என்பதை உத்திரவாதப்படுத்துவதற்கும், இதற்குத் தடையாக இருக்கும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட போராடும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படும் இயக்கங்களை முடக்குவதற்கும் இந்தச் சூழலைப் பயன்படுத்தி கொள்ள முனைகிறது, பா.ஜ.க. கும்பல்.

இதன்காரணமாகத்தான், தூத்துக்குடி கலவரத்துக்கும் 13 பேரைச் சுட்டுக்கொன்றதற்கும் மக்கள் அதிகாரம்தான் காரணம் என்றும் தமிழகத்தில் ”மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள், தீவிரவாதிகள்” ஊடுருவல் என்றும் ஊடகங்களில் வலிந்து பொய்ச்செய்தி பரப்பப்படுகிறது. சுற்றுச் சூழலை நாசமாக்கும், வாழ்வாதாரத்தை அழிக்கும் நாசகாரத் திட்டங்களை எதிர்க்கும் மக்கள் மீதும் இந்த முத்திரை குத்தப்படுகிறது.

இன்னொருபுறம், நக்சலைட்டுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க ஆர்.எஸ்.எஸ். அவசியம் தேவை என்று பேட்டியளிக்கிறார் எச்.ராஜா. பயங்கரவாதிகள் குறித்து ஊடகங்களுக்கு பாடம் நடத்துகிறார், பொன்னார். இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்று எகிறிக்குதிக்கிறார், தமிழிசை.

சேலத்தில் பசுமை வழிச்சாலை வேண்டாம் என்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பொதுமக்களைக் கூட கைது செய்து சிறையிலடைத்திருப்பதன் மூலம், பா.ஜ.க. – எடப்பாடி கும்பலின் நோக்கம் என்னவென்று அம்பலமாகியிருக்கிறது. இது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையன்றி, வேறென்ன?

அம்பலப்படுத்துகிறார்கள், டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) மற்றும் டாக்டர். வீ.சுரேஷ், தேசிய பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

பாருங்கள், பகிருங்கள்!

டி.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு).

 

வீ.சுரேஷ், தேசிய பொதுச் செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க