Monday, April 21, 2025
முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்தருமபுரி : மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரத்துக்கும் அனுமதியில்லை !

தருமபுரி : மக்கள் அதிகாரத்தின் பிரச்சாரத்துக்கும் அனுமதியில்லை !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், அதில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டும் , தருமபுரியில் நடைபெறவிருக்கும் இரங்கற்கூட்டத்திற்கு பிரச்சாரம் செய்த 7 தோழர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்துள்ளது போலீசு.

-

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்தும், துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தும்வண்ணமும்  வருகிற 20.06.2018 அன்று மாலை 4 மணியளவில் தருமபுரி நகரில் இரங்கல் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள்

இதையொட்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்கள் 18.06.2018 அன்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே மோப்பம் பிடித்து வந்த போலீசு, பிரச்சாரத்திற்கு அனுமதி கிடையாது என்று கூறி வலுக்கட்டாயமாக தோழர்கள் 7 பேரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

பிரச்சாரம் என்பது இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கருத்துரிமை. தற்போது போலீசைக் கொண்டு கருத்துரிமை பறிப்பில் ஈடுபட்டுள்ளது அடிமை எடப்பாடியின் அரசு. ஜனநாயக ஆட்சி என்பது இங்கு இல்லை. சர்வாதிகார ஆட்சியே இங்கு நடக்கிறது. இதற்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 8148573417

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க