Saturday, April 19, 2025
முகப்புதலைப்புச் செய்திதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கடலூரில் தடைபல தாண்டி மக்கள் அதிகாரம் கூட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : கடலூரில் தடைபல தாண்டி மக்கள் அதிகாரம் கூட்டம் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு கடலூர் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24.06.2018) மாலை 4 மணியளவில் இரங்கற் கூட்டம் நடைபெறவுள்ளது. இடம்: நகர அரங்கம் (டவுன் ஹால்) கடலூர். அனைவரும் வாரீர் !

-

தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை அநியாயமாக திட்டமிட்டு சுட்டுக் கொன்றது அரசு. அதனைத் தொடர்ந்து, நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கான பழியை மக்கள் அதிகாரத்தின் மேல் போடும் முயற்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவு செய்தது போலீசு.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக எந்த ஒரு நிகழ்வுக்கும் அனுமதி கொடுக்காமல் மறுத்தது அடிமை எடப்பாடி அரசு. அதனைத் தொடர்ந்து சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தியாகிகளுக்கு மக்கள் அதிகாரம் கடலூர் பகுதியின் சார்பாக எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (24.06.2018) மாலை 4 மணியளவில் இரங்கற் கூட்டம் நடைபெறவுள்ளது.

இடம்:நகர அரங்கம் (டவுன் ஹால்) கடலூர்.

நிகழ்ச்சி நிரல்:
தலைமை: தோழர் முருகானந்தம் (மண்டலக் குழு உறுப்பினர், மக்கள் அதிகாரம், விருதாச்சலம்)

இரங்கல் உரை:
திரு இள.புகழேந்தி
(வழக்கறிஞர், திமுக மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர்)
திரு ஏ.எஸ். சந்திர சேகர் (வழக்கறிஞர், உறுப்பினர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி)
திரு பா. தாமரைச்செல்வன் (வழக்கறிஞர், கடலூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர், சேலம் மாவட்ட நெறியாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி)
தோழர் குலோப் (மா.இ. செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, கடலூர்)
தோழர் அமர்நாத் (நகர செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கடலூர்)
திரு என்.இராமலிங்கம் (மாவட்ட செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கடலூர்)

திரு தென். சிவகுமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம், கடலூர்)
திரு ஆனந்த் (மாவட்ட செயலாளர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கடலூர்)
தோழர் ஸ்ரீதர் (பொறியாளர், மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மின் ஊழியர் ஜனநாயக முன்னணி)
திரு இரா. மங்கையர்செல்வன் (மாநிலத் தலைவர், மீனவர் விடுதலை வேங்கைகள், தமிழ்நாடு, புதுச்சேரி)
திரு C.குமார் (ஒருங்கிணைப்பாளர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு, கடலூர்)
திரு பூங்குன்றன் (மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம், பெரியப்பட்டு)
திரு செந்தில்குமார் (வழக்கறிஞர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர்)

நிறைவுரை:
தோழர் பாலு (மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், கடலூர்)

அனைவரும் வாரீர் !

தகவல்:
மக்கள் அதிகாரம், கடலூர்
பேச: 81108 15963

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க