போராட்டங்களை ஒடுக்கும் அரசுகளைக் கண்டித்து CPI போராட்டம் | நேரலை | Live Streaming

ஜனநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை நடத்தும் உண்ணாநிலை போராட்டம் நேரலை !

னநாயக உரிமைப் போராட்டங்களை ஒடுக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாநிலை போராட்டம் !

தமிழகத்தில் தொடர்ந்து நிலவிவரும் பாசிச ஒடுக்குமுறையும் போலீசு ராஜ்ஜியமும் மக்கள் தமது உரிமைக்காகப் போராடும் உரிமையையே ரத்து செய்து விடுகின்றன. தூத்துக்குடி படுகொலை தொடங்கி எட்டுவழிச்சாலை வரையில் போராட்டம் மட்டுமல்ல, சாதாரண நோட்டீசு கொடுத்தாலே கைது செய்து சிறையிலடைக்கும் ஒரு பாசிச நிலையில் தமிழகம் இருந்து வருகிறது. மத்தியில் ஆளும் மோடி அரசின் கண்ணசைவிற்கு ஏற்ப ஆடுகிறது அடிமை எடப்பாடி அரசு.

இந்நிலைமையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (05-07-2018) காலை 8.00 மணி முதல் மாலை 5:00 மணிவரை உண்ணாநிலை போராட்டம் அறிவித்திருந்தது. தற்போது நடைபெற்று வரும் இப்போராட்டத்தை நேரலையாக வினவு இணையதளத்திலும், வினவின் பக்கம் முகநூல் பக்கத்திலும், வினவின் யூ-டியூப் சேனலிலும் காணலாம்.

பாருங்கள், பகிருங்கள் !

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க