சட்டக் கல்வியின் இன்றைய நிலை என்ன? என்ற தலைப்பில் 27.07.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் “சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே !” என்ற தலைப்பில் சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆகியோர் ஆற்றிய உரையாற்றினார்.

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை மூடாதே ! சட்டக்கல்லூரி மாணவர் விஜயகுமார் உரை !
சென்னை சட்டக்கல்லூரி என்பது தமிழகம் முழுவதிலிருந்து வரும் மாணவர்களில் திறமையான மாணவர்களைத் தெரிவு செய்து இக்கல்லூரி வாய்ப்பு வழங்குகிறது. மேலும் நீதிமன்ற வளாகத்திலேயே அமைந்துள்ள ஒரே கல்லூரி. பல நீதிபதிகளை உருவாக்கிய பாரம்பரியம்மிக்க கல்லூரி. இக்கல்லூரியை இடம்மாற்றம் செய்ய நினைக்கிறது அரசு.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கல்லூரி கட்டிவிட்டதால் இனி இங்கு சட்டக்கல்லூரி இயங்க வாய்ப்பில்லை என சிலர் கூறுகின்றனர். ஆனால் இதே கல்லூரி செங்கல்பட்டிற்கு மாற்றப்பட்டது மீண்டும் இங்கு திரும்பி வரவழைக்கப்பட்டு தற்போதுவரை இயங்கி வருகிறது. செங்கல்பட்டிற்கென தற்போது ஒரு சட்டக்கல்லூரியையும் உருவாக்கி தந்துள்ள வரலாறு உள்ளது.
அதே போல தொடர்ந்து கல்லூரி இதே வளாகத்தில் இயங்கும். அதற்கு மாணவர்கள், வழக்கறிஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை தனது உரையில் வெளிப்படுத்தினார் மாணவர் விஜயகுமார்.
நீதிமன்றத்தை இடம் மாற்றலாமா ? வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் உரை
சட்டக்கல்லூரியை இடம் மாற்ற இவர்கள் சொல்லும் காரணங்களில் ஒன்று மாணவர்களிடையே நடந்த ஒரு மோதல் சம்பவம். எனில் நீதிமன்ற வளாகத்துக்குள்ளாக 160 ஆண்டுகளில் நடக்காத ஒரு நிகழ்வு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் தாக்கப்பட்டது எனில், நீதிமன்றத்தை இடம் மாற்றிவிடலாமா ? என்ற கேள்வியுடன் தொடங்கி ஏன் சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது என்பதையும் மாணவர்களிடம் தற்போது உள்ள விழிப்புணர்வையும் விளக்கிப் பேசினார் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார்.
சட்டக்கல்லூரி மாணவர் நாகராஜின் தந்தை ஆற்றிய உரை !
ஏழை எளிய மக்களை வழக்கறிஞர்களாகவும், நீதிபதிகளாகவும் உருவாக்கிய வரலாறு உள்ள இந்த சட்டக்கல்லூரியை இங்கிருந்து யாரைக் கேட்டு இடம் மாற்றுகிறார்கள்.
அரசு இக்கல்லூரியை மாற்ற கூறும் காரணங்களை இங்கு உள்ள வழக்கறிஞர்கள், மாணவர்களிடம் விவாதித்திருக்க வேண்டும் என்பதையும். காஞ்சிபுரத்திலும், திருவள்ளூரிலும் புதிதாக கட்டப்படுள்ள கல்லூரியை நேரில் பார்த்து அதன் அனுபவத்தில் இருந்து மாணவர்களுக்கு அங்கு படிப்பது எவ்வளவு சிரமமாக இருக்கும் என்பதையும் விளக்கிப் பேசினார்.
யூ-டியூப் காணொளி:
ஃபேஸ்புக் காணொளி:
பாருங்கள் ! பகிருங்கள் !
- வினவு களச் செய்தியாளர்