டவுளின் தேசமான கேரளாவில் பெரு வெள்ளத்தில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்காக பல நாடுகளும் உதவிகரம் நீட்ட தயார்! என்ற போது ‘56” மார்புடைய’ இந்தியாவின் பாரத பிரதமர் நானே என் மக்களை “பார்த்துக் கொள்கிறேன்” என்று வாய்சவடால் அடித்து 20,000 கோடிக்கு மேல் பொருளாதார இழப்பு அடைந்த மக்களுக்கு வெறும் 600 கோடியை பரந்த மனத்துடன் அள்ளி வீசியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க கேரள மக்களுக்கு உதவுவதற்காக தன்னார்வமுடன் பலரும் முன்வந்து நிதி திரட்டிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில்,

23.08.2018 அன்று மாணவி வளர்மதியும் தன் பங்களிப்பாக மக்களிடம் பிரச்சாரம் செய்து நிதி திரட்டும் வேலையை செய்துள்ளார். அதை தடுக்கும் விதமாக அவரிடம் தகாத முறையில் நடத்து கொண்டது போலீசு.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கேட்பது தேச பாதுகாப்பிற்கே ஆபத்து என்பது போல அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்து தங்களுடைய அடாவடிதனத்தை அரங்கேற்றி உள்ளது.

இதனைத் தொடர்ந்து “போராடினால் தேசப்பாதுகாப்பு சட்ட அடக்குமுறை ! போராடும் பெண்களுக்கு பாலியல் சீண்டல் ! போலீசின் பொறுக்கித்தனம் !” என்ற முழக்கத்தின் கீழ் மக்களை அச்சுறுத்தும் காவல் துறையைக் கண்டித்தும்;

போராடும் பெண்களின் மீது நடத்தப்படும் பாலியல் சீண்டல்களை வேடிக்கை பார்க்கும் ‘மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா’வின் வழியில் ஆட்சி நடத்தும் ‘எடப்பாடி அரசை’க் கண்டித்தும்;

பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் கடந்த 25.08.2018 அன்று சென்னை சென்ட்ரல் இரயில்நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை, தொடர்புக்கு : 94990 38982.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க