ந்தோனேசியாவில் 28.09.2018 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலாலும்(சுனாமி) அதனையடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினாலும் (7.5 ரிக்டேர் அளவு) இதுவரை சுமார் 1234 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மிகப்பெரிய பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

இந்த சுனாமி உருவாகக் காரணம் என்ன?

வழக்கமாக பூமிக்குக் கீழே அமைந்துள்ள டெக்டானிக் வகை தட்டுக்களில் மேல் கீழாக நடக்கும் மாற்றங்களினால் கடல்நீர் அலைகழிக்கப்படுவதால் ஏற்படும் பேரலைதான் சுனாமியாக உருமாறும்.

ஆனால் இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி மேற்கண்ட வகையில் ஏற்படாமல், திருகுப் பிளவுப் பெயர்ச்சியின் (Strike-slip Fault) காரணமாக, அதாவது டெக்டானிக் தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும் போது வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ ஏற்படும் ஒரு வகை பிளவுப்பெயர்ச்சியின் மூலமாக இந்த சுனாமி ஏற்பட்டுள்ளது தான் விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏனென்றால் இவ்வகை சுனாமி ஏற்படும் போது அது மிகச்சிறிய அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதே இதுவரை நிலவிவரும் கருத்தாக உள்ளது. ஒருவேளை இந்த திருகுப்பிளவுப் பெயர்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள் மிகப்பெரிய நிலச்சரிவை ஏற்படுத்தியதால் இந்த சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

படிக்க:
பேரிடர் : புயலா – அரசா ? புதிய கலாச்சாரம் ஜனவரி வெளியீடு !
கரை திரும்பாத மீனவர்கள் : காசிமேடு நேரடி ரிப்போர்ட்

மேலும் ஆழ்கடலில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும்பாலும் நிலப்பகுதியில் உணரப்படுவதில்லை; ஆனால் இந்தோனேசியாவின் பாலு விரிகுடாப் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் கடற்கரையிலிருந்து மிகக்குறைந்த தொலைவிலேயே நடந்திருப்பதால் தான் எச்சரிக்கைக் கருவிகளும் உரிய நேரத்தில் செயல்படமுடியவில்லை என்றும், மேலும் இதுகுறித்த முழுமையான விவரங்களைக் கண்டுபிடிக்க குறைந்தபட்சம் சில மாதங்களாகலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாலு விரிகுடாப் பகுதியில் உள்ள டொங்காலா என்ற பகுதியில் வாழும் மக்கள்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். சுமார் 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் இந்தப் பகுதியில் இன்னும் பல நூறு உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கொத்துக் கொத்தாய் புதைக்கப்படும் மனித உடல்கள்….இடம்: பொபோயா கல்லறை

பறவைப் பார்வையில் சுனாமி பேரழிவு மற்றும் நிலநடுக்க பாதிப்புக்கள்

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டஒருவர் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு இராணுவ விமானத்திற்கு கொண்டுசெல்லப்படும் காட்சி

சுக்கு நூறாய் நொறுங்கி மலைமுகடு போலக்காட்சியளிக்கும் வீதி

சுனாமியின் கொடூரத்தாக்குதலால் தூக்கிவீசப்பட்டிருக்கும் மகிழுந்து

பையங்காரா மருத்துவமனைக்கு வெளியே கிடத்தப்பட்டிருக்கும் பிணக்குவியல்களில் தங்களின் சொந்தங்களைத் தேடும் உறவுகள்

நிலநடுக்கத்தால் மண்ணில் புதையுண்ட பெண் ஒருவரை மீட்கும் மீட்புப்படையினர்

இராணுவ விமான உதவிக்காகக் காத்திருக்கும் மக்கள்

நிலநடுக்கத்தால் சுக்கு நூறாக உடைந்த பாலம் ஒன்று பறவையின் பார்வையில்

நிலநடுக்கத்தால் திறந்த வெளியில் தஞ்சம் புகுந்திருக்கும் மக்கள்

உருக்குலைந்து கிடக்கும் பைத்தூர் ரகுமான் மசூதி

நிலநடுக்கத்தால் காயமுற்றவர்களுக்கு மருத்துவமனைக்கு வெளியில் சிகிச்சை தரப்படுகிறது

இயற்கையின் சீற்றத்தால் உருக்குலைந்த கடற்கரைப் பகுதி

சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இராணுவ விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள காட்சி

அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று அப்பளம் போல நொறுங்கியுள்ளது.

நன்றி : அல் ஜசீரா Indonesia’s deadly earthquake and tsunami
தமிழாக்கம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க