ன்பார்ந்த பேராசிரியர்களே, மாணவ நண்பர்களே !

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியில் புகுத்தப்பட்ட தனியார்மயக் கொள்கைகளின் விளைவாக உன்னதமான சேவையான கல்வி விற்பனை சரக்காக்கப்பட்டுள்ளது. நல்ல மாணவர் களை – சமுதாயத்தை உருவாக்க வேண்டிய இந்த கல்வி அமைப்பு கிரிமினல்மயமானதன் விளைவாக சமூகமும் கிரிமினல்மயமாகி வருகிறது. கல்வித்துறையில் தற்போது மத்திய – மாநில அரசுகள் செய்துவரும் மாற்றங்கள் அனைத்தும், இதுவரை எதையெல்லாம் நாம் சட்டவிரோதம், விதிமுறைகளை மீறிய செயல் என்று மனம் குமுறி வந்தோமோ அதையெல்லாம் சட்டப்பூர்வ மாக்கும் நடவடிக்கைகளாக்கிவிட்டன.

சமீபகாலமாக உயர்கல்வி துறையில் முறைகேடுகளும் ஊழல்களும் தொடர்ந்து வெளி வந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு ஊழல் முறைகேடும் அதற்கு முந்ததையதைவிட அளவில் மிகப் பெரியதாகவும் தன்மையில் அதீத கிரிமினல்மயமானதாகவும் உள்ளது. மேலும் பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களை தலைமை பொறுப்புகளில் பணியமர்த்துவதை மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது. தமிழக பல்கலைக்கழகங்களில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க ஆதரவாளர்களே துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பாடபுத்தகங்களில் இந்துத்துவ கருத்துக்களை திணிப்பது, புராணக் கட்டுக்கதைகளை அறிவியல் உண்மையாகக் கூறுவது, பிராந்திய மற்றும் தேசிய இனங்களின் பண்பாடு – கலாச்சார – மொழி அடையாளங்களை அழித்து ஒற்றைக் கலாச்சாரமாக மாற்றுவதையே இலக்காக வைத்து செயல்படுகிறது. தமிழக அரசு அதற்கான களத்தை அமைத்துக் கொடுக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகால மோடியின் ஆட்சியில் உயர்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெருமள வில் குறைக்கப்பட்டு விட்டது. அத்தோடு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உயர்கல்வியையுமே சந்தையின் நேரடி கட்டுப்பாட்டில் ஒப்படைப்பதற்கான பல நடவடிக்கைகளும் தீவிரமாக அமல் படுத்தப்பட்டு வருகின்றன. இல்லாத அம்பானியின் ஜியோ கல்வி நிறுவனத்திற்கு இந்தியாவின் மிகச்சிறந்த பல்கலைக்கழக அந்தஸ்தை மோடி அரசு வழங்கியுள்ளது. கல்வி முதலாளிகளின் கொள்ளைக்காக இந்திய மருத்துவ குழு (MCI) மற்றும் பல்கலைக்கழக மானிய குழு (UGC) இரண்டையும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மோடி அரசு எடுத்து வருகிறது. திறமையான வர்களை தேர்ந்தெடுக்கிறோம் என்ற பெயரில் நீட் தேர்வை திணித்து காசு உள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்வி என்ற நிலமையை மோடி அரசு உருவாக்கியுள்ளது.

படிக்க:
மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் !
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

மோடியின் அடியொட்டியே தமிழக அரசும் கடந்த ஜூலை மாதம் சட்டசபை கூட்டத்தொடரில் இரண்டு தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதற்கான மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்நாட் டின் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் மற்றும் பெண் சமூகத்தினர் உயர்கல்வி பெறுகின்ற வாய்ப்பை படிப்படியாக தட்டிப் பறித்து பணம் உள் ளவர்கள் மட்டுமே உயர்கல்விக்கு செல்ல முடியும் என்ற நிலையை நோக்கித் தள்ளும். இச்சூழலில் கிரிமினல் மாஃபியாக்களிடமிருந்தும் கல்வி கொள்ளையர்களிடமிருந்தும் இந்துத்துவ சக்திகளிடமிருந்தும் கல்வித்துறையை மீட்டெடுப்பதும், அனைவருக்கும் தரமான பொதுக் கல்வியை கிடைக்கபெறச் செய்வதும் இன்றைய காலகட்டத்தின் மிக முக்கியமான கடமை. இப்பணிக்காக பேராசிரியர்களும், ஆராய்ச்சி மாணவர்களும், கல்வியாளர்களும், கல்வியின் மீது அக்கறை கொண்ட சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் ஒன்றுசேர்வோம்.

இது குறித்து விவாதிப்பதற்கான ஒரு மேடைதான் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு.

கலந்துரையாடுவோம் வாருங்கள்!

***

உயர் கல்வி எதிர்கொள்ளும் சவால்கள்

அரங்க கூட்டம்

அன்னை நாகம்மையார் அரங்கம்,
பெரியார் திடல், வேப்பேரி, சென்னை.
27-10-18 மாலை 4.30 மணி.

தலைமை:

முனைவர் க. ரமேஷ்,
துணை ஒருங்கிணைப்பாளர், CCCE.

கருத்துரை:

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் தனியார்மயத்தின் வளர்ச்சி

பேராசிரியர் வீ. அரசு,
ஒருங்கிணைப்பாளர் – CCCE.
தமிழ்துறை முன்னாள் தலைவர்,
சென்னைப் பல்கலைக்கழகம்.

உயர்கல்வி மீதான இந்துத்துவ தாக்குதல்கள்

பேராசிரியர் அ. கருணானந்தன்,
ஒருங்கிணைப்புக் குழு – CCCE,
வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர்,
விவேகானந்தா கல்லூரி.

UGC மற்றும் MCI கலைப்பு ஏன்?

பேராசிரியர் ப. சிவக்குமார்,
ஒருங்கிணைப்புக் குழு – CCCE,
முன்னாள் முதல்வர்,
குடியாத்தம் அரசு கலைக்கல்லூரி.

தமிழில் தேர்வெழுதுவது குற்றமா?

பேராசிரியர் அமலநாதன்,
ஒருங்கிணைப்புக் குழு – CCCE,
பொருளியல் துறை,
தூய சவேரியார் கல்லூரி,
பாளையங்கோட்டை.

நீட் – மாணவர்களிடம் பணம் பறிக்கும் கோச்சிங் சென்டர்கள்

பேராசிரியர் கதிரவன்,
பொருளாளர் – CCCE,
உயிரி தொழிற்நுட்பத் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்.

நன்றியுரை:

திருமதி சாந்தி,
ஒருங்கிணைப்புக் குழு – CCCE,
சென்னை.

பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு,
(Co-ordination Committee for Common Education),
சென்னை. தொடர்புக்கு: 72993 61319, 94443 80211.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க