ஆய்வுக்குழு முன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்ட ஸ்டெர்லைட் | காணொளி

ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து அவ்வாலை தொடர்ந்த வழக்கில், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை ஆய்வுக்கு அனுப்பி வைத்திருந்தது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

சென்னை எழிலகத்தில் கடந்த அக்-5 அன்று கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்தியது தருண் அகர்வால் தலைமையிலான குழு. மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சார்பாகவும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆய்வுக்குழுவின் முன் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்த வழக்கறிஞர் ஜிம்ராஜ் மில்டன், ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத செயல்பாடுகளை, பிராடுத்தனங்களை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார்.

ஸ்டெர்லைட் ஆலை இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக சட்டவிதிகளை மீறிவருகிற ஆலை. சட்டத்தையே அது மதிப்பதில்லை.

ஆலையைச் சுற்றி பசுமை வளையம் (Green Belt) அமைக்க வேண்டுமென்பது விதி. முதலில் 250 மீட்டர் என்பதாக இருந்ததை பின்னர் இடமில்லை என்ற காரணம் காட்டி 25 மீட்டராக குறைத்துவிட்டார்கள். அதுவும் ஆலையைச் சுற்றி இல்லாமல் ஒரு ஓரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. என்ன நோக்கத்திற்காக பசுமை வளையம் அமைக்க வேண்டுமென்று உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தையே கேலிக்கூத்தாக்கியிருக்கிறது, ஸ்டெர்லைட். ஆனால், பச்சை பசேலென்று கிராபிக்ஸ் படத்தை எடுத்து காட்டுகிறார்கள்.

படிக்க:
ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

காப்பர் கழிவுகளை 11 இடங்களில் இலட்சக் கணக்கான டன் அளவுகளில் கொட்டியிருக்கிறார்கள். இந்த கழிவுகளை உடனடியாக அகற்றக்கோரி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பலமுறை வலியுறுத்தியும் அதனை அப்புறப்படுத்தவில்லை. இதற்கு நிர்வாகம் சொல்லும் விளக்கம் அது பாதிப்பை ஏற்படுத்தாது என்பதுதான். மிக முக்கியமாக ஆலைக்கழிவுகளை வேறு வேறு நபர்களுக்கு விற்றுவிட்டோம் என்று கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், கழிவுகள் அங்கேயேதான் இருக்கிறது.

ஜிப்சத்திற்கென்று ஒரு குளம் இருக்கிறது. அதனை 15 நாளுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது.

ஆபத்தான நச்சுக் கழிவுகளை கையாளுவது குறித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக அத்தகைய அனுமதியே பெறவில்லை…

பாருங்கள்! பகிருங்கள்!!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க