விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை – 5 (இறுதி பகுதி)
மோடி வெளிநாடு போனாரு, அங்க போனாருன்னு அதுக்கான விளம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான கோடி செலவு பண்ற இந்த அரசு ஒவ்வொரு மாவட்டத்திலையும் ஒவ்வொரு ஊர்லயும் திட்டங்கள் வகுத்து “இந்த மாதிரி திட்டம் நடக்குது, போய் சேருங்க”ன்னு கொண்டு வரலாமே, ஏன் செய்வதில்லை?. தகவல் அறியும் மனு போட்டா “இது மாதிரி நாங்க skill development program நடத்திருக்கோம்”னு கணக்கு காட்டுவாங்களே தவிர அது பலனுள்ளதாக இல்லேன்றதுதான் நிலைமை. அது பலனுள்ளதாக இருந்தா அது நிறைய பேருக்கு வேலை கிடைத்திருக்கும்.
ஜின்டால் ஆலை வேணும், ஸ்டெர்லைட் ஆலை வேணும் என்று ஒரு எதிர்தரப்பு வாதம் வரலாம். வேலை வாய்ப்புன்றது தனியார் நிறுவனங்கள்ல வரணும்ன்னு இல்லை. அரசு திட்டமிட்டு வேலை வாய்ப்புகளை உருவாக்கும்படி சரியான நிறுவனங்களை சரியான இடத்தில் வைச்சு அதுக்கான சரியான கவனமும், விழிப்புணர்வும், ஊக்கமும் கொடுத்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும்.
தமிழ்நாட்டுல எத்தனை ஐ.டி நிறுவனங்கள் இருக்கு? எல்லா ஐ.டி நிறுவனத்திலும் தமிழ்நாட்டுல படிச்ச மாணவர்கள் மட்டும் இன்றி எல்லா மாநிலங்களிலிருந்தும் இருக்காங்க. நாடு முழுதும் சலிச்சு தங்களுக்கு ஏத்தபடி ஆள் எடுத்து கொண்டு வர்றாங்க. ஏன் உள்ளூர் இளைஞர்கள் நிறைய பேரை கேம்பஸ் இன்டர்வியூல எடுக்கிறதில்லை என்று கேட்டால் ஸ்கில் செட் -ன்ற காரணத்தை கொண்டு வர்றாங்க. இந்த ஸ்கில் செட் டெவலப்மென்ட் புரோகிராம் என்னன்னு இருட்டடிப்பாகத்தான் இருக்கு.
படிக்க :
♦ காசு மிச்சம் பண்ண கலெக்டர் வேலையா செய்யுறேன் ? படங்கள்
♦ தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !
இன்னோன்னு இந்த மைண்டு செட். ஒரு தரப்பு மக்கள், ஒரு தரப்பு படிப்பு படிச்சவங்க மட்டும்தான் உள்ள வரணும்ன்ற மாதிரியான மனநிலை இது. உதாரணமாக, சி.பி.எஸ்.இ ஆகட்டும், நீட் ஆகட்டும் இது மாதிரியான மனநிலையோட வெளிப்பாடு. இதை அரசு மாத்திக்கிற மாதிரி தெரியல. அரசு அதே பாதையில தான் போயிட்டிருக்கு. அதே பாதையில போயிட்டிருக்கும் போது நோய் எப்படி குறையும்ன்றது தெரியலை.
ஒரு வேளை சரியான நிறுவனங்கள் சரியான விதிமுறைகளின் படி வந்தாங்கன்னா எல்லாரும் வரவேற்கத் தான் செய்வாங்க. விதிமுறைகளை வரையறுப்பதும் அதை பின்பற்றுவதும் அதுக்கான கல்வியை குடுக்கிறது தான் சரியா இருக்கும்.

இங்க அரசு வேலையை பொறுத்தவரை லஞ்சம், தனியார் வேலையை பொறுத்த வரைக்கும் கார்ப்பரேட் அஜெண்டா இருக்கிறது. அதாவது ஊழல் இருக்கிறது, சாதிய அஜெண்டா இருக்கிறது. என்ன சாதி, என்ன மதம், எந்த மாநிலம், எங்கு படித்தீர்கள் என்று ஒதுக்கி வைக்கும் அஜெண்டா உள்ளது.
திருச்சி நகரில் சில நிறுவனங்கள கொண்டு வரலாம். அதை சுத்தி உள்ள கிராமங்களுக்கு அதுக்கான வாய்ப்பு கிடைக்கும், அங்க போவாங்க. இல்ல வேலை வாய்ப்பு பயிற்சி திட்டங்களை செய்யலாம். இந்த மாதிரி விசயங்கள் கேட்டா எல்லாமே இருக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, நடைமுறையில் எதுவும் இல்லை.
‘மன் கீ பாத்’ன்னு மோடி வந்து பேசுறாரு, எடப்பாடி பழனிச்சாமி எல்லா இடத்திலையும் போயி பேசுறாங்க. அதுக்கு பதிலா வேலைவாய்ப்புகளை உருவாக்க முறையான திட்டங்கள் தீட்டி, அதை அமல்படுத்தி அதை கொண்டு சேர்க்கணும். அரசின் செயல் திட்டங்கள்ன்னு சொல்லிட்டு ஒவ்வொரு தியேட்டர்லயும் படம் போடுறத விட இது மாதிரி வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும்படி திட்டம் போட்டு அது எங்க எங்க இருக்கு அதுக்கான பயிற்சி திட்டம் என்ன இருக்கு அப்பிடின்றத ஒரு தியேட்டர்ல ஒரு 2 நிமிட படமா காண்பிக்கலாம். இதை பார்க்கிற எல்லாரும் பார்த்து பயனடைவாங்க. இதெல்லாம் இல்லாமதான் வெளிநாடுகளுக்கு போய் ஏமாறுராங்க.
இன்னோன்னு பொருளாதார நெருக்கடி. ராணுவ வீரர் ஒருத்தர் பென்சன் வாங்குறாரு, இது மாதிரி ஏன் விவசாயத்தை பின்புலமா கொண்டவங்களுக்கு அரசு ஓய்வூதியம் மாதிரியான முறையை கொடுத்தீங்கன்னா அவங்க வாழ்க்கையை மாசம் மாசம் ஓட்டுறது ஒரு பெரிய பிரச்சனையா இருக்காது. நெருக்கடியில் விழ மாட்டாங்க. வாழ்நாள் முழுதும் உழைச்ச விவசாயிகளும், தொழிலாளிகளும் இந்த மாதிரி பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் போது தான் தப்பு நடக்குது.
படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?
♦ விவசாயிகளை ஒழிக்க மோடிக்கு யோசனை சொல்லும் ஃபோர்ப்ஸ் பத்திரிகை
இது சாதாரண பிரச்சனை கிடையாது. இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு?
8 வழி சாலையில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிலத்தை இழக்க போறாங்க. அரசு குடுக்கிற எல்லா பணமுமே திரும்பி அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போக போகுது. அரசியல் கட்சி பின்புலம் இருக்கிற ஆளுங்க தான் இது மாதிரி குற்றங்களை துணிந்து செய்றாங்க. அரசியல் கட்சிகாரங்களுக்கு தான் போலீஸ் சப்போர்ட்டும் இருக்கு. மத்தபடி அவங்களை அடக்கி ஆளுற அதிகாரமும் அந்த திமிரும் இருக்கு.
தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.
– சரவணன்
(முடிந்தது)
நன்றி : new-democrats
இதன் முந்தய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :
1. வல்லரசு இந்தியாவில் விவசாயம் தேய்வது ஏன் ?
2. வாழ்வாதார பறிப்புக்கு பணம் சரியான நிவாரணம் ஆகுமா !
3. என்.ஜி.ஓ முட்டுச் சந்து : பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கும் போலீசு !
4. வேலைவாய்ப்பு மோசடிகளுக்கு தீர்வு என்ன ?