புயல் சமயத்தில் அரசு கட்டிடங்கள், பள்ளிக்கட்டிடங்களில் ஆங்காங்கே மக்களை தங்க வைத்ததே தமது பெரும் சாதனை என அடிமை எடப்பாடி அரசும், ஊடகங்களும் மார்தட்டிக் கொள்கின்றன.

தற்போதுவரை அரசிடமிருந்து உணவு, குடிநீர், பால், மின்சாரம், பெட்ரோல், தொலைதொடர்பு என எந்த அடிப்படை வசதியும் கிடைக்கப் பெறாமல் மக்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆங்காங்கே மக்கள் தங்களது சொந்த முயற்சியால் அடிப்படையான தேவைகளை நிறைவேற்றுகின்றனர்.

படிக்க:
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

பல்வேறு பகுதிகளில் இதுவரை ஆர்.டி.ஓ, வி.ஏ.ஓ என யாரும் வந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை. வீடு, கால்நடைகளை இழந்த மக்களைக் காணவோ ஆறுதல் கூறவோ இவர்கள் யாரும் எட்டிப் பார்க்கவில்லை.

இதுதான் அடிமை எடப்பாடியின் ஆட்சித்திறன்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள கட்சனம் கிராமத்தில் நிவாரணப் பணிகளின் நிலைமை குறித்தும் பாதிப்பு குறித்தும் மக்களிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் வீடியோ

பட்டுக்கோட்டை அருகே முதல்சேரி கிராம மக்கள் குடிநீர், உணவு, அழிந்த வாழ்வாதாரத்துக்காக இழப்பீடுகோரி நடத்திய சாலை மறியல்

படங்களை பெரிதாகக் காண அவற்றின் மீது அழுத்தவும்:

தகவல்: மக்கள் அதிகாரம், தஞ்சை

நிவாரணப் பணியில் ஈடுபட்ட பெண் வி.ஏ.ஓ-விடம் தவறாக நடந்து கொண்ட அதிமுக ஒன்றியச் செயலாளர் :

நாகையில் கஜா புயல் நிவாரணப் பணிக்கு வந்த பெண் விஏஓ-விடம் தவறாக நடந்து கொண்ட கீழ்வேளூர் அதிமுக ஒன்றியச் செயலாளரின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு வி.ஏ,ஓ. சங்கத்தினர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.

தகவல்:
மக்கள் அதிகாரம், சென்னை
தொடர்புக்கு: 91768 01656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க