ந்துமத அடிப்படைவாதத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதால் கர்நாடக இசைப்பாடகர் டி.எம். கிருஷ்ணா, இந்துத்துவ ட்ரோல்களால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்.  சமூக ஊடகங்களில் இந்துத்துவ ட்ரோல்களில் தாக்குதல் காரணமாக டி. எம். கிருஷ்ணாவின் இடைநிகழ்ச்சியை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது இந்திய விமானநிலைய ஆணையம்.

’ஸ்பிக் மெக்கே’ என்ற அமைப்பும் விமான ஆணையமும் இணைந்து நவம்பர் 17-18 ஆகிய இருநாட்களுக்கு இசை மற்றும் நடன  நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. இந்த விழாவில் பாடகர் டி.எம். கிருஷ்ணா பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென அவருடைய நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த ஸ்பிக் மெக்கே நிறுவனம், “டி.எம். கிருஷ்ணா பாடுவதாக இருந்த டெல்லி அரங்கிற்கு எதிரே போராட்டம் நடத்தப்போவதாக வந்த செய்திகளை அறிந்து இந்திய விமானநிலைய ஆணையம் அச்சம் கொண்டது. அதனாலேயே நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கிறது.

நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு உருப்படியான காரணம் சொல்லாத விமான ஆணையம், ’சில அவசர நிகழ்ச்சிகள்’ காரணமாக டி.எம்.கிருஷ்ணாவின் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது.

t-m-krishnaதேதி குறிப்பிடப்படாத இந்த ஒத்திவைப்பு, நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்கு ஒப்பானது என்கிறார் டி. எம். கிருஷ்ணா.  “இந்திய விமானநிலைய ஆணையம் என்னுடைய நிகழ்ச்சியை ஒத்தி வைத்திருப்பதற்கு உறுதியான காரணங்கள் எதையும் சொல்லவில்லை. அவரச பணிகள் காரணமாக ஒத்திவைத்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள். இன்னொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பாட என்னை அழைப்பார்களா என்பதுகூட சந்தேகமே” என்கிறார்.

டி. எம். கிருஷ்ணா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி குறித்து இந்திய விமானநிலைய ஆணையத்தின் ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்டிருந்தது. அதை டி. எம். கிருஷ்ணா ’ரீ-ட்விட்’ செய்திருந்தார். அந்தப் பதிவில் இந்துத்துவ ட்ரோல்கள், டி. எம். கிருஷ்ணாவை ‘அர்பன் நக்ஸல்’ என்றும் ‘ஆண்டி நேஷனல்’, ’மதம் மாறிய வெறியன்’ என்றும் தாக்கியதோடு, மக்களின் வரிப்பணத்தை இந்திய விமானநிலைய ஆணையம் வீணாக்குவதாகவும் தாக்கி எழுதினர்.

இந்துத்துவ ட்ரோல்களின் தாக்குதலுக்கு பணிந்து தனது நிகழ்ச்சியை இந்திய விமானநிலைய ஆணையம் ரத்து செய்துள்ள நிலையில், ”அதே தேதியில் டெல்லியில் ஏதேனும் ஒரு இடத்தில் அரங்கு கொடுங்கள், பாடுகிறேன்” என பதிலடி கொடுத்திருக்கிறார் டி. எம். கிருஷ்ணா.

“அதிகாரத்தில் இருக்கிறவர்கள், இதுபோன்ற ட்ரோல்களுக்கு அடிபணிவது வருத்தத்தை அளிக்கிறது. செயல்பாட்டாளராக இருப்பது ஒரு பணியல்ல. செயல்பாட்டாளர் என்பவர் தன்னைப் பற்றியும்,  தன்னைச் சுற்றியும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டும். தற்போதைய அரசியல் சூழலில் கலாச்சாரம், சமூக, அரசியல் குறித்து கருத்து சொல்லும் கலைஞர்கள் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். இந்த நாட்டில் நடப்பவற்றைப் பார்க்கும்போது அதைத்தான் உணர முடிகிறது” என்கிறார் டி. எம். கிருஷ்ணா.

படிக்க:
மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !

“இந்த ட்ரோல்கள் ஒருங்கிணைக்கப்பட்ட குழுவாக இயங்குவது தெரிகிறது. அவர்கள் அதிகாரத்தோடு அரசோடும் இணக்கமானவர்களாகவும் தாக்கம் செலுத்துகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் குறித்து நாம் மிக மிக கவலைப்பட வேண்டியுள்ளது.  ஆனால் ஒருபோதும் இவர்களால் என் குரலையோ என்னுடைய இசையையோ முடக்கிவிட முடியாது!” என தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர்கள், பத்திரிகையாளர் பலர் இந்திய விமான ஆணையத்தின் நடவடிக்கையை கடுமையான எதிர்த்துள்ளனர்.  டி. எம். கிருஷ்ணாவுக்கு ஜே.என்.யூ மாணவர் அமைப்பினர், டெல்லி ஆம் ஆத்மி அரசு உள்ளிட்ட பல தரப்பினர் நிகழ்ச்சி நடத்தச் சொல்லி அழைப்பு விடுத்தனர்.

அவாம்-கி-அவாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள்

இதனையடுத்து டில்லி அரசாங்கம் ஏற்பாடு செய்த ”அவாம் கி அவாஸ்” என்ற நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை (17-11-2018) அன்று இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் டில்லி மக்கள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

இந்துத்துவ ட்ரோல்களின் தாக்குதலுக்கு பணிந்திருக்கும் விமான ஆணையத்தின் செய்கை, இந்தியாவில் நடப்பது ஜனநாயக ஆட்சியல்ல, இந்துத்துவ அடிப்படைவாதிகளின் ஆட்சியே என்பதையே காட்டுகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க