ய்வுக்குழு விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள், நிலத்தடி நீர் ஆய்வுகள், காற்று மாசு ஆய்வுகள் என வலுவான ஆதாரங்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட போதிலும் அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “தமிழக அரசும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், ஆலையினை மூடுவதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிர்வாகத்திடம் கருத்துக் கேட்கவில்லை; இது இயற்கை நீதிக்கு எதிரானது; ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் போதுமான காரணங்கள் இல்லை எனக் கூறி சில நிபந்தனைகளுடன் ஆலையை இயங்க அனுமதிக்கலாம்” என பரிந்துரைத்திருக்கிறது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக்குழு. ஆலையை மீண்டும் திறப்பதற்கான திரைமறைவு வேலைகள் அடுத்தடுத்து அம்பலமாகிவருகிறது.

உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது; தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சொல்லி விட்டது; நாங்கள் என்ன செய்வது எனக் கைவிரித்திடும் நாடகத்தை நடத்துவதற்காகவே, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் – உச்ச நீதிமன்றம் என செக்குமாடு போல் சுற்றுக்கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால் ஏன் கொள்கை முடிவு எடுக்க மறுக்கிறது. ஆலை வேண்டாம் என மக்கள் பேசுவதற்கும், போராடுவதற்கும், ஏன் போலீசு அனுமதி மறுக்கிறது?

தமிழக அமைச்சரவையை உடனடியாகக் கூட்டி, தாமிர உருக்காலையால் ஏற்படும் சிக்கல்கள், ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கிய பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக மண்ணில் தாமிர உருக்காலைக்கு அனுமதி இல்லை எனக் கொள்கை முடிவெடுத்து அதை சட்டமன்றத்தில் சிறப்பு சட்டமாக நிறைவேற்ற வேண்டும்.

தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக ஊர்கள் தோறும் பணத்தை இறைத்து தனக்கு ஆதரவு உள்ளதாக கைக்கூலிகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் மோசடி நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது எனப் பேசுவதற்கும் போராடுவதற்கும் அனுமதிக்க வேண்டும். என்று கேள்வியெழுப்பியுள்ள மக்கள் அதிகாரம் அமைப்பினர், ”தனிச்சட்டம் இயற்று ! ஸ்டெர்லைட்டை விரட்டு!” என்ற முழக்கத்துடன் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை நடத்தியுள்ளது.

சென்னை பாரிமுனையிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள் பேரணியாகப் புறப்பட்டு சென்றனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட, பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ள போலீசு, அவர்களை தற்போது ராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

பத்திரிகையாளர்களிடம் உரையாற்றும் தோழர் வெற்றிவேல் செழியன்.

சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின் நோக்கம் குறித்து பத்திரிகையாளர்களிடையே உரையாற்றும் தோழர் வெற்றிவேல் செழியன்.

படிக்க:
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்
ஆய்வுக்குழு கிடக்கட்டும் ! ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று ! மக்கள் அதிகாரம்

தகவல்:
சென்னை,
9176801656.