பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை

(Coordination Committee for Common Education – Chennai)


பத்திரிக்கை செய்தி!

வெளிநாட்டு பட்டதாரிகளை இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர்களாக நியமிக்கும் வகையிலான UGC-யின் புதிய விதிமுறையை திரும்பப் பெறு !

ல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் UGC புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது. உலக பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் முதல் 500 இடங்களில் வந்த பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டங்கள் பெற்றவர்கள் இந்தியாவில் நேரடியாக உதவி பேராசிரியாராக நியமிப்பதற்கான தகுதி பெற்றவர்கள் என்கிறது அந்த விதி.

குறிப்பாக, இவ்விதிமுறை கலை, அறிவியல், வணிகவியல், சமூக அறிவியல், கல்வி, மொழி மற்றும் நூலக அறிவியல் பாட பிரிவுகளுக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளனர். இதன் மூல இந்தியாவிலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பல்கலைக்கழங்களில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஆயிரக் கணக்கானவர்களுக்கு வேலை கிடைக்கப் போவதில்லை என்ற மிகப்பெரிய அபாயம் உருவாகியுள்ளது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிகிறோம்.

உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசை படுத்துகின்ற நிறுவனங்களான Quacquarelli Symonds(QS ranking), Times Higher Education rankings (THE racking) and the Academic Ranking of World Universities (ARWU) of the Shanghai Jiao Tong University தரவரிசைபட்டியலில் முதல் 500 இடங்களை பெற்ற பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கே மேற்கண்ட விதிமுறை பொருந்தும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

மேற்சொன்ன தரவரிசை நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பல்கலைக்கழக தரவரிசை பட்டியலின் முதல் 500 இடத்தில் வெறும் 10 இந்திய உயர்கல்வி நிறுவனங்களே உள்ளன. மீதமுள்ள 490 பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்.

UGC-ன் இப்புதிய விதிமுறையின் மூலம் மத்திய/மாநில பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்களை புறம் தள்ளிவிட்டு வெளிநாட்டினரை பேராசிரியர் பணிகளில் நியமிப்பதாகவே அமையும். இதன் முலம் இந்திய பல்கலைக்கழங்களில் படிக்ககூடிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் கிராமபுற மாணவர்களுக்கு பேராசிரியர் பணிகளுக்கான வாய்ப்புகள் பறிக்கப்படும்.

உயர்கல்வியின் தரத்தை உயர்த்துகிறோம் என்ற பெயரில் வெளிநாட்டு பேராசிரியர்களை இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் பணியமர்த்துவற்கான திட்டமாகவே மோடி அரசு இதை செய்துள்ளது.

இந்த பாதகமான விதிமுறையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என பொதுகல்விக்கான ஒருங்கிணைப்பு குழு கோறுகிறது.

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு – சென்னை
72993 61319, 94443 80211.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க