தெலுங்கானாவில் சென்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தயவுடன் ஐந்து இடங்களைப் பிடித்த பாஜக, நடந்து முடிந்த தேர்தலில் ஒரே ஒரு இடத்தை பிடித்துள்ளது.
தெலுங்கானாவில் கணிசமான இடங்களை பிடித்துவிட முடியும் என கணக்குப் போட்ட பாஜக, தேர்தல் பிரச்சாரத்தில் மோடி, அமித் ஷா, ஆதித்யநாத் போன்ற பெருந்தலைகளை களத்தில் இறக்கியது. சொந்த ஊரில் கலவரம் நடந்து கொண்டிருக்க, உ.பி. முதலமைச்சர் ஆதித்யநாத் இறுதி கட்டம் வரை தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத்தின் பெயரை ‘பாக்யாநகர்’ என மாற்றப்படும் என்றார். கரீம்நகர், ‘கரிபுறம்’ என மாற்றப்படும் என்றார்.
முசுலீம் மக்களை தூண்டிவிடும் விதமாக தீவிரமான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஆதித்யநாத். ஆனாலும், தெலுங்கானாவில் ராஜா சிங் லோத் என்பவர் மட்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ராஜா சிங் லோத், வன்முறையத் தூண்டும் பேச்சுக்கு பெயர் போனவர். வன்முறையை தூண்டும் விதமாக பேசியதற்காக இவர் மீது 60 வழக்குகள் போடப்பட்டுள்ளன. பல பெருந்தலைகளின் ஓயாத வெறுப்பு பிரச்சாரத்தின் விளைவாக, தனது கோஷாமஹால் தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
படிக்க:
♦ உயர்சாதியினரை பகைத்தால் பாஜக வெல்ல முடியாது : உ.பி. எம்.எல்.ஏ வின் பார்ப்பனிய குமுறல்
♦ கேள்வி பதில் : பாஜக – வின் தோல்வியை சிறுபான்மை மக்களுக்கு கிடைத்த வெற்றியாகக் கருதலாமா ?
தெலுங்கானாவில் 118 தொகுதிகளில் போட்டியிட்டது பாஜக. அம்மாநில தலைவர் கே.லஷ்மண், பாஜக அவை தலைவர் கிஷன் ரெட்டி ஆகியோர் துடைத்தெறியப்பட்டுள்ளனர். 7% வாக்கு வங்கியுடன் நோட்டாவுடன் போட்டியிட தயாராகி வருகிறது தெலுங்கானா பாஜக.
கலைமதி
செய்தி ஆதாரம்: thewire.in | indiatoday