தனிச்சட்டம் இயற்று! ஸ்டெர்லைட்டை விரட்டு ! என்ற தலைப்பில் சேப்பாக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் இன்று (29-12-2018) மாலை 4 மணிக்கு அரங்கக் கூட்டம் நடைபெற உள்ளது.
நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கொலைக் குற்றவாளி போலீசாரைக் கைது செய்ய வலியுறுத்தியும் மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ, உரிமைத்தமிழ்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, மே 17 இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர், தோழர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை நிலையச் செயலர் தோழர் இளஞ் சேகுவேரா, ஜனநாயக வழக்குரைஞர் சங்க மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் பாரதி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்நிகழ்ச்சியின் நேரலை வினவு தளத்தில் ஒளிபரப்பப்படும்.
