மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள ஜனவரி 08, 09 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வர்க்க உணர்வோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம், தெருமுனைக் கூட்டங்கள் ஆலைவாயிற் கூட்டங்கள் வடிவில் முன்னெடுத்து சென்று வேலை நிறுத்த போராட்டத்தை வெற்றி பெறச் செய்து வருகிறது.
திருவள்ளூர் கிழக்கு
2019 ஜனவரி 08, 09 இரு நாள் வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம் என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கும்முடிப்பூண்டி தபால் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
கார்ப்பரேட்களின் பிடியில், தொழிலாளர், விவசாயி, மாணவர், சிறுவணிகம் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் சிக்கித் தவிப்பதைப் போல காட்சியமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. செங்கொடிகள் பதாகைகள், விண்ணதிரும் முழக்கங்கள், பறையிசையுடன் நடத்தப்பட்ட முற்றுகைப் போராட்டம் கும்முடிப்பூண்டி பஜாரில் உள்ள அனைத்து மக்களையும் ஈர்த்தது.
மாவட்ட செயலாளர் தோழர் விகந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.
கும்மிடிப்பூண்டி காட்டுக்கொள்ளை தெருவில் தொடங்கி தபால் நிலையத்தை முற்றுகையிட சென்ற தோழர்களை போலீசார் கைது செய்தனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் – 94444 61480
திருவள்ளூர் மேற்கு
தொழிலாளர் உரிமையை மீட்க, பாசிச ஆர்எஸ்எஸ் பிஜேபி கும்பலை வீழ்த்த, ஜனவரி 8-9 வேலை நிறுத்தத்தை முன்னெடுப்போம்! என்ற தலைப்பின் கீழ் ஜன-8 அன்று காலை, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் நிறுவனத்தில் ஆலைவாயில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் ஆலை சங்கத்தின் தலைவர் தோழர் ச.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில பொருளாளர் தோழர் பா.விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது, ‘’இன்றைய தொழிலாளர்களின் நிலைமை என்ன என்பதையும் மோடி அரசு நான்கரை ஆண்டுகளாக தொழிலாளர் நலச் சட்டங்கள் 44 யும் 4 தொகுப்புகளாக கார்ப்பரேட் முதலாளிகளுக்காக மாற்றியும் திருத்தியும் வருவதை கண்டித்து அதன் மூலம் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் வாழ்க்கை எந்த அளவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது, பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, வேலை இழப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் விளக்கி உரையாற்றினார்.
இறுதியாக ஆலை சங்கத்தின் துணைத்தலைவர் தோழர் ரகுபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்.
கோவை
“தொழிலாளர் உரிமைகளை மீட்க பாசிச RSS – BJP கும்பலை வீழ்த்த 2019 ஜனவரி 8 – 9 வேலைநிறுத்தத்தை முன்னெடுப்போம்!” எனும் முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றது.
ஜன 8 அன்று காலை 10 மணியளவில் துடியலூர் பேருந்து நிறுத்தம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்டிரீஸ் தலைவர் தோழர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பு.ஜ.தொ.மு. மாவட்டத் துணைத்தலைவர் தோழர் தேவராஜ், மாவட்ட பொருளாளர் தோழர் சரவணகுமார், கோவை மண்டல பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தின் பொருளாளர் தோழர் செல்வராஜ், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கோவை மாவட்ட செயலாளர் தோழர் சித்தார்த்தன் உள்ளிட்ட முன்னணியாளர்கள் கண்டன உரையாற்றினர்.
தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை.
படிக்க:
♦ நெருங்குவது காவி இருளடா … | ம.க.இ.க. பாடல் காணொளி
♦ உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்
