மதுரைக்கு வந்த மோடி அவர்களுக்கு தமிழக பா.ஜ.க செய்த வரவேற்பை விட ‘தரமான’ வரவேற்பு தந்தவர்கள் தமிழக மக்கள்தான். சும்ம சொல்லக்கூடாது செய்முறை செய்வதில் நம்மை மிஞ்ச ஆளில்லை என பெருமை கொள்ளலாம். நம்மைப் போன்றே கேரள மக்களும் சிறப்பாக செய்துள்ளனர்.
டிவிட்டரில் உலக அளவில் #PoMoneModi, #GoBackModi இரண்டும் டிரண்டிங் ஆனது. இப்போது மெய்நிகர் உலகில் டிரண்டிங் ஆனது நாளை மெய்யுலகிலும் ஆகும், ஆக்குவோம்…
*****
Villavan Ramadoss :
நீ வர்றது தெரிஞ்சா அவனுங்க லீவு போட்டுட்டு வந்து ட்வீட்டர்ல குத்த வைப்பானுங்க. இதுல நீ ரெண்டுநாள் லீவு இருக்குறப்போ அங்க போயிருக்க..
Joe Milton :
மோடி : மூன்று பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்போம்
தமிழன் : தமிழ்நாட்டுல எத்தனை பாராளுமன்ற தொகுதி ?
மோடி : 39
தமிழன் : அப்போ எத்தனை கல்லூரி ?
மோடி : 13
தமிழன் : இங்க ஏற்கனவே 29 இருக்கே . மீதி 16 – ஐ மூடுறதா ப்ளானா ?
மோடி : புடுச்சேரிக்கோ வணக்கம் !
Lakshmanasamy Odiyen Rangasamy :
அடேய்…..ரொம்ப ஓவராத்தான் போறீங்கடா
Villavan Ramadoss :
ஏம்பா மோடி, கம்பெனி கொஞ்சம் டல்லா போவுது.. தமிழ்நாட்டுக்கு ஒருக்கா போயிட்டு வா. ஏன்னா நீ போனாத்தான் இவனுங்க டிவிட்டர் பக்கமே வர்றான்னுங்க.
– டிவிட்டர் ஓனர். #GoBackModi
Arul Ezhilan :
#GoBackModi
முகிலனின் தரமான சம்பவம்!
Kalis Kalimuthu :
Troll Mafia
மோடியின் தமிழக வருகை மரண கலாய் #GoBackModi 😅 வச்சு செஞ்சிருக்காங்க
Mathavaraj :
மதுரைக்கு வந்த சோதனை இது.
தனது முதல் சுதந்திர தின உரையின் போது “குண்டு துளைக்காத கண்ணாடிக்குள்ளிருந்து பேச மாட்டேன், என் மக்களிடையே பேச எனக்கு எதற்கு பாதுகாப்பு?; என வீறாப்பு பேசியவர்தான் இந்த மோடி. அப்போது அதை ஆஹோ ஓஹோவென்று சங்கிகளும், ஊடகங்களும் புகழந்து தள்ளினர்.
இன்று அதே மோடி மதுரையில் பங்கேற்க இருக்கும் நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் 3 கி.மீ சுற்றளவில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதி முழுவதையும் மத்தியப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றனர். மத்தியப்படை, சிஐஎஸ்எப், அதிரடிப்படை, கருப்புப் பூனைப்படை, சிறப்புப் படை, சிறப்பு கண்கானிக்கும் பிரிவு, ஆயுதப்படை, உள்ளூர் போலீஸ் எல்லாம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எதோ படையெடுப்பு போல பரிவாரங்கள் அணிவகுத்து இருக்கின்றன. இவ்வளவு செலவும், இவ்வளவு பாதுகாப்பும் இவ்வளவு அவமானமும் எதற்கு? பொன்னார், தமிழிசை, எச்சை ராஜாவைத் தவிர மோடி வந்து அடிக்கல் நாட்ட வேண்டும் என யார் இங்கு அழுதார்கள்?
இதையெல்லாம் விட மகா கேவலம் என்னவென்றால், அருகிலேயே பாஜகவின் கட்சிக் கூட்டம் நடக்க இருக்கிறதாம். அதில் பங்கேற்க வரும் சொந்தக் கட்சியினரைக் கூட மெடல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகுதான் உள்ளே அனுமதிக்கப் போகிறார்களாம். பாஜக விலும் ’தமிழக’ பாஜக என்றால் தனி கெத்துத்தான் போல.
அது.
#GobackModi #GobacksadistModi #BoycottModi
Abdul Hameed Sheik Mohamed :
தமிழ் நாட்டில் ஆயிரம் பற்றி எரியும் பிரச்சினைகள். கஜா புயல் நிவாரணம் உட்பட ஆயிரம் கோரிக்கைகள். எதைப்பற்றியும் பிரதமர் வாய் திறக்கவில்லை. மாறாக தேவேந்திர குல வேளாளர் கோரிக்கையைப் பற்றி பேசுகிறார். மத அரசியல்- சாதி அரசியல் இரண்டையும் தவிர ஒரு பிரதமருக்கு எந்த ஆர்வமும் அரசியலில் இல்லை #GoBackModi
Aazhi Senthil Nathan :
சேச்சே, தமிழர்களுக்கு வரவர டிப்ளமசின்னாவே என்னென்னு தெரியமாட்டங்குது. தமிழ்நாட்டை அந்நிய நாடாக நினைக்கும் நம்ம அண்டைநாட்டுப் பிரதமர் மோடி வரார்னா, சர்வதேச மரபுப்படி நாம வரவேற்கத்தானே செய்யணும்! கோல்டு வார் பீரியட்ல கூட இப்படியெல்லாம் கிடையாதேய்யா! இப்படி மூணு லட்சம் நாலு லட்சம் ட்வீட் போட்டு ஓடவச்சா நாளைக்கு அமெரிக்க, ரஷ்ய ஜனாதிபதிகள்ளாம் எப்படியா நம்மூருக்கு வருவான்? வந்தாரை வரவேற்கும் தமிழகம் இப்படி குட்டிச்சுவரா போச்சேன்னு நினைக்கும்போதுதான் –
(சோடா குடுய்யா!) – மிடில!
( #GoBackModi ன்னு இங்க ஹேஷ்டேக் போடணும்னு ஒருத்தர் மிரட்டரார். முடியாது முடியாது. போட மாட்டேன்).
Vijai Prasad :
தவறான பிரச்சாரங்களை மக்கள் கருத்தில் கொள்ள கூடாது. யாரும் எங்களை எதிர்க்க கூடாது. பயத்தாலும், எதிர்மறை எண்ணங்களாலும் எனக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளோர். மோசமானவர்களை புறந்தள்ளுங்கள். நான் உங்கள் பக்கம் இருக்கிறேன்.. பாரத் மாதா கீ ஜெ.. வணக்கம்
Rajagopal Subramaniam :
என்ன இருந்தாலும் அவர் நம்ம பிரதமர்டா..கொஞ்சம் நாகரீகமா செய்ங்கடா…
விசாரணைன்னு வந்துட்டா ஜட்ஜை கொலை பண்றவன், உச்சநீதிமன்றத்தை மயிரா கூட மதிக்காம சிபிஐ டைரக்டரை கொஞ்சம் கூட வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லாம மாத்துற பிரதமனுக்கு இல்லாத நாகரிகம் எங்களுக்கு எதுக்குடா இருக்கணும்…?
#GoBackModi
தமிழச்சி (Tamizachi) :
#GoBackModi ஹாஷ்டேக் இந்திய அளவில் இருந்து உலகளவில் முதலிடத்திற்கு வந்துள்ளது. சொந்த நாட்டு பிரதமரை தங்கள் மாநிலத்திற்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களை நோக்கி #தேச_விரோதிகள் என்று #பாஜக / #ஆர்எஸ்எஸ் கும்பல்கள் குற்றம் சாட்டலாம்.
ஆனால் உலகளவில் அரசியல் ஆய்வாளர்களாலும், உலக மக்களாலும் கவனிக்கும்படி #மோடி வெறுப்பை தமிழர்கள் காட்டுகிறார்கள் என்றால் மோடியின் கழிச்சடை திட்டங்களும், தமிழக மக்களுக்கு எதிரான செயல்களும் #தமிழர்கள் மீதான வெறுப்பை எவ்வாறு அரசியலாக்கினார் என்பதையும் இன்று உலகத்தினரே கவனிக்கும்படி மோடியின் தமிழக வருகை அடையாளப்படுத்தி இருக்கிறது.
கேவலம் ஒரு செங்கல்லை நட்டு #எய்ம்ஸ்_மருத்துவமனை க்கு அடிக்கல் நாட்டுவிழா நடத்தி, “முட்டாள் மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்து விடலாம் என்பது மகா முட்டாள் மோடியின் கணக்கு.” அது தமிழர்களிடம் எடுபடாது என்பதை மக்கள் நிருபித்துவிட்டார்கள்.
சென்ற முறை மோடி தமிழகம் வந்தபோது கருப்பு கொடிகளுக்கு பயந்து சந்து பொந்து சுவர்களை இடித்து திருட்டுத்தனமாக ஒருவழியாக தப்பிச் சென்ற கோழை இம்முறை மதுரையில் சிக்கிக் கொண்டு உலகளவில் அவமானத்தோடு நிற்பதற்கான காரணத்தை அவர்களுக்கு மக்களே உணர்த்திவிட்டார்கள்.
வாழ்க! வெல்க!! தமிழர்களின் எதிர்ப்பு அரசியல் விழிப்புணர்வு!!!
தமிழச்சி (Tamizachi)
27/01/2019
#GoBackSadistModi
படிக்க:
♦ என்னுடைய நம்பிக்கை நொறுங்கிய நிலையில் இருக்கிறேன் : ஆனந்த் தெல்தும்ப்டே கடிதம்
♦ ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
Abdul Hameed Sheik Mohamed :
மோடியை வைகோ திட்ட ஆரம்பித்ததும் ஒரு சேனல் மின்னல் வேகத்தில் லைவ் வை கட் பண்ணின வேகம் இருக்கே…..ஒரு தனியார்சேனலில் வேலை பார்க்கும் ஆன் லைன் எடிட்டர் சொல்கிறார் ‘ சர்க்கஸ் கம்பெனில வேலை பார்க்கிற மாதிரி இருக்கு ப்ரோ….தினமும் நெருப்பு வளையத்தில் புகுந்து வெளிய வர வேண்டியிருக்கு..”
Bala G :
அடிமைகள் vs தமிழர்கள்..
Bala G :
விடாது கருப்பு..
தமிழர்கள் பாதிக்கப்பட்டு நிற்கும் போது ஒரு பிரதமரா வந்து எட்டிப்பார்க்க துப்பில்ல..
Bala G :
Mathavaraj :
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு
சங்கே முழங்கு சங்கே முழங்கு சங்கே முழங்கு
Aazhi Senthil Nathan :
Cpiml Tamilnadu :
#GoBackModi
பாசிச பாஜக ஆட்சி ஒழிக!
கதிர் நிலவன் :
ராஜ குலோத்துங்கன் :
பெரியார் மண்ணில்..
Sadist-க்கு இடமில்லை..
Ramesh Periyar :
Arunkumar Veerappan :
பாவத்த😒😒😒
Error 404 Tamil
என்னாமா கூவுறண்டா கொய்யால 🤣🤣🤣🙈🙈👏👏
Dumilisai Vera Level Kalaaai