மிழகம் முழுவதும் காலவரையறையற்ற போராட்டத்தை அரசு ஊழியர் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பானது முன்னெடுத்து நடத்தி வருகிறது.

அதன்  நான்காவது நாளான 25.01.2019 அன்று நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் அப்போராட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர் – பேராசிரியர்களின் நியாமான கோரிக்கையை ஆதரித்து முழக்கங்களை எழுப்பினர். அதனை போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் வரவேற்றனர்.

போராட்டத்தில் புகுந்து கலாட்ட செய்ய முயன்று தோற்று ஓடிய ஆர்.எஸ்.எஸ்.காரர்.

இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் அறிவியல் மாநாட்டை  மோடி அரசு மூடத்தனத்தை பரப்பும் மாநாடாக நடத்தியதை கண்டித்து பு.மா.இ.மு சார்பாக போடப்பட்ட துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். இதைப் பார்த்த ஒரு RSS-காரர் நோட்டிசை பார்த்து காண்டாகி நமது மாணவர் ஒருவரிடம் சண்டைக்கு வந்தார்.

உடனே அங்கிருந்த ஜாக்டோ ஜியோவினர் முழக்கமிட்டு RSS காரரை வெளியேற்றினர். பிறகு மீண்டும் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது திடீரென்று போலீசார் 20 பேர் மாணவர்களை சுற்றிவளைத்து தாக்கி யாருக்கும் தெரியாமல் போராட்டக் களத்திலிருந்து இழுத்து சென்றனர்.

இத்தகவல் அறிந்து பிற தோழர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என அனைவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு விசாரித்தபோது போலீசு, “மாணவர்களை அங்கிருந்து பாதுகாப்பதற்காகவே இங்கு கொண்டு வந்தோம்…” என்று கூறினர் அதன்பின்னர் வேறு வழியின்றி மாணவர்களை விடுவித்தனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை இழிவுபடுத்துவதும், போராடும் மாணவர்களை மிரட்டுவதுமே RSS – BJP யின் செயல்பாடாக உள்ளது. அதிலும் ஆர்.எஸ்.எஸ். -கும்பல் புராண குப்பைகளை அறிவியல் என்று கூறி மக்கள் தலையில்  கட்டும் பித்தலாட்டத்தை பு.மா.இ.மு தோழர்கள் அம்பலப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ்.-க்கு மிளகாய் கடித்தமாதிரி எரிகிறது. அதனால்தான் சவுண்டுவிட்டுப் பார்த்து அங்கிருந்து துரத்தப்பட்டதும், “இஞ்சி தின்ற குரங்காக” வெறியேறி போலீசை நாடியுள்ளது. போலீசும் தனது ‘கடமையை’ செய்து தாங்கள் யாருக்காக வேலை செய்கிறோம் எனக் காட்டிவிட்டது.

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாகவும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு எதிராகவும் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் ஒன்று சேர வேண்டியதன் அவசியத்தை இந்த நிகழ்வானது நம் அனைவருக்கும் காட்டிவிட்டது.

தகவல் :
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி,
திருச்சி. தொடர்புக்கு : 99431 76246.