டந்த பத்தாண்டுகளில் ‘பெண்களின் முன்னுதாரணமாக’ ஊடகங்களில் வலம் வந்தவர் ஐசிஐசிஐ வங்கியின் செயல் அதிகாரியாக இருந்த சந்தா கோச்சார். உலகின் தாக்கமிக்க பெண்களின் பட்டியலில் இடம்பெற்ற இந்திய பெண் என ஏகப்பட்ட பில்டப்புகளுடன் வலம் வந்தவர், இப்போது முறைகேட்டுக்கு முன்னுதாரணமாக வளர்ந்து நிற்கிறார்.

தன் கணவரின் நிறுவனம் பயன்பெறும் வகையில் ஐசிஐசிஐ வங்கியிலிருந்து ரூ. 3250 கோடி கடனை வீடியோகான் நிறுவனத்துக்கு வழங்கிய முறைகேடு நடந்திருப்பதை ஐசிஐசிஐ ஊழியர்களே வெளிக்கொண்டுவந்தனர். மூன்று ஊழியர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இந்த முறைகேடுகளை வெளிக்கொண்ட போதிலும், ஐசிஐசிஐ வங்கி அதைக் கண்டுகொள்ளவில்லை. ஆதாரங்களின் அடிப்படையில் சிபிஐ இதை விசாரித்து, அண்மையில் வழக்கு பதிந்தது.

சிபிஐ விசாரிக்கத் தொடங்கியவுடன் சந்தா கோச்சார் பதவி விலகினார், அதை ஐசிஐசிஐ வங்கி பதவி இன்றி தனித்து வைத்திருப்பதாக அறிவித்தது.   ஐசிஐசிஐ வங்கி மூலம் இந்த முறைகேட்டை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா பணிக்கப்பட்டார். தற்போது நீதிபதியின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ‘நடத்தை விதிகளை மீறி சந்தா கோச்சார் செயல்பட்டார்’ என்றும் வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் அளிக்கும் வங்கி குழுவிலும் இருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாந்தா கோச்சார் ஊழலை விரிவாக படிக்க:
ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !

விசாரணை அறிக்கையின் அடிப்படையில், ஐசிஐசிஐ வங்கி சந்தா கோச்சாரை, பதவி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் முதல் சந்தா பதவிகள் ஏதுவுமின்றி ‘தனித்து’ வைக்கப்பட்டிருந்தார்.  அதோடு, முதன்மை செயல் அதிகாரியாக பதவியேற்ற ஏப்ரல் 2009-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2018 ஆம் ஆண்டு வரை சந்தாவுக்கு அளித்த ஊக்கத்தொகையை திரும்பப் பெறப்போவதாகவும் மருத்துவ உதவி, பங்குகள் உள்ளிட்டவற்றையும் திரும்பப் பெறப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம் எனவும் அறிவித்துள்ளது.

இடமிருந்து: தீபக் கோச்சார், சாந்தா கோச்சார், மற்றும் வேணுகோபால் தூத்.

சிபிஐ விசாரணையின் அடிப்படையில் குற்ற சதி தீட்டுதல் மற்றும் ஏமாற்றுதல் ஆகியவற்றுக்காக சந்தா கோச்சார், அவருடைய கணவர் தீபக் கோச்சார், வீடியோ கான் இயக்குனர் வேணுகோபால் தூத் உள்ளிட்ட ஆறுபேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிந்த தகவல் வெளியான அன்று, இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார்.  அமைச்சகம் அற்ற அமைச்சராக உள்ள அருண் ஜேட்லி, தனது உடல்நலனையும் பொருட்படுத்தாது, ஐசிஐசிஐ – வீடியோகான் ஊழலில் சிக்கியவர்களை காப்பாற்ற சிபிஐ சாகசத்தில் ஈடுபடுவதாகச் சொன்னார். இந்த நிலையில் தன்னுடைய பொறுப்பை கழுவிக்கொள்ள ஐசிஐசிஐ சந்தா கோச்சார் மீது முழுப்பழியையும் தூக்கிப் போட்டுவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்த விசயம், தற்போது ஐசிஐசிஐ-யின் செயல் அதிகாரியாக இருக்கும் சந்தீப் பாஸ்கி – ஐயும் விசாரிக்க வேண்டும் என்கிறது சிபிஐ.

படிக்க:
அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

தனியார் வங்கிகள் ‘மிகச் சிறப்பாக’ செயல்படுவதாக நடுத்தர வர்க்கம் நினைத்துக் கொள்கிறது. குறைந்தபட்ச சேமிப்புக் கணக்கு துவக்கவேண்டுமானால் ரூ. 10 ஆயிரம் வங்கிக் கணக்கில் இருக்கவேண்டும். தவறினால் மாதத்துக்கு 600 ரூபாயை கணக்கிலிருக்கும் பணத்திலிருந்து எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திருடிக்கொள்வார்கள். கந்துவட்டியை விட, தனியார் வங்கிகள் செய்யும் அடாவடிகள் அதிகம். இப்படி மக்கள் ரத்தத்தை உறிஞ்சி, கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்கும் தனியார் வங்கி பெருச்சாளிகளில் ஒரு பெருச்சாளியான சந்தா கோச்சாரின் ஊழல் வெளியே வந்திருக்கிறது.


கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க