அரை பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிப் பழகப் போகிறேன்…
இடம்: ஆலம்பறை கோட்டை தீவு, புதுச்சேரி.
படம்: எழில்
♣ ♣ ♣
சமணர் படுகையின் கீழ் இயற்கை நீரூற்றில் சறுக்கி விளையாடும் சிறுவர்கள்.
இடம்: சமணர் படுகை, கீழ குயில்குடி, மதுரை.
படம்: எழில்
♣ ♣ ♣
கஜா புயலுக்கு குடிசைகளையும் உடைமைகளையும் பறிகொடுத்த போதும், புன்னகையைத் தொலைக்காத சிறுவர்கள்.
இடம்: கருவாக்குறிச்சி, திருவாரூர்.
படம்: வினவு களச்செய்தியாளர்
♣ ♣ ♣
வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும்வரை காத்திருக்க மனமில்லை… இதோ கிளம்பிவிட்டோம் வீதி உலா…
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்
♣ ♣ ♣
தெருவில் ஓடும் மழைநீரில் கப்பல்விட்டு விளையாடிய எங்களை படகில் பயணிக்க வைத்த கேரள மழைவெள்ளம். எதிர்நீச்சல் இன்றி ஏது வாழ்க்கை?
இடம்: செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்
♣ ♣ ♣
துள்ளித் திரிந்த எங்களை நிவாரண முகாமுக்குள் அடக்கினாலும் எங்கள் துள்ளலும் துடிப்பும் என்றும் மாறாது.
இடம் : செங்கனாச்சேரி, கேரளா.
படம்: வினவு களச்செய்தியாளர்
♣ ♣ ♣
ஆலமர விழுதை தாங்கியபடி, ஒர் ஊஞ்சல் பயணம்.
இடம் : செஞ்சிக்கோட்டை, விழுப்புரம்.
படம்: எழில்
♣ ♣ ♣
நண்பேன்டா…
இடம் : பெசன்ட்நகர் கடற்கரை
படம்: எழில்
♣ ♣ ♣
மழலைக்கும் மகிழ்ச்சிக்கும் மொழி ஒரு தடையேயில்லை என்கிறார்களோ இத்தாயும் குழந்தையும்.
இடம் : ஆரோவில், புதுச்சேரி.
படம்: எழில்
♣ ♣ ♣
கடல் அலையின் சாரல் தெறிக்கும் தூரத்தில் எங்கள் வீடுகள். விளையாட கடற்கரை ! வேறு என்ன கவலை ?
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்
♣ ♣ ♣
என்ன போட்டா புடிக்காத… புடுச்சா அழுதுருவேன்…
இடம் : பட்டினம்பாக்கம், சென்னை.
படம்: வினவு புகைப்படச் செய்தியாளர்
♣ ♣ ♣
படிக்க:
♦ நாற்றமெடுக்கும் கும்பமேளா : நாதியில்லாத தூய்மைப் பணியாளர்கள் – நேர்காணல்
♦ உங்களால் தைரியமாக புகைப்படம் எடுத்துத் தர இயலுமா?
தொகுப்பு:
வாசகர் புகைப்படம் பகுதிக்கு புகைப்படம் அனுப்பும் வாசகர்கள், vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள். கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!