
உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 4
இந்த ரீதியில் மாலை வரை அவன் முன்னே சென்றான். அலெக்ஸேயின் பின்புறம் எங்கோ அஸ்தமிக்கும் சூரியனின் வெப்பமற்ற மாலைச் செங்கதிர் பைன் மர முடிகள் மீது தழல் ஒளி வீசின. காட்டில் மங்கலின் சாம்பல் நிறம் மேலும் அடரலாயிற்று. அந்த வேளையில், பாதைக்கு அருகே, ஜூனிப்பர் புதர்கள் மண்டிய பள்ளத்தாக்கில் அலெக்ஸேயிக்குப் புலனாயிற்று ஒரு காட்சி. அது அவனுடைய முடி சிலிர்த்தது.
இங்கே, பக்கத்தில் எங்கோ சண்டை நடந்திருந்தது. ஜுனிப்பர் புதர் அடர்ந்த பள்ளத்தாக்கில் மருத்துவப் பாசறை இருந்திருக்க வேண்டும். காயமடைந்தவர்கள் இங்கு எடுத்துவரப் பட்டு ஊசியிலைத் தலையணைகள் மீது கிடத்தப்பட்டார்கள். புதர்ப் பந்தர்களுக்கு இடையில் முன்போலவே வரிசைகளாகப் படுத்திருந்தார்கள் அவர்கள். வெண்பனியால் பாதி மூடப்பட்டும் எங்கும் வெண்பனி தூவப்பட்டும் காட்சியளித்தார்கள். அவர்கள் இறந்தது காயங்களினால் அல்ல என்பது முதல் பார்வையிலிருந்தே தெளிவாகத் தெரிந்தது. லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள். இந்தப் பயங்கரக் காட்சியின் மர்மம் உடனேயே துலங்கிவிட்டது. ஒரு பைன் மரத்தின் அடியில், வெண்பணி மூடியிருந்த சோவியத் படை வீரனது உடல் அருகே , அவனுடைய தலையைத் தன் மடி மீது வைத்தவாறு இடுப்புவரை பனியில் புதைந்து உட்கார்ந்திருந்தாள் ஒரு மருத்துவத்தாதி. சிறிய, நொய்ந்த இளம் பெண் அவள். காதுகளை மூடும் மென்மயிர்த் தோல் தொப்பியின் நாடாக்களை மோவாயின் அடியில் கட்டிக் கொண்டிருந்தாள். அவளுடைய தோள் பட்டைகளுக்கு நடுவே துருத்திக் கொண்டிருந்த மெருகினால் பளபளக்கும் கத்திப்பிடி.
லாவகமான கத்தி வீச்சால் எவனோ அவர்கள் அனைவரது குரல்வளையும் அறுத்துத் துண்டித்திருந்தான். தங்களுக்குப்பின்னே என்ன நடக்கிறது என்று பார்க்க முயல்பவர்கள் போலத் தலைகள் வெகு தூரம் பின் சாய்த்தவாறு ஒரே பாங்கில் கிடந்தார்கள்.
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள். கறுப்புச் சீருடை அணிந்த பாசிஸ்டு காயமடைந்தவர்களைத் தன் கத்தியால் அறுத்துக் கொன்றான், மருத்துவத் தாதியின் முதுகில் குத்தினான், அவனால் கொல்லப்படாத ஒருவன் அக்கணமே அவனைப் பிடித்து, அணையும் தறுவாயிலிருந்த தன் உயிரின் எஞ்சிய வலியை எல்லாம் திரட்டி, பகைவனின் குரல்வளையை நெரித்திருந்த விரல்களில் செலுத்தினான் என்பதை எல்லாம் அலெக்ஸேய் உடனே புரிந்துக்கொன்டான்.
காயமுற்ற வீரனைத் தன் உடலால் அரவணைத்துக் காக்கும் நொய்ந்த இளம்பெண்ணையும், அகன்ற முழங்கால் முடிகள் கொண்ட பழைய கித்தான் பூட்சுகள் அணிந்த அவனுடைய கால்களின் அருகே ஒருவரையொருவர் இறுகப் பற்றியவாறு கிடந்த கொலைகாரன், பழி தீர்ப்பவன் ஆகிய இவ்விருவரையும் வெண்பனிப்புயல் அதே நிலையில் அடக்கம் செய்துவிட்டிருந்தது. மெரேஸ்யெவ் சில வினாடிகள் பிரமித்துப் போய் நின்றான். அப்புறம் மருத்துவத்தாதியின் அருகே தத்திச் சென்று அவள் உடலிலிருந்து கத்தியை உருவினான். அது எஸ்.எஸ். படையினருக்குரிய கத்தி. பண்டைய ஜெர்மானிய வாளின் வடிவில் செய்யப்பட்டிருந்தது. அதன் கருங்காலிக் கைப்பிடியில் எஸ்.எஸ். படையின் சின்னம் வெள்ளியால் பொறிக்கப்பட்டிருந்தது. து றுவேறிய அலகில் Alles fur Deutch land (எல்லாம் ஜெர்மனிக்கே) என்ற இந்த வாசகம் இன்னும் தெளிவாயிருந்தது. அலெக்ஸேய் வெண்பனியைத் தோண்டி முடமுடத்ததுப் பனிக்கட்டி படிந்திருந்த கூடாரத்துணியை எடுத்து மருத்துவத்தாதியின் உடலை அதனால் கவனத்துடன் போர்த்தி அதற்கு மேல் சில பைன் மரக்கிளைகளை வைத்தான்…
எஸ்.எஸ் படையின் கறுப்புச் சீருடையை அணிந்த ஒரு பாசிஸ்டும், தலையில் இரத்தக் கறைபடிந்த பட்டித் துணிக்கட்டு போட்டிருந்த ருஷ்யப் படை வீரனும் ஒருவர் குரல்வளையை ஒருவர் பற்றி நெறித்தவாறு இறுதியான மரணப் போராட்ட நிலையில் உறைந்து கிடந்தார்கள்.
இதை எல்லாம் அவன் செய்வதற்குள் இருட்டாகிவிட்டது. மேற்கே அந்தியொளி மரங்களுக்கிடையே மறைந்தது. குளிர் நிறைந்த அடர் இருள் பள்ளத்தாக்கில் சூழ்ந்தது.
வோல்காப் பிரதேச ஸ்தெப்பியில் உள்ள கமிஷின் என்னும் இடத்தில் பிறந்த நகரவாசி அலெக்ஸேய், காட்டு விவகாரங்களுக்குப் பழக்கப்படாதவன். எனவே, இரவு தங்க இடவசதி செய்து கொள்வதையையும் நெருப்பு மூட்டுவதையும் பற்றி அவன் உரிய நேரத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை. இப்போதோ காரிருள் சூழ்ந்துவிட்டது. அடிபட்டு நொறுங்கிய அவன் பாதங்கள் உழைத்துச் சோர்ந்து தாங்க முடியாதபடி வலித்தன. இந்த நிலையில் விறகுத்தேடச் செல்வதற்கு அவனுக்கு இயலவில்லை. பைன் மரக்கன்றுகள் அடர்ந்தப் புதருக்குள் நுழைந்து, மரத்தின் அடியில் குந்தி, கைகளால் முட்டைகட்டிக் கொண்டு, முழங்கால்களில் முகத்தை புதைத்தவாறு உருண்டைப் போல முடங்கிவிட்டான். தனது மூக்கினால் வெப்பம் ஊட்டப்பட்டு, தொடங்கிய இயக்கமற்ற நிம்மதியை ஆர்வத்துடன் அனுபவித்தவாறு அசைவற்றிருந்தான்.
ரிவால்வர் சுடுவதற்குத் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஆனால் காட்டில் கழித்த அந்த முதல் இரவில் அலெக்ஸேயால் அதைக் கையாள முடிந்திருக்குமா என்பது சந்தேகந்தான். கற்சிலை போன்று அசைவின்றி உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் அவன். பார்வை புகமுடியாத அடர் இருள் அவனைச் சுற்றி நெருக்கமாகக் குவிந்திருந்து. பைன் மரங்களின் ஒரு சீரான ஓசை, பாதைக்கு அருகே எங்கோ முனகிக் கொண்டிருந்த கோட்டானின் கத்தல், தொலைவில் ஓநாய்கள் இட்ட ஊளை ஆகியவை போன்ற, காட்டுக்கு இயல்பான ஒலிகள் அதில் நிறைந்திருந்தன. இவ்வொலிகளில் எதையுமே அலெக்ஸேய் கேட்கவில்லை.
ஆனால் காலையில், ஏதோ அதிர்ச்சியில் போல அவன் சட்டென விழித்துக்கொண்டான். சாம்பல் நிற வைகறை அப்போது தான் புலரத் தொடங்கியிருந்தது. அருகிலிருந்த மரங்கள் மட்டுமே குளிர்காலப் பனிமூட்டத்திலிருந்து தெளிவற்ற நிழலுருக்களாக வெளித்திருந்தன. அலெக்ஸேய் விழித்ததும் தனக்கு நேர்ந்ததையும் தான் இருக்கும் இடத்தையும் நினைவுப்படுத்திக் கொண்டான். காட்டில் தான் உரிய கவனமின்றிக் கழித்த இரவை அப்போது எண்ணித் திகிலடைந்தான். ஈரக்குளிர் அவனது விமானி உடையின் “பேய்த் தோலையும்” மென் மயிரையும் துளைத்துக்கொண்டு எலும்புகள் வரை ஊடுருவி விட்டது. உடம்பு கட்டிலடங்காமல் விடவிடத்தது. ஆனால் எல்லாவற்றிலும் கோரமாக இருந்தன கால்கள். இப்போது, வெறுமே இருக்கையில் கூட, அவை முன்னிலும் கடுமையாக வலித்தன. எழுந்திருக்க வேண்டும் என்று எண்ணியபோது அவனுக்கு பகீர் என்றது. ஆனால் முந்தின நாள் பூட்சுக்களைக் கழற்றியது போன்றே திட உறுதியுடன் சடக்கென எழுந்து நின்றான் அவன். நேரம் விலைமிக்கதாக இருந்தது.
படிக்க:
♦ பொள்ளாச்சி பாலியல் வன்முறை :
250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?
♦ உலகை அணு ஆயுதப் போர் அபாயத்தில் தள்ளும் வல்லரசுகள் !
அலெக்ஸேயைப் பீடித்திருந்த எல்லாத் துன்பங்களுடனும் சேர்ந்து கொண்டது பசி. முந்தைய நாள் கூடாரத் துணியால் மருத்துவத்தாதியின் உடலைப் போர்த்து மூடும் போதே அவளருகே செஞ்சிலுவை அடையாளமிட்ட தார்ச் சீலைப் பையை அவன் கவனித்திருந்தான். ஏதோ ஒரு விலங்கு ஏற்கனவே அங்கே மணியம் பண்ணியிருந்தது. கறவிய துளைகளின் அருகில் வெண்பனி மேல் துணுக்குகள் சிதறிக்கிடந்தன. முந்தின நாள் அலெக்ஸேய் இதை அனேகமாகக் கவனிக்கவில்லை. இன்று அவன் அந்தப் பையை எடுத்தான். அதில் சில போர்க்கள முதலுதவிப் பாக்கெட்டுகளும் பதனிட்ட இறைச்சி டப்பா ஒன்றும் இருந்தன. ரொட்டியோ ரஸ்க்குகளோ பையில் இருந்ததாகத் தோன்றியது. ஆனால் பறவைகளோ விலங்குகளோ அந்த உணவைத் தின்று தீர்த்துவிட்டன. டப்பாவையையும் மருந்துப் பட்டித் துணிகளையும் விமானி உடையின் பைகளில் திணித்துக் கொண்டான். இளம்பெண்ணின் கால்களிலிருந்து காற்றால் பரத்தி ஒதுக்கப்பட்டிருந்த கூடாரத் துணியைச் சரிப்படுத்தினான். மரக்கிளைகளின் வலைப்பின்னலுக்குப் பின்னே இளஞ்சிவப்பாக ஒளிர்ந்த கிழக்கு திசையில் மெதுவாக நகரலானான்.
அவனிடம் இப்போது ஒரு கிலோ கிராம் பதனிட்ட இறைச்சி கொண்ட டப்பி இருந்தது. நாள்தோறும் ஒரு முறை, நடுப்பகலில் சாப்பிடுவது என்று அவன் தீர்மானித்தான்.
(தொடரும்)
முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை